குழந்தைக்கு காதணி விழா...ஜிமிக்கி கம்மல் போடலாமா?!

குழந்தைக்கு காதணி விழா...ஜிமிக்கி கம்மல் போடலாமா?!

குழந்தைகளுக்கு காதணிகள் அவர்களது முகத்திற்கு மேலும் அழகை சேர்க்கும். இதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் காது குத்துவது என்பது நம் தமிழ் மரபில் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து கொண்டிருகின்றது. ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, பெற்றோர்கள் இருவருக்கும் சிறு வயதில் கட்டாயம் காது குத்தி விடுவார்கள். இதை ஒரு சம்பிரதாயமாகவே அவர்கள் பார்கின்றார்கள். இதற்காக பெரும்பாலானோர் காதணி விழா (Kathani vizha) வைத்து சிறப்பிக்கின்றனர். மேலும் இது அறிவியல் ரீதியாகவும் நன்மைதரக்கூடியது என்கிறார்கள் சிலர். ஜிமிக்கி கம்மல் போடலாமா எனகேட்கிறார்கள் சிலர். அதற்கான விளக்கமான பதிவே இது!

ஆனால், இன்றைய நவீன காலத்தில், பெரும்பாலான ஆண்கள் காதில் எதுவும் அணிவதில்லை என்றாலும், சிலர் ஸ்டைல் காரணமாகவும்அணிகிறார்கள். பெண்கள் காதணிகளை கட்டாயம் தவிர்ப்பதில்லை. மேலும் பல பெண்கள் வித விதமான காதணிகளை அணிய விருப்பப்பட்டு, வெவ்வேறு இடங்களில் குத்திக் கொள்கின்றார்கள். இது அவர்களுக்கு விருப்பப்பட்ட காதணிகளை போட உதவுவதோடு, மேலும் அழகையும் அதீதமாகக் கூட்டுகிறது.

உங்கள் பெண் குழந்தைக்கு நீங்கள் காது குத்த/ காதணி விழா நடத்த முடிவு எடுத்து விட்டால், பின், நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான விசயங்கள் உள்ளன. உங்களுக்கா, அவை, பின் வருமாறு; Kathani vizha!

காது குத்து / காதணி விழா பற்றிய தகவல்கள்

காது குத்த சரியான வயது எது: பொதுவாக பல குடும்பங்களில், பெண் குழந்தை பிறந்த ஒரு மாதம் முதல் மூன்று வயதிற்குள்ளாக காது குத்தி விடுவார்கள். அதிலும், குறிப்பாக ஒரு வயது முடிவதற்குள் காது குத்தி விட வேண்டும் என்றும் சில கணக்குகளை வைத்திருப்பார்கள். ஆனால், பிறந்து ஆறு மாதம் வரையிலுமாவது காது குத்துவதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில், குழந்தைகளின் காதுமடல் மிகவும் மென்மையாகவே இருக்கும். நன்கு வளர ஆரம்பிக்கும் முன்னர் காதணி விழா செய்து, ஜிமிக்கி கம்மல் போட்டுவிட்டால், குத்திய இடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அது பின்னாளில் சங்கடங்களைத் தரலாம். எனவே, ஒரு பெண் குழந்தைக்கு நீங்கள் பத்து வயது வரை காலம் எடுத்துக் கொண்டு எப்போது வேண்டுமென்றாலும் காது குத்தலாம்.

சரியான காது குத்தும் முறை: பெரும்பாலும், காலம் காலமாக தமிழர்கள், காது குத்துவதை ஒரு குடும்ப விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். இதனை காதணி விழா என்பர். இது இன வேறுபாடுகள் இன்றி, அனைவரும் மகிழ்ச்சியாக நிகழ்த்தும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆச்சாரியர்களை இதற்கென்று தேர்ந்தெடுத்து பக்குவமாக தங்கள் பெண் குழந்தைகளுக்கு காது குத்துவார்கள்.

மேலும் அவர்களையே தங்கள் குழந்தைக்கு ஏற்ற தங்கத்தால் ஆன காதணிகளையும் செய்யச் சொல்வார்கள். ஆனால் இன்றோ பலர், நேரமின்மை காரணத்தால், மருத்துவரிடமோ அல்லது, அழகு நிலையங்களுக்கோ சென்று சில நிமிடங்களில், பெரிதாக எந்த செலவுகளும் இன்றி காது குத்திக் கொள்கின்றார்கள். அப்படி நீங்கள் எளிமையாக செய்ய விரும்பினால், ஒரு நல்ல நிபுணரை தேர்ந்தெடுப்பது நல்லது. காதில் சரியான இடத்தில், பக்குவமாக ஓட்டை போட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

காதணி விழா-வில் யார் காது குத்த வேண்டும்? தமிழர் வழக்கத்தில் சில முறைகள் இருந்தாலும், பொதுவாக நன்கு பக்குவமாக காது குத்தத தெரிந்து ஒரு நிபுனரையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மேலும், சுகாதாரமான வகையிலும் காது குத்த வேண்டும். ஏனென்றால், அப்படி காது குத்தும் போது, குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருப்பது நல்லது.

வலி இல்லாமல் காது குத்த வேண்டும்:- உங்கள் பிஞ்சு குழந்தைக்கு நிச்சயம் காது குத்தும் போது அதிக வலி ஏற்படும். இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால், முடிந்த வரை காது குத்தும் போது பக்குவமாகவும், குழந்தைக்கு பெரிதாக வெளித் தெரியாமலும் குத்த வேண்டும். இதற்கு சில மருந்துகளும், முறைகளும் உள்ளன. குறிப்பாக பணி கட்டிகளை காதில் வைத்து ஒத்தடம் கொடுப்பது, குழந்தையின் கவனத்தை காது குத்திய பின் திசை திருப்பி, காது குத்தியதையே மறக்க செய்து விளையாட்டு காட்டுவது என்று சில விசயங்களை செய்யலாம்.

(ஜிமிக்கி கம்மல்?) காதணியின் அளவு: உங்கள் குழந்தைக்கு முதன் முதலில் காது குத்தும் போது/ காதணி விழாவின் போது நீங்கள் போட விரும்பும் காதணியின் அளவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரும்பாலான பெற்றோர்கள், பெரியதாக இருக்கும் காதணிகளை குழந்தைக்கு அணிய விரும்புவார்கள். உதாரணமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜிமிக்கி கம்மல் போட்டு அழகு பார்க்க நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்தால், அது உங்கள் குழந்தைக்கு காது குத்திய பின் புண் ஏற்படவும் அல்லது விரைவாக குணமடைய நேரம் எடுத்துக் கொள்ளவும் காரணமாகி விடலாம். அதனால் எப்போதும் சிறிய மற்றும் கணம் குறைவான காதணிகளை தேர்வு செய்வது நல்லது. ஜிமிக்கி கம்மல்-களைத் குட்டிக் குழந்தைகளுக்கு தவிர்ப்பதும் நல்லது.

காது குத்திய பின், காதணி போட ஏற்ற உலோகம்: இன்று பல உலோகங்களில் காதணிகள் கிடைத்தாலும், தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. யாராக இருந்தாலும், முதன் முதலில் தங்கள் பெண் குழந்தைக்கு காது குத்தும் போது, தங்கத்திலேயே முதன் முதலில் காதணி போட விரும்புவார்கள். இந்த வகையில், நீங்கள் தங்க காதணிகளை தேர்வு செய்யலாம். மேலும் தாகம் அல்லாது, வெள்ளி, டைடானியம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களிலும் காதணிகள் கிடைகின்றன.

அவற்றில் ஒன்றையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் வெள்ளை தங்கத்தை தவிர்ப்பது நல்லது. அதில் நிக்கல் சேர்க்கப்படிருப்பதால் உங்கள் குழந்தைக்கு சில ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்தக் கூடும். எனினும், உங்களுக்கு குழப்பமாக இருந்தால், ஆச்சாரி அல்லது நிபுணர்களை அணுகி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளலாம்.

காது குத்திய பின் கவனிக்க வேண்டிய சில விசயங்கள்

காதணி விழா முடிந்ததே காது குத்தி விட்டோமே, இனி என்ன என்று விட்டுவிடாமல், காது குத்திய பின் உங்கள் குழந்தயை சில நாட்கள் நீங்கள் கண்காணிக்க வேண்டும். இது குறிப்பாக, காதில் ஏதும் புண் அல்லது பிரச்சனைகள் ஏற்படுகின்றதா என்பதை கவனிக்க உதவும். அப்படி ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம். இது பிரச்சனைகளை அதிகமாக்கி விடாமல் தவிர்க்க உதவும். உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்;

  • படிக்க: எந்தெந்த உணவுகளால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது?
  • காது குத்திய பின் அந்த இடம் அதிக உணர்ச்சியோடு இருக்கும். மேலும் வலியும் அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாது, காதுகள் அதிகம் வெயில், தூசி, காற்று போன்றவை படும் வகையில் இருப்பதால், அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த சுகாதார பிரச்சனைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • தினசரி, சில வாரங்களுக்கு காதுகளை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும். இதற்கு நீங்கள் தினமும் ஒரு பஞ்சில் உப்புத் தண்ணீரை நனைத்து காதுகளை மெதுவாக சுத்தம் செய்து விடலாம். குறிப்பாக காது குத்திய இடத்தை சுத்தம் செய்து விடவேண்டும். இப்படி செய்தால், நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.
  • காதணிகளை அவ்வப்போது மெதுவாக சுழற்றி விட வேண்டும். ஒரே நிலையில் காது குத்தியதில் இருந்து காதணிகள் அப்படியே இருந்தால், அது துளைகளுடன் இறுகிப் போய் விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் அவ்வப்போது உங்கள் குழந்தைக்கு வலிக்காமல் காதணிகளை மெதுவாக சுழற்றி விடும் போது துளைகளுக்கு சற்று காற்றோட்டம் கிடைத்து, துளையும் பெரியதாக ஆக உதவும். மேலும் இது இறந்த அணுக்களை அகற்றவும், புண் ஏற்படாமல் தவிர்க்கவும் உதவும்.

இந்த குறிப்புகள் மட்டுமல்லாமல், சில சமயங்களில் ஒரு சில குழந்தைகளுக்கு காது குத்திய ஓரிரு நாட்களிலேயே காதில் சீல் ஏற்படுவது, ரத்தம் வருவது என்று சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இது விரைவாக குணமடைந்து விடும் என்றாலும், சில குழந்தைகளுக்கு அது நீடித்து, மேலும் அதிகரித்தால், உடனடியாக மருத்துவரையோ, அல்லது நிபுணரையோ அணுகி தக்க சிகிச்சை பெற்றுக் கொள்வது முக்கியம். இவற்றை எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, காதணி விழா நடத்தலாம், ஜிமிக்கி கம்மல் போடலாம்!

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வளர்ச்சி, எடை அதிகரிப்பு, எனர்ஜி தரும் உணவுகள்…

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null