ஒரு பெண் கருவுற்று இருந்தால் அந்த வீட்டிற்கே ஆனந்தம்தான். பிறக்கப் போவது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள். இருப்பினும் கர்ப்பிணி பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்ற ஆவல் இருந்துகொண்டே இருக்கும். அதை அறிந்து கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன.
இன்று மருத்துவர்கள் அந்த தகவல்களை எல்லாம் வெளியிடுவதில்லை. இருந்தாலும் நம் நாட்டிலே அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை இதைப் பற்றிப் பல நம்பிக்கைகளும் கதைகளும் நிலவிக் கொண்டு தான் இருக்கின்றன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண் தான் திருமணத்தன்று போட்டிருந்த மோதிரத்தை முடி அல்லது நூல் கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனைத் தனது வயிற்றிற்கு நேராகக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் போது மோதிரம் வட்டமாகச் சுற்றினால் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று அர்த்தம். ஒருவேளை ஊஞ்சல் மாதிரி அப்படியும் இப்படியும் ஆடினால் ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தம்.
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றின் அளவை கொண்டும் பிறக்கப் போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கணிக்கலாம். கர்ப்பிணி பெண்ணின் வயிறு சற்று பெரியதாக இருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் வயிறு சற்று சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிறக்கப்போவது பெண் குழந்தை என்று நம்பப்படுகிறது.
கடைகளில் கிடைக்கும் சிவப்பு முட்டை காேஸ்களை வாங்கிக் கொள்ளவும்.இதை பொடியாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க விடவும். ஒரு பத்து நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு கப்பில் ஊற்றி ஊற்றவும். காலையில் முதன் முதலில் வெளியேறும் சிறுநீரை சரிசமமாக இத்தோடு கலக்கவும். தற்போது நீர் பிங்க் அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறி இருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தை ஆகும். அதே சமயம் தண்ணீர் ஊதா நிறத்திற்கு மாறினால் பிறக்கப்போவது பெண் குழந்தையாகும்.
இந்த சோதனை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது சீனர்கள். இந்த சோதனை செய்வது மிகவும் எளிமையானது.ஒரு சிறிய கூட்டல் கணக்குப் போட்டாலே பிறக்கப் போவது என்ன குழந்தை என்று தெரிந்து விடும். இதற்குத் தேவையானவை கர்ப்பிணிப் பெண்ணின் வயது மற்றும் கர்ப்பம் தரித்த ஆண்டு மட்டுமே ஆகும். இவற்றைக் கூட்டும் பொழுது கிடைக்கும் விடையைக் கொண்டே பிறக்க இருப்பது ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாகக் கிடைக்கும் விடையில் ஒரு எண் ஒற்றைப்படையாகவும், மற்றொரு எண் இரட்டைப் படையாகும் வந்தால் பிறக்கப் போவது ஆண் குழந்தை ஆகும். அதேசமயம் இரண்டு எண்ணமே ஒற்றைப்படையாகவோ அல்லது இரட்டைப் படையாகவோ வந்தால் பிறகு போது பெண் குழந்தை ஆகும். இந்த சோதனை பலர் விசயத்தில் உண்மையாகவே இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டுப் பார்க்கலாம். கர்ப்பம் தரித்த வயது- 23 மற்றும் கர்ப்பம் தரித்த ஆண்டு-2014.ஆக, 2+3+2+0+1+4=12 இரண்டில் ஒன்று ஒற்றைப் படை மற்றொன்று இரட்டைப்படையாக வந்துள்ளதால், ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது (Aan kulanthai arikuri).
கர்ப்பிணி பெண்ணின் மார்பகத்தின் அளவை கொண்டும் பிறக்கப் போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணி பெண்ணின் வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால் பிறக்கப் போவது ஆண் குழந்தையாக இருக்கலாம். இதுவும் ஒருவித நம்பிக்கை தான் மற்றபடி உறுதிப்படக் கூற இயலாது.
ஆண் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் பெண் குழந்தையின் இதயத் துடிப்பு மாறுபட்டிருக்கும். ஆக இந்த இதயத்துடிப்பின் அளவை கொண்டும் பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்று அறியலாம். நீங்கள் மருத்துவரைக் காண நேரும் பொழுது இந்த இதயத்துடிப்பின் அளவை கவனித்துக் கொள்ளுங்கள். இந்த இதயத் துடிப்பானது 140-க்கு அதிகமாக இருக்கும் பொழுது பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் இதயத் துடிப்பானது 140-க்கு கீழே இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.இந்த விசயமும் கருவில் வளருவது ஆணா ?பெண்ணா ? என்று அறிய உதவும்.
இந்த சோதனைக்குக் கர்ப்பிணி பெண்ணின் சிறுநீர் தேவை.காலையில் முதன் முதலில் வெளியேறும் சிறுநீரை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும் . இதை டிரோனோவில் கலக்கவும். இவ்வாறு கலந்த பிறகு அதன் நிறம் பச்சை நிறமாக மாறினால் பிறக்கப்போவது பெண் குழந்தையாக இருக்கலாம்.ஒருவேளை நீல நிறமாக மாறினால் பிறக்கப்போவது ஆண் குழந்தையாகும்.இதன் நம்பகதன்மை
உறுதியானது கிடையாது.
கர்ப்பிணி பெண்ணின் முகத்தில் அதிக அளவு கொப்புளங்கள் தென்பட்டால் பிறக்கப்போவது ஆண் குழந்தையாக இருக்கக்கூடும். இதற்குக் காரணம் ஆண் குழந்தைக்குத் தேவையான ஹார்மோன்கள் கர்ப்பிணி பெண்ணின் உடலில் சுரக்கத் தொடங்குவதே ஆகும். இதன் விளைவாக சில கர்ப்பிணிகளின் முகத்தில் சற்று ஆண் தன்மை கூடத் தெரியும். கர்ப்பிணி பெண்ணின் அழகும் சற்று குன்றி இருக்கும்.சருமத்தில் அதிக அளவு வறட்சி காணப்படும். இதை வைத்துப் பிறக்கப்போவது ஆணா பெண்ணா (Karuvil irukum kulanthai Aana Penna) என்று அறிந்து கொள்ளலாம்.
கூந்தலின் வளர்ச்சி கூட கருவில் உள்ளது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை அறிய உதவும். கர்ப்பிணி பெண்ணுக்குக் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிறக்கப்போவது ஆண் குழந்தையாக இருக்கக் கூடும்.
காலையில் முதன் முதலில் வெளியேறும் சிறுநீரை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும். சிறுநீரை பேக்கிங் சோடாவில் ஊற்றவும்.இவ்வாறு செய்யும்பொழுது நுரை எழுந்து வந்தால் பிறக்கப்போவது ஆண்குழந்தையாகும். எந்தவித மாற்றமும் நிகழவில்லை என்றால் பிறக்கப் போவது பெண் குழந்தை ஆகும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சில குறிப்பிட்ட உணவுகள் பிடிக்கும். அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் இனிப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட்டால் அவர்களுக்குப் பிறக்கு போவது பெண் குழந்தை ஆகும். அதேசமயம் புளிப்பு மற்றும் காரத்தன்மை வாய்ந்த உணவுகளை அவர்கள் அதிகம் விரும்பி எடுத்துக் கொண்டால், அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தை ஆகும்.
கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரைக் கொண்டும் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கலாம். கர்ப்பிணியின் சிறுநீர் அடர்த்தியான நிறமாக இருந்தால் பிறக்கப் போவது ஆண் குழந்தை ஆகும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் பிறக்கப்போவது பெண் குழந்தை ஆகும்.
கர்ப்பிணி பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் அதிக அளவில் சோர்வு காணப்பட்டால் பிறக்கப்போவது பெண் குழந்தை ஆகும். பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக அளவு சத்து தேவை என்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த நிலையைச் சந்திக்கின்றார்கள். அதேசமயம் சோர்வு இல்லாமல் இருந்தால் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்பார்கள்!
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் தெரியும் கருப்பு கோடு செங்குத்தாகத் தொப்புள் வழியே சென்றால் பிறக்கப்போவது பெண் குழந்தை ஆகும். ஒருவேளை தொப்புளுக்குக் கீழே இந்த கோடு மறைந்து போய் இருந்தால் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை ஆகும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்ணின் பாதம் சற்று குளிர்ச்சியாகக் காணப்பட்டால் பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பார்கள். குளிர்ச்சி இல்லாமல், சற்றே வெது வெதுப்பாகவோ அல்லது வேறு மாதிரியோ இருந்துவிட்டால் அது பெண் குழந்தையாக இருக்கலாம் என்பார்கள்.
கர்ப்பிணி பெண் இடது பக்கமாகத் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் பிறக்கப்போவது ஆண் குழந்தை ஆகும். இவ்வாறு இல்லாத பட்சத்தில் பிறக்கப்போவது பெண் குழந்தையாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து தம்பதிகள் தங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று அறிந்து கொள்ளலாம். இந்த குறிப்புகளின் நம்பகத்தன்மையை உறுதியாகக் கூற முடியாது. இதில் சில விசயங்கள் மூடநம்பிக்கைகளாகக் கூட இருக்கலாம். வேறு சில விசயங்கள் அனுபவங்களால் நம்பப்படும் தகவல்களாகவும் இருக்கலாம். இவற்றின் நம்பகத்தன்மைக்கு எந்தவிதத்திலும் உத்திரவாதம் கிடையாது.
இதை ஒரு விளையாட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் செய்து பார்க்கலாம். சிலருக்கு இவை ஏற்றுப்போயிருக்கலாம். சிலருக்கு இவை மாறுபட்டிருக்கலாம். மற்றபடி குழந்தை என்பது கடவுள் தரும் பரிசு. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி போற்றிப் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். (Karuvil irukum kulanthai Aana Penna)
இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null