குழந்தைகளின் கண்களில் மை வைக்கலாமா? பாதுகாப்பானதா?

குழந்தைகளின் கண்களில் மை வைக்கலாமா? பாதுகாப்பானதா?

கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைக்கு கண்களில் மை இடுவது சரியா? மை இடுவதன் பெயராக காஜல், கண் மை, சுருமா எனப் பல பெயர்கள் இதற்கு உள்ளன. இந்தியாவில் மை இடும் பழக்கம் போல எகிப்து போன்ற நாடுகளிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. விளக்கெண்ணெய், நெய் போன்ற எண்ணெய்களால் கண் மை தயாரிக்கப்படுகிறது.

பாரம்பர்யமாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கை காரணமாக கண் மையைப் பல குழந்தைகளுக்கு தன் பெற்றோர் இடுகின்றனர். இது பாதுகாப்பானதா?

கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா?

குழந்தைக்கு கண்களில் மை இடலாமா எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏன் கண் மையைக் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்?

குழந்தையின் கண்கள் இன்னும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கின்றனர்.

தொற்றுகள், சூரிய கதிர்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையாலும் சிலர் மை இடுகின்றனர்.

குழந்தைக்கு கண் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காகவும் மை வைக்கின்றனர்.

Kajal

Image Source : Youtube

இதையும் படிக்க: குழந்தையின் சருமத்தை மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றும் குளியல் பொடி

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

ஏன் குழந்தையின் கண்களில் மை வைக்க கூடாது?

கடைகளில் விற்க கூடிய கண் மையில் அதிக அளவு லெட் இருக்கிறது. இதனால் குழந்தையின் கண்களில் மை இட்டால், அதிக அளவு லெட்டின் தாக்கத்தால் மூளை, மற்ற உறுப்புகள், எலும்பு மஞ்சை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தசோகை, குறைந்த ஐ.கியூ போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.

சில குழந்தைகளுக்கு கண் மை வைப்பதால் அரிப்பு, கண்களில் நீர் வழிதல், மற்ற அலர்ஜிகளும் வரலாம்.

குழந்தையை குளிக்க வைக்கும்போது சின்ன, குறுகிய துளைகளின் வழியாக மையில் உள்ள கெமிக்கல்கள் சென்று கண், மூக்கு போன்ற இடங்களில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்.

கண் மை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மிகவும் ரசாயனத்தன்மை கொண்டதாக இருக்கலாம்.

மேலும், உங்கள் விரல்களில் உள்ள தூசு, அழுக்கு, நகங்கள் மூலமாக குழந்தைக்கு பாதிப்பும் ஏற்படலாம்.

உங்கள் கை விரலில் உள்ள அழுக்கு, தொற்று மூலமாக கிருமிகள் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் உடல்நிலையைப் பாதிப்படைய செய்யும்.

மாற்று வழிகள் என்னென்ன?

சின்ன மார்க் போல அல்லது சிறிய பொட்டு போல கண்களுக்கும் தலைமுடிக்கும் இடையே உள்ள நெற்றியின் ஓரத்தில் பொட்டு போல வைக்கலாம்.

கண் திருஷ்டி, தீய சக்தி ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்தால் குழந்தையின் பாதத்தில் சின்ன பொட்டு போல மையை வைக்கலாம்.

கடைகளில் மை வாங்கும் முன், அது எவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என செக் செய்து கொள்ளுங்கள்.

ஆர்கானிக் மையாக வாங்குவது நல்லது.

வெளியில் விற்பது பாதுகாப்பானது அல்ல என நினைத்தால் வீட்டிலே கண் மையை தயாரித்துக் கொள்ளலாம்.

கண் மையை வீட்டிலே தயாரிப்பது எப்படி?

வெள்ளையான முஸ்லின் துணியை எடுத்து சந்தன குழைச்சலில் ஊற வைக்கவும்.

சுத்தமான, ஒரிஜினல் சந்தனத்தில் துணியை ஊற வைக்க வேண்டும்.

இதை நிழலில் அப்படியே உலர்த்துங்கள்.

இதைப் பகல் வேளையில் செய்ய வேண்டும்.

மாலையில் இந்த துணியை சின்ன திரி போல செய்து, மண் விளக்கில் வைக்கலாம்.

மண் விளக்கில் விளக்கெண்ணெயை ஊற்றி வைக்கவும்.

பூண்டின் சாறு தடவிய பித்தளை தட்டை விளக்குப்படுவது போல சரியான இடைவேளி விட்டு எரிய விடுங்கள்.

விளக்கின் சுடர் தட்டின் மீது படியும் படி, தட்டை இரண்டு டிபன் பாக்ஸின் மேல் வைத்து, விளக்கை நடுவில் வைத்து இரவு முழுக்க எரிய விடலாம்.

மறுநாள் காலை, பித்தளை தட்டின் மீது படிந்த கார்பன் பவுடரை எடுத்து, சுத்தமான டப்பாவில் சேகரிக்கவும். அதில் நெய் கலந்து குழைத்துக் கொள்ளவும்.

homemade kajal

Image Source : Wise she

இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?

அவ்வளவுதான். வீட்டிலே பாதுகாப்பான ஆரோக்கியமான கண் மை தயார்.

இதை தினந்தோறும் செய்து கொண்டால் இதனின் மருத்துவ பலன்கள் அதிகமாக கிடைக்கும். இதை சேகரிக்க நினைத்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்துங்கள்.

கடையில் வாங்கும் கண் மையை முடிந்த அளவுக்கு குழந்தைக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

வீட்டிலே நீங்களே கண் மை தயாரித்துப் பயன்படுத்துங்கள்.

குழந்தைகளின் கண்களைப் பாதுகாப்பாகப் பராமரியுங்கள்.

கண்களில் எந்த மையும் இடாமல் நெற்றியின் ஒரு ஓரத்தில் வைத்தால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null