வாக்கர் பயன்படுத்தினால் குழந்தைக்கு இந்த வளர்ச்சிகள் கிடைக்காமல் போகலாம்..!

வாக்கர் பயன்படுத்தினால் குழந்தைக்கு இந்த வளர்ச்சிகள் கிடைக்காமல் போகலாம்..!

உலகில் அதிகமாக குழந்தைக்கு பரிசளிக்கப்படும் வகைகளில் வாக்கரும் ஒன்று. இந்த வாக்கரை வாங்கும் முன், இது குழந்தைகளுக்கு அவசியம் தானா என ஒருமுறை சிந்தித்த பின் செயல்படுங்கள். என் குழந்தைக்கு எல்லாமே கிடைக்கணும் என்ற எண்ணத்தில் பல பெற்றோர் இருக்கின்றனர்; தவறில்லை... ஆனால், ஆரோக்கியமானது, நல்லது கிடைக்கிறதா எனச் சிந்தியுங்கள். வாக்கரில் குழந்தையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்துவிடுவதோடு முடிந்துவிடும் காரியம் அல்ல. அத்தகைய வாக்கரால் உங்களது குழந்தைக்கு நன்மை உண்டாகிறதா என ஆழ்ந்து சிந்திப்பதே முக்கியம். பலவித பொம்மைகள், பல வித குழந்தை தொடர்பான பொருட்கள் தற்போது சந்தையில் விற்கப்படுகின்றன. நன்கு, ஆழ்ந்து யோசித்தால் அனைத்துப் பொருட்களிலும் சில பொருட்கள் மட்டுமே குழந்தைக்கு அவசியமானது. பல பொருட்கள் தேவையே இல்லாதது. இந்தப் பதிவில் வாக்கர் குழந்தைக்கு நன்மையா… அதற்கு மாற்று என்ன என்பதைப் பார்க்கலாம்.

வாக்கர் குழந்தைக்கு அவசியமா?

11-ம் மாதத்தில் இருந்து குழந்தை நடை பழக ஆரம்பிக்கும். தற்போது 7 அல்லது 8-ம் மாதத்திலே பெற்றோர் அல்லது பெரியவர்கள் குழந்தைக்கு வாக்கர் வாங்கி தந்து விடுகிறார்கள். இது தவறான பழக்கம். மைல்கற்கள் என்ற வளர்ச்சி நிலை இருக்கிறது. அதாவது, குழந்தைக்கு தலை நிற்பது, உட்காருவது, தவழுவது, நடப்பது போன்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தையின் வளர்ச்சி நிலைகள் அமைந்து இருக்கும். வாக்கரை பயன்படுத்தினால், உட்காரும் பருவத்திலிருந்து நேரடியாக நடக்கும் பருவத்துக்கு குழந்தை பழகிவிடும். தவழுவதோ தவழும் பருவத்தில் உள்ள வளர்ச்சி நிலைகள் குழந்தைகளுக்கு இல்லாமல் போகும் ஆபத்து இருக்கிறது. இதுபோன்ற பருவத்தை குழந்தை தவறவிட்டால் பிற்காலத்தில் படிப்பின் ஆர்வமோ, கற்பனை திறனோ, படைப்பாற்றல் திறனோ அக்குழந்தைக்கு இல்லாமல் போகலாம். குழந்தையின் ஒவ்வொரு பருவத்துக்கும், அதன் வளர்ச்சி நிலைக்கும். இதை சார்ந்த உடல், மனம், திறன் வளர்ச்சிக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. தவழாத குழந்தை அறிவில் சிறப்பாக விளங்குவது கடினம். அறிவு சார்ந்த விஷயங்களில் திறன் குறைவாக காணப்படும். is it safe to use baby walker Image Source : Target
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
நடைப்பழக வேண்டுமென்றால், குழந்தையே பெற்றோர் கை பிடித்து, சுவர் பிடித்து, இருக்கும் பொருட்களைப் பிடித்து தத்தி தத்தி நடக்கும் அல்லவா… அதுதான் ஆரோக்கியம். அதுதான் அழகும்கூட. குழந்தை மருத்துவ ஆய்வாளர்களும் பல மருத்துவர்களும், 'குழந்தைகளுக்கு வாக்கர் வாங்கித் தராதீர்கள்’ என்றே கூறுகிறார்கள். குழந்தை சரியாக நடப்பதற்கு தசை வலுவை, இடுப்பு வலுவைப் பெறுவதற்கு முன்னரே, அனைத்துப் பக்கங்களையும் தாங்கிக்கொள்ளும் வாக்கர் வாகனம் உண்மையில் குழந்தையின் இயல்பான நடைத்திறனைத் தாமதப்படுத்துமாம். குழந்தை வாக்கரில் உட்கார்ந்தால், ஒரு நொடிக்கு 3 முறை அடியெடுத்து வைக்கும். ஏனெனில் வாக்கரில் உள்ள சக்கரத்தின் வேகம்தான் காரணம். இதனால், குழந்தையின் மூளை கட்டுப்பாடு மீறி செயல்படுகிறது. இதையும் படிக்க: ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்... மூளையும் உடல் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளது. குழந்தைகள் தானே நடக்க பழகும்போது, மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சி அடையும். வாக்கரில் குழந்தை நடந்தால், மூளைக்கும் உடல் இயக்கங்களுக்கு ஒருங்கிணைப்பு இருக்காது. மூளைக்கு கட்டுப்பாடு இருக்காது. வாக்கரில் குழந்தைகள் நடப்பதைவிட சக்கரங்கள் மூலமாக அதிகமாக ஓடவே செய்கிறார்கள். ஒவ்வொரு அடியாக நடந்து பழகும் பழக்கமே மறைந்து விடுகிறது. வாக்கரில் பழகிய குழந்தையை கீழே எடுத்து நடக்கவிட்டால் வேகமாக கால் அசைவுகளை வைக்கும். கீழே விழுந்து விடவும் செய்கிறது. அங்கே இங்கே ஓடும் குழந்தையை பார்த்துக்கொள்வது கடினம் என்று, வாக்கர் வாகனத்தில், ‘குழந்தைகள் இருக்கட்டும்’ எனச் சில பெற்றோர் விட்டு விடுகின்றனர். இதுவும் குழந்தைகளின் அதிதீவிர வேக அசைவுகளுக்கு கொண்டு செல்கிறது. குழந்தையின் இயல்பை வெகுவாக பாதிக்கிறது. மிக விரைவில் குழந்தை சோர்வடைகிறது. குழந்தை தானாக நடந்து பழகினால், கீழே விழுவார்கள். மீண்டும் எழுந்து நிற்பார்கள். பின்னர் நடப்பார்கள். இதுதான் சரியான முறை மற்றும் சிறந்த பயிற்சியும்கூட. மெல்ல மெல்ல, தத்தித் தத்தி நடந்து பழகி கொள்வார்கள். வாக்கரை பயன்படுத்தினால் இந்த வாய்ப்பெல்லாம் நிகழாமல் போகிறது. வாக்கரில் பழகிய குழந்தை, பயம், தடுமாற்றத்துடன் நடக்க சிரமப்படுகிறது. அதிக வேகம், 4 பக்கமும் சப்போர்ட் என வேகமாக ஓடும் முறை வாக்கர். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பாதுகாப்பானது அல்ல. மூளையின் உடல் இயக்கங்களின் ஒருங்கிணைப்பையே மாற்றிவிடும். சமதளம் இல்லாத தரையில் குழந்தை வேகமாக வாக்கரில் சென்று அடிபடும் ஆபத்துகள் அதிகம். படிகட்டுகள், ஒரு அறையில் தரை உயரத்தில் இருக்கலாம். அடுத்த அறையில் உயரம் குறைவுடன் இருக்கலாம். இது போன்ற இடங்களில் குழந்தை தவறி விழ வாய்ப்புகள் அதிகம். floor time என்று சொல்வார்கள். தரையில் தவழ்ந்து, உட்கார்ந்து, கவிழ்ந்து படுத்து போன்ற பல்வேறு செயல்களை தரையில்தான் குழந்தைகள் செய்ய வேண்டும். அதுதான் சரியான வளர்ச்சி. தரையில் அல்லாமல் வாக்கரில் குழந்தை அதிகமாக இருந்தால் இந்த வளர்ச்சி தடைப்படும். இதையும் படிக்க: துணி வகை டயாப்பர்… பயன்படுத்தும் முறைகள் மற்றும் டிப்ஸ்...

நடை பழக நடை வண்டி நல்லதா?

நம் பெற்றோர் நமக்கு வாங்கி தந்த நடைவண்டிதான் சிறந்தது. அன்றும் இன்றும் என்றும் பாதுகாப்பான ஒரு விஷயமாக கருதப்படுவது நம் ஊர் நடைவண்டி கைகள் மட்டும் ஊன்றிப் பிடித்து நடை பயிலும் அந்தக் கால நடை வண்டிக்கு இப்போதைய வாக்கர் இணையாகாது. ஆனால், பாரம்பர்யமாக நாம் பயன்படுத்திவரும் நடைவண்டி அப்படி அல்ல. பக்கவாட்டுப் பிடி இல்லாததால் நடைக்கான தசைப்பயிற்சியை, இடுப்பு மற்றும் கால் தசைக்கு ஏற்றவாறு பயிற்சி தந்து நடையைச் செம்மையாக்கும். குழந்தைக்கு போதுமான வலு கிடைத்தபின், குழந்தை சீராக நடக்க உதவி புரியும். உளவியல் ரீதியாக மெதுவான, மிதமான வேகம் குழந்தைக்கு ஏற்றது. இதைத் தருவது நம் ஊர் நடை வண்டி.   is it safe to use walker Image Source : India connects

நடை வண்டியை எங்கு வாங்கலாம்?

அருகில் உள்ள மர சாமான் கடைகளில், நடை வண்டி செய்ய சொல்லி குழந்தைக்கு வாங்கி கொடுங்கள். நடை வண்டி விற்கும் இடங்களில் சென்று வாங்கி கொள்ளலாம். நகர்புற மக்கள், கொஞ்சம் ஊர் பக்கம் உள்ள சொந்தங்களிடம் சொல்லி வைத்தால் நடை வண்டி கிடைக்கும். மரத்தால் செய்த நடைவண்டிதான் நல்லது; சிறந்தது. பிளாஸ்டிக்கால் செய்து இருந்தால் அதை வாங்க வேண்டாம். குழந்தையின் எடையை பிளாஸ்டிக் நடைவண்டி தாங்காது. தற்போது பல பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். ஆகையால், நடைவண்டி கிடைப்பது அவ்வளவு சிரமம் அல்ல. தேடினால் கிடைக்கும். தேடாவிட்டாலும் நீங்களே உங்கள் குழந்தைக்காக மரவேளை செய்யும் தொழிலாளர்களிடம் ஆர்டர் செய்து வாங்கி தரலாம். இதையும் படிக்க: கொசுக்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? இயற்கை விரட்டிகளால் முடியுமா? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null