பகீர் கிளப்பும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்! அறிகுறிகள் & தடுக்க...

பகீர் கிளப்பும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்! அறிகுறிகள் & தடுக்க...

தமிழகம் முழுவதும் மழைபெய்ய துவங்கிவிட்ட நிலையில், பொது சுகாதாரத் துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தமிழகத்தில் பரவிவிடாமல் தடுக்க நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன. இந்த வகை ஜப்பான் நாட்டில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதிலும் குறிப்பாக 15 வயதுக்கு உற்பட்ட சிறுவர்களைத் தாக்கி, உயிருக்கே ஆபத்துகளை உண்டாக்கியது. இந்த காய்ச்சலுக்கு காரணமான Japanese Encephalitis Virus (JEV) வைரஸ், 1861-ல் கண்டறியப்பட்டு, பல வருடங்களுக்கு(1935) பிறகே தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது.

எப்படி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்?

மழை பொழிந்து புல்வெளிகளில் இருக்கும் நன்னீரில் தான் உருவாகும் இந்த கியூலெக்ஸ் கொசுக்கள். இதுவொரு மிகப்பெரிய கொடிய வைரஸ் காய்ச்சலாக உருவெடுத்துள்ளது. இந்த கியூலெக்ஸ் கொசுக்கள், மனிதரை கடிக்கும் பொழுது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உண்டாக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கியமான 14 மாவட்டங்களில் இருந்து 32,000 கியூலெக்ஸ் கொசுக்களை பிடித்து ஆய்வு செய்தனர் பூச்சியியல் வல்லுநர்கள். இதில் வெறும் 5 கொசுக்களுக்கு மட்டுமே ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரப்பும் ரத்த மாதிரிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

காய்ச்சல் வந்தவுடன், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரப்பும் கிருமிகள் உள்ளனவா என முதலில் சோதித்துக் கொள்ளவேண்டும். தமிழகத்தில் உள்ள 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில், இதற்கென சிறப்பாக பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கியூலெக்ஸ் வகை கொசுக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது. அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 15 வயதிற்கு உற்பட்ட குழந்தைகளை இந்த கொசுக்கள் கடித்தல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எளிதில் பரவும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அறிகுறிகள்:

இந்த காய்ச்சல் வந்தால், ரியல் டைம் PCR(Real Time PCR) என்ற ஆய்வக முறை மூலம் மூலமாக கண்டறியலாம்.

 • யாருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வருகிறதோ, அவர்களுக்கு எடுத்த உடனேயே 110 டிகிரியில் இருந்து 120 டிகிரி உச்சபட்ச காய்ச்சல் இருக்கும்.
 • அவர்களின் கண்கள் சிவப்பு நிறங்களில் இருக்கும்.
 • தாக்கியவரின் கழுத்து நிலையாக நிற்காமல், நடுக்கம் ஏற்படும்.
 • நினைவாற்றல் குறைந்து, சுயநினைவை இழந்தது போல காணப்படுவார்கள்.

தக்க சமையத்தில் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளவில்லை எனில், உயிர் போகும் ஆபத்தும் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வராமல் தடுக்க:

 • நமது வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரணாமா வைத்திருக்க வேண்டும்.
 • வீட்டை சுற்றிலும் மழை நீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
 • மழைக்காலங்களில் வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் தடுப்பதும் நல்லது.
 • வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு வந்தவுடன் கை கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
 • தினமும் அதிக அளவில் தண்ணீரைப் பருகுவது நல்லது.
 • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கீரைகள், முட்டை, இறைச்சி போன்ற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • உடற்பயிற்சி அவசியமானது.

இந்தவகை காய்ச்சல் வந்தால், ஒரு வாரம் பாடாய் படுத்துவிடும். உயிர் போகும் அபாயமும் இருப்பதால், வந்தவுடன் தகுந்த ரத்த பரிசோதனை செய்வதும், சிகிச்சை மேற்கொள்வதும் முக்கியம். இந்த வகை காய்ச்சலை கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த பொது சுகாரத்துறையும் தயாராகவே உள்ளது. மேலும் தேவையான மருந்து மாத்திரைகள் தயாராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சல் கொசுக்களை கட்டுப்படுத்த, தமிழக அரசின் கீழ் செயல்படும் பூச்சியியல் துறையில் தினமும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null