கழற்சிக்காய் (Kalarchikai or Kalachikai) என்றால் என்ன?
‘கழற்சிக்காய்’ என்பது ஒரு வகையான அற்புத மூலிகை ஆகும். கழற்சிக்காய் கழற்சி கொடியில் காய்க்கும்.சூடான நாடுகளில் இந்த தாவரம் அதிகளவு வளருகின்றது. அதற்கு உதரணமாக இந்தியா ,ஸ்ரீலங்கா மற்றும் பர்மா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த கொடிகள் வேலி ஓரங்களிலும், சாலையோரங்களிலும், புதர்களிலும் அதிக அளவில் காணப்படும். ஆக இது சுயம்புவாக வளர்ந்து, அற்புத மருத்துவ நன்மைகள் செய்யும் ஒரு சிறந்த மூலிகையிது. இந்த கழற்சிக்காய் பற்றி சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். Kalarchikai or Kalachikai benefits in Tamil.
கேசல்பினிய பொண்டுசெல்லா(Caesalpinia bundella) என்பது கழற்ச்சிக்காயின் தாவர பெயராகும். இந்த கழற்சிக்காய் கச்சுரம், வஜ்ர பீஜம், கச்சக்காய், களிச்சக்காய் போன்ற பல பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கழற்சிக்காய் ஓடுகள் சற்று கடினமான தன்மை கொண்டன. காய்களுக்கு மேலே முள் போன்ற அமைப்பு இருக்கும். இந்த காய்கள் முட்டை வடிவில் காட்சியளிக்கும். இவற்றின் உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கும். இந்த பருப்புகள் பார்ப்பதற்கு மென்மையாக இருந்தாலும், சாப்பிடுவதற்கு நேர்மாறாக இருக்கும். ஆம் மிகவும் கசப்புத் தன்மை கொண்டது.ஆனால் இந்த விசயமே அதன்
பெரும் சக்தியைச் சுட்டிக் காட்டுகிறது. ஆம் இந்த பருப்புக்கள் பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளன. பெண்களின் மாதவிடாய் தொல்லைக்கு அருமருந்தாக உள்ளது. இந்த பதிவில் கழற்சிக்காயின் பல்வேறு விதமான மருத்துவ நன்மைகளை (Kalarchikai or Kalachikai benefits in Tamil) விரிவாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் சீராக ஏற்படாமல் இருக்கும் பெண்களுக்குக் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்க வாய்ப்புகள் அதிகம் . அதிக சதவீதம் பெண்களில் மாதவிடாய் ஒழுங்கற்ற பிரச்சனைக்குக் காரணமாக இருப்பது கருப்பையில் ஏற்பட்டிருக்கும் நீர்க் கட்டிகள் தாம். இந்த பிரச்சினையைச் சரி செய்யாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் கருத்தரித்தலில் சிக்கல் வர அதிக சாத்தியமுள்ளது.
மேலும் திருமணமான பல பெண்களுக்குக் குழந்தையின்மை சிக்கல் ஏற்படுவதற்கும் கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் காரணமாக இருக்கக் கூடும். மருத்துவரீதியாக இதனை பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசிஸ்- பல கட்டிகள் உள்ள சூலகங்கள் நோய்க்கான அறிகுறிகள்) என்று அழைப்பார்கள்.
இந்த நோய் உள்ளவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சரியான அளவில் உற்பத்தியாகாது. இதன் விளைவாக இவர்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க் கட்டிகள் தோன்றுகின்றன.
இந்த மாதிரியான மருத்துவ சிக்கல் பூப்பெய்திய பெண்களில் காணப்படுகின்றது. சுமார் 15 வயது முதல் 45 வயதுக்குள் இந்த நோய் பெண்களைத் தாக்க வாய்ப்புள்ளது. நம் நாட்டைப் பொறுத்த வரையிலும் 18 சதவீத பெண்கள் இந்த தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நோயைக் குணப்படுத்தச் சரியான வழி தெரியாமல் பல பெண்கள் தவித்து வருகின்றனர். இந்த நோயைக் குணப்படுத்தத் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து துன்பம் அடைகின்றனர்.
இந்த மாதிரி நோயிலிருந்து குணமடையக் கழற்சிக்காய் அற்புதமான வழியில் துணைபுரிகின்றன. இந்த கழற்சிக்காய் சூரணத்தை சுமார் 5 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை மற்றும் மாலை என்று இரு வேளைகளிலும் அருந்தவேண்டும்.
இப்படித் தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்துவரவேண்டும். இந்த முறையில் அற்புதமாகப் பலன் கிடைக்கும். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து சினைப்பையில் தோன்றியிருந்த நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.
இந்த கழற்சிக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக இது மாதிரியான சிக்கல் உள்ள பெண்கள் குறைந்த செலவில் கைகொடுக்கும் அற்புதமான வழியைப் பயன்படுத்தி பெரும் பலன் அடையலாம்.
வயிற்றுப் புண் குணமடையும்
வயிற்றுப்புண் ஆற பல்வேறுவிதமான வழிகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் நாள்பட்ட வயிற்றுப் புண் அவ்வளவு எளிதில் ஆறவே ஆறாது. அப்படிப்பட்ட புண்களையும் கழற்சிக்காய் ஆற்றும் தன்மை கொண்டன. இது கழற்சிக் காயின் சிறப்பம்சம்.
வயிற்று வலி தீரும்
கழற்சிக்காய் மட்டுமல்ல கழற்சி இலைகளும் மருத்துவ தன்மை கொண்டன. இந்த இலைகளைக் காய வைத்து பொடியாக்கிச் சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குணமடையும். படிக்க: வயிற்று வலி சரியாக வீட்டு வைத்தியம்
வீக்கம் வடியும்
இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து மேல் பூச்சாக வீக்கத்தின் மீது தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வீக்கம் கரைந்துவிடும்.
சர்க்கரை நோய் குணமாகும்
இந்த கழற்சிக்காய் சூரணம் சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரிய அளவு உதவுகின்றன. இதனை அவர்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சுருங்க சொன்னால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும். 15 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகையை உட்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று குறைய தொடங்கும். ஆக ரத்தத்தின் சர்க்கரை அளவை அவ்வவ்போது பரிசோதித்துக் கொள்வது சாலச்சிறந்தது. இந்த மருந்து எடுத்து கொள்வதற்கு முன் சித்த மருத்துவத்தில்முறையன நிபுணத்துவம் பெற்றவர்களை அணுகுவது சிறந்தது.
மூளை செயல்பாடு
வயது அதிகரிக்க ஞாபக மறதி நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது மாதிரியான நபர்கள் இந்த பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் மூளையைப் பலப்படுத்திக் கொள்ளலாம். அதனால் மூளை செல்கள் சிறப்பாகச் செயல்படத் தொடங்கி விடும். ஞாபக மறதி நோய் தீரும்.
இது மட்டுமல்ல மூளை பகுதியில் ஏதாவது ரத்தக் கசிவு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்தப் பொடி உதவும். இது ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த துணைபுரியும்.இது ஒரு மகத்துவமான பயன்.
பல் வலி தீரும்
இந்த பொடியைக் கொண்டு பற்களைத் துலக்குவதால் பல்வலி குணமடையும். மேலும் பலர் இதன் இலைகளை நீரில் காய்ச்சி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்கின்றனர். இதனைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். வாய் கிருமிகள் அழிக்கப்படும். பல் சொத்தை முதலான பிரச்சனை சரியாகும்.
மலேரியா காய்ச்சல்
இந்த காயின் மூலம் கிடைக்கப்பெறும் வேதிப்பொருளைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் மலேரியா காய்ச்சலுக்கு எதிராகச் சிறப்பான வகையில் செயல்படுகின்றன.
வயிற்றுப்பூச்சி அழியும்
இந்தப் பொடியை எடுத்துக் கொள்வது மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு நல்ல பலன் கிடைக்கும். அவர்களின குடலில் தங்கியிருக்கும் பூச்சிகள் கொள்ளப்படும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது குழந்தைகளுக்குச் சத்துக் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். அவர்களுக்குக் கழற்சிக்காய் பொடியைத் தருவதாக உகந்தது.
ஆஸ்துமா
இந்த விதையின் சூரணம் ஆஸ்துமா ,இருமல், சளி போன்ற தொல்லைகளுக்குச் சிறந்த மருந்தாகும்.
வயிற்றுப்போக்கு சரியாகும்
கழற்சிக்காய் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சினைகளுக்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடிய சக்தி கொண்டது. அந்த வகையில் வயிற்றுப்போக்கு காலத்தில் இந்த பொடியைச் சாப்பிடக் குணம் கிட்டும். மேலும் இவை சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரகம்
இந்த விதைகள் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டைச் சிறப்பாக ஆக்குகிறது.
தோல் நோய்கள் தீரும்
இந்த காய் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை தீர்க்கும். உடல் சூட்டு கொப்பளம், தொழுநோய் தொடர் பல்வேறு வியாதிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.
சின்னம்மை
இந்த மூலிகை சின்னம்மைக்கு எதிராக செயலாற்றும் குணம் கொண்டது.
கழற்சிக்காய் பெறப்படும் இன்னும் சில சிறந்த நன்மைகள் என்ன?என்று அறிய ஆவலாக உள்ளதா? படித்துப் பாருங்கள்.
1.ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவும்.
2.பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
3.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைக் குணப்படுத்த உதவும்.
4.மூல வியாதியை நிவர்த்தி செய்வதில் பெரிதளவு கை கொடுக்கின்றது.
5.கல்லீரலில் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
6.இதன் இலைகளைத் தண்ணீரில் காய்ச்சி வாய் கொப்பளிப்பதன் மூலம் வறண்ட தொண்டை குணமடையும்.
7.இதன் இலைகள் காய்ச்சலுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டன.
8.விரை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றது.
9.நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை(டியூபர் கிளோசிஸ்)குணமடையும்.
10.மூட்டு வலியைக் குணப்படுத்த உதவுகிறது.
11.வாதம் மற்றும் கப பிரச்சனை குணமடையும்.
12.பெண்களின் குழந்தை இன்மை பிரச்சினை தீரும்.
13.முடி கொட்டுதல் பிரச்சனை நிவர்த்தியாகும்.
14 தலைவலி குணமடையும்.
கர்ப்பிணிப் பெண்கள்
இந்த கழற்சிக்காய் கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக்கொள்வது உகந்தது இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம். படிக்க: வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை!
இந்தப் பதிவின் மூலம் கழற்சிக்காயின் ஆரோக்கிய பலன்களை அறிந்து இருப்பீர்கள். இனி இந்த மூலிகையைத் தவறாமல் பயன்படுத்தி நல்ல பலன்களை அடையுங்கள்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null