கருத்தரித்தல்: செயற்கை முறை சிகிச்சையில் உள்ள அபாயங்கள் என்னென்ன?!

கருத்தரித்தல்: செயற்கை முறை சிகிச்சையில் உள்ள அபாயங்கள் என்னென்ன?!

இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்களுக்கு இந்த IVF செயற்கை கருத்தரித்தல் முறை பயனுள்ளதாக இருக்கிறது. எனினும் இதிலும் சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

 

IVF செயற்கை கருத்தரித்தல் முறை இன்றைய மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றது. இதனால் பல தம்பதிகள் நல்ல பலன் பெற்றுள்ளனர். இந்த சிகிச்சை முறையின் உதவியோடு நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பல தம்பதியினர் இன்று குழந்தை பாக்கியம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இது உலகளவில் நல்ல பலனளிக்கக்கூடிய சிகிச்சையாகவும் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

 

பல நல்ல விஷயங்கள் இந்த செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் இருந்தாலும் கூட இதிலும் சில பிரச்சனைகள் (Karutharithal seyarkai murai sikichayil ulla prachanaigal) ஏற்பட சில வாய்ப்புகள் உள்ளன. அதனைத் தெரிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

 

செயற்கை கருத்தரித்தல் (IVF) என்றால் என்ன?

 

இந்த IVF செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை தம்பதிகளிடையே கருவுறுவதில் அல்லது குழந்தை பிறப்பதில் பிரச்சனைகள் இருந்தால் அதனைச் சரி செய்யப் பெரிய அளவில் உதவுகிறது.

இந்த சிகிச்சையின் போது வளர்ச்சி அடைந்த பெண்ணினது கரு முட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. பின் கரு முட்டையானது பரிசோதனைக் கூடத்தில் ஆணின் விந்தணுக்களின் மூலம் கருத்தரிக்கப் படுகிறது, அதன் பின் கருத்தரித்த முட்டை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைக்கப் படுகிறது. இதற்கு இரண்டு வாரங்கள் ஆகலாம்.

 

இந்த செயற்கை கருத்தரிக்கும் முறை நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கிறது. எனினும், விரைவாகக் கருத்தரிக்கும் வாய்ப்பு சில குறிப்பிட்ட காரணிகளைப் பொறுத்தே உள்ளது என்பதும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய உண்மை. அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

 

 

மேலும் இந்த IVF சிகிச்சை முறையை மேற்கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்ற புரிதல் தம்பதிகளுக்கு அவசியம். இது சற்று விலை உயர்ந்த சிகிச்சை முறையாகவும் இருக்கிறது. அதனால் சாமானிய மக்களால் இதைப் பயன் படுத்த முடியாமல் போகும் சூழலும் நிலவி வருகிறது. மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை கருத்தரிக்கும் சாத்தியக் கூறுகள் இந்த சிகிச்சை முறையில் உள்ளது என்பதும் அதிக நம்பிக்கையளிக்கும் ஒன்று.

 

இந்த IVF சிகிச்சையைத் தம்பதிகள் தேர்ந்தெடுக்கும் முன் இந்த சிகிச்சை முறையால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஏற்பட உள்ள பிரச்சனைகள் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் கேட்டு நன்கு தெரிந்து கொள்வது முக்கியம். கவனத்தோடு இந்த சிகிச்சையைச் செய்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் பெரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 

செயற்கை கருத்தரித்தலால் ஏற்படும் பிரச்சனைகள்

இந்த சிகிச்சை முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன் இதைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக இதனால் உங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், இது எவ்வளவு நற்பலன்களைத் தரும் அல்லது தராது என்பதை புரிந்து கொள்ளலாம்.

 

உங்களுக்கு இந்த சிகிச்சை முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள, மேலும் இதில் ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் அறிந்து கொள்ள இங்கே சில குறிப்புகள் பின்வருமாறு.

 

மருந்துகளின் தாக்கம்

இந்த IVF முறையில் கருவுற உங்களுக்குத் தரப்படும் மருந்துகளின் அளவு சற்று அதிகமாக இருக்கும். உங்களுக்கு இந்த சிகிச்சை செய்வதற்கு முன் மாதவிடாய் சரியாக ஏற்படக் கொடுக்கப்படும் மருந்து பல உபாதைகளை உங்களுக்குத் தரக் கூடும். குறிப்பாகத் தலைவலி, உடலில் வெப்பம் அதிகரிப்பது, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மற்றும் மன நிலையில் அதிக மாற்றம் ஏற்படுவது என்று பல பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் பொதுவானது என்றாலும், சிலருக்கு இது மோசமான அளவிற்கு அதிகரிக்கக் கூடும். இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.

 

கருச்சிதைவு

 

கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த செயற்கை கருத்தரிக்கும் சிகிச்சை முறையில் சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும், செய்த செலவுகளும் சில சமயம் வீணாக வாய்ப்பு உள்ளது.

 

குறைப் பிரசவம்

 

குறைப் பிரசவத்தில் குழந்தை பிறப்பது மற்றும் குழந்தை மிகக் குறைவான எடையோடு பிறப்பது போன்ற பல பிரச்சனைகளும் ஏற்படக் கூடும். இது பெரிதும் குழந்தையைப் பாதிக்கக் கூடும்.குழந்தை பிறக்கும் போது சரியான எடையில் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே காணப்படும்.

 

ஒன்றிற்கும் மேற்பட்ட கரு

ஒன்றிற்கும் மேற்பட்ட கரு வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் இரட்டைக் குழந்கைளோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளோ பிறக்கும் நிலை உள்ளது. சில தம்பதிகள் இந்த IVF முறையை வரப்பிரசாதமாகப் பார்க்கின்றனர். ஆனால் பலர் இதனைச் சிக்கலாகவே கருதுகின்றனர். ஏனென்றால் இது மாதிரியான சூழலில் பிரசவத்தில் சிக்கல் ஏற்படாமல் இருக்கப் பல முன்னெச்சரிக்கைகளையும், பாதுகாப்புகளையும் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளன. சில சமயங்களில் எல்லா முயற்சிகளையும் தாண்டி தாய் மற்றும் கருவில் இருக்கும் சிசு உள்ளிட்ட அனைவருக்கும் மோசமான பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 

கருப்பை உயர் இரத்த அழுத்தம்

கருப்பை உயர் இரத்த அழுத்தம் நோய்க்குறி (OHSS – Ovarian hyperstimulation syndrome) ஏற்பட சாத்தியம் உள்ளது. இது ஒரு ஆபத்தான பின் விளைவாகும். இது அரிதாக சில பெண்களிடம் ஏற்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் உங்களுக்குக் கருவுற மருந்துகள் அதிகம் கொடுக்கப்படுவதால் வயிற்று வலி ஏற்படுவது, சிறுநீர் போக்கு குறைவது, மூச்சு அதிகம் வாங்குவது, மயக்கம், அதிகப்படியான வயிற்று வலி, அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

 

மன உளைச்சல்

 

இது மட்டுமல்லாது, இந்த சிகிச்சை முறையால் கருவுறும் பெண் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. இதனால் மனதளவில் பெரிய பாதிப்பும் அடைய வாய்ப்பு உள்ளது. இதற்கு சமூகமும் மிக முக்கிய காரணியாக உள்ளது. இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள மன தைரியமும், தன்னம்பிக்கையும் அவசியம்.

 

மலச்சிக்கல் மற்றும் பிற பிரச்சனை

 

இந்த பிரச்சனைகள் மட்டுமல்லாமல் கருவுறும் பெண்களுக்கு மலச் சிக்கல், மார்பகத்தில் பிரச்சனை, வயிற்று வலி, திரவம் வெளியேறுவது, உணவு ஜீரணமாவதில் பிரச்சனை போன்ற பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

 

விலை அதிகம்

இவை எல்லாவற்றுக்கு மேலாக, இந்த IVF சிகிச்சை முறை அதிகம் விலை உயர்ந்ததாக உள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் முன் தம்பதிகள் ஒன்றுக்கு பல முறை யோசித்து கொள்வது அவசியம். இந்த சிகிச்சையின் மூலம் வெற்றி கிடைக்க அநேக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் சில சமயம் இந்த சிகிச்சை தோல்வியைத் தழுவிப் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. இவ்வாறு அனைத்து முயற்சிகளுக்குப் பின் சிகிச்சை பலனளிக்காமல் போகும் சூழலில் தம்பதிகளுக்குப் பொருள் ரீதியான நட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

இடம் மாறிய கர்ப்பம்

 

இதில் கரு கர்ப்பப்பையில் வளர்ச்சி அடையாமல் இடம் மாறிக் கர்ப்பப்பை கருக் குழாயில் வளர்ச்சி அடையத் தொடங்கவிடும். இதனால் குழந்தை சரியாக வளர்ச்சி அடையாது. தாய்க்குக் கருவுறும் காலத்தில் இயல்பாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை விட இந்த சூழலில் அதிக மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த போக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை முறையில் உள்ள பல்வேறு சிக்கல்களைப் பற்றி அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதனால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் முன் நல்ல மருத்துவரை அணுகி, போதுமான ஆலோசனை பெற்று, உங்கள் உடல் இந்த சிகிச்சைக்கு எந்த அளவு ஒத்துழைக்கும் என்பதையும் புரிந்து கொண்டு, அதன் பின் செயல்படத் தொடங்குவது நல்லது.

 

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null