உலகமே கையிலே என்பதன் அடையாளம் செல்போன். ஆனால், உடல்நல கோளாறுகளும் செல்போன் மூலமாக நமக்கு வருகிறது என்பதை மறக்கிறோம். செல்போனால் நன்மைகள் கிடைத்தாலும் தீமைகள் அதிக அளவில் கிடைக்கின்றன. தேவைப்படும்போது பயன்படுத்தி, செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம் குழந்தையையும் நம்மையும் பாதுகாப்பது எப்படி என இப்பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன், செல்போன், டாப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகளைப் பார்க்கலாம்.
நடத்தையில் பிரச்னை
அடிமையாகிவிடுவார்கள்
மனச்சோர்வு
தூக்கமின்மை பிரச்னை
உடல்பருமன்
சோர்வு
தலைவலி
மறதி
காதில் ரிங் சத்தம் கேட்கும் பிரச்னை
மூட்டு வலி
கவனத்திறன் நீங்குதல்
காது சரியாக கேட்காமல் போகலாம்
ஏதோ ஒரு குழப்பத்திலே இருத்தல்
நரம்பு மண்டலத்தில் பிரச்னை
கதிர்வீச்சுகள் எப்படி பாதிக்கும்?
செல்போனில் உள்ள கதிர்வீச்சுகள், பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். குழந்தைகளுக்கு சிறிய தலை, மெல்லிய மண்டை ஓடு இருப்பதால் செல்போனின் கதிர்வீச்சு மிக விரைவில், எளிதில், மண்டை ஓட்டுக்குள் ஊடுருவி சென்று மூளையைப் பாதிக்கும்.
செல்போன் ஆன்டனாவிலிருந்து பல திசைகளின் கதிர்வீச்சுகள் வந்து தாக்கும்.
பாதியளவு கதிர்வீச்சுகள் மனித தலையில் வந்து தாக்கும். இப்படிதான் நாம் தினமும் செல்போன் பேசி கொண்டிருக்கிறோம்.
Image Source : L & T
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
பயணத்தின் போது செல்போனின் நிலை தெரியுமா?
கார், பேருந்து, ரயில், இரு சக்கர வாகனங்கள் போன்ற எதில் நீங்கள் பயணம் செய்தாலும், உங்களது செல்போனை நீங்களும் பயன்படுத்த வேண்டாம். தயது செய்து குழந்தைகளிடமிருந்தும் தள்ளி வையுங்கள். பயணத்தில் செல்போன், சிக்னலுக்காக ஸ்கேன் செய்து கொண்டே இருக்கும். தொடர்ந்து ஸ்கேனிங் நடந்துகொண்டே இருக்கும். அப்போது மிக அதிகமான ரேடியேஷன் வெளியாகும். மிக அதிகமான கதிர்வீச்சால் மூளை, தலை ஆகியவை அதிகமாகப் பாதிக்கும்.
மைக்ரோவேவ் ஒவெனும் செல்போனும் ஒன்று…
எப்படி என்கிறீர்களா? ஆம்… நமக்கு கதிர்வீச்சுகள் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வரும். பவர் லைன்கள், ரேடியோ, டிவி, லைட், ஹைட்ரோதெரபி செய்யும் கருவி, எக்ஸ் ரே, செல்போன், மைக்ரோவேவ் ஓவென் போன்ற அனைத்திலிருந்தும் வரும்.
அதில் மைக்ரோவேவ் ஒவெனும் செல்போன் கதிர்வீச்சும் ஒரே அளவு. டிவியை விட செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சு அதிகம்.
நீங்கள் 15 நிமிடம் செல்போன் பயன்படுத்திப் பேசினால், உங்கள் முகத்தில் எவ்வளவு சூடு பரவுகிறது எனப் பாருங்கள்.
5 வயது குழந்தை, 10 வயது குழந்தை, பெரியவர்கள்… இவர்களின் மூளையை கதிர்வீச்சுகள் எப்படியெல்லாம் தாக்கிறது எனப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Image Source : L & T
குழந்தைகள் செல்போன் பயன்படுத்தாமல் இருக்க வழிகள்....
பாஸ்வார்ட்
பிறந்த குழந்தைகள் முதலே செல்போனை குழந்தையிடம் அதிகமாகக் காண்பிக்காமல், குழந்தை முன் செல்போனை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முன் நீங்கள் செல்போனை அதிகமாக காண்பிக்க வேண்டாம். யூ டியூபில் ரைம்ஸ்கூட போட்டு காண்பிக்க வேண்டாம். சிலர் பாஸ்வேர்டை குழந்தை முன்னே போடுவார்கள். அதைப் பார்க்கும் குழந்தை, ஏதாவது ஒரு நாளில் பாஸ்வார்ட் போட்டு செல்போனை பயன்படுத்தத் தொடங்கும். சிலர் அப்போது பெருமையாக சொல்லி கொள்வார்கள். என் குழந்தை பாஸ்வார்ட் போட்டு செல்போனை பயன்படுத்தறா என்று, ஆனால் இது பெருமை படவேண்டிய விஷயமில்லை. செல்போனில் பழக குழந்தை ஆரம்பித்துவிட்டது என அர்த்தம். உங்கள் மொபைலில் கட்டாயம் பாஸ்வார்ட் போட்டு கொள்ளுங்கள். ஆனால், குழந்தை கண்டுபிடிக்கும்படி குழந்தை எதிரே பாஸ்வார்ட் போடாதீர்கள். செல்போன் வேலை செய்யவில்லை என்ற எதாவது காரணம் சொல்லி தவிருங்கள்.
பொம்மை செல்போன்
குழந்தைகளுக்கு கடையில் விற்கும் பொம்மை செல்போனை வாங்கி கொடுங்கள். அதுதான் மொபைல் எனக் குழந்தைகள் கருதும்படி பழக்கப்படுத்துங்கள். தங்களின் 8 வயது வரை குழந்தைகள் பொம்மை செல்போனையே தன் செல்போனாக நினைத்து பழகும் படி செய்யுங்கள்.
கேம்ஸ் நீக்குதல்
உங்களது மொபைலில் உள்ள கேம்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள். குழந்தைகளின் நலனுக்காக உங்களது செல்போனில் கேம்ஸ் இல்லாமல் வைத்திருப்பது நல்லதுதான். 3 வயது வரை வீட்டினுள் உள்ள குழந்தைகளுக்கு மொபைல் கேம்ஸ் அறிமுகப்படுத்தாமல் இருப்பது மிக மிக முக்கியம்.
நிஜ விளையாட்டு
பொம்மைகளுடன் விளையாடுவது, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, பெரியவர்களுடன் விளையாடுவது எனக் குழந்தைகள் உடல் மற்றும் அறிவு தொடர்பான விளையாட்டில் ஈடுபடட்டும். இதுவே ஆரோக்கியம்.
இதையும் படிக்க: பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
நீங்கள்தான் பாஸ்
குழந்தைகளுக்கு நீங்கள்தான் பாஸ். நீங்கள் எப்படி சரியாக நடந்து கொள்கிறீர்களோ அதேபோலத்தான் குழந்தைகளும் நடந்து கொள்வார்கள். எந்நேரமும் செல்போனிலே நீங்கள் மூழ்கி இருந்தால், அப்படி என்னதான் இருக்கிறது எனக் குழந்தைகளும் செல்போனை ஆராயத் தொடங்குவார்கள்.
குழந்தை பருவத்தில் டெக்னாலஜி வேண்டாம்
குழந்தை பருவத்தில் விளையாட்டு, வளர்ச்சி, கொஞ்சல் போன்ற நல்ல விஷயங்கள் இருக்க வேண்டும். விளையாட்டு உடல் ரீதியான விளையாட்டாக இருப்பது நல்லது. வெறும் கண் மற்றும் விரல்கள் மட்டுமே வேலை செய்யகூடிய மூளை சலவையான டெக்னாலஜி விளையாட்டு வேண்டாம். மூளையின் செயல்திறனைவே எலக்ட்ரானிக் பொருட்களாக செல்போன், டாப்லெட் ஆகியவைப் பாதிக்கும்.
அதீத இயக்கம்
ஹைபர் ஆக்டீவ், ஏடிஎச்டி எனப் பல நடத்தைத் தொடர்பான பிரச்னைகளுக்கு ஒரு முக்கிய காரணம் செல்போன். வேகமாக ஓடும் விளையாட்டுகளை விளையாடி விளையாடி குழந்தைகளின் நடத்தையும் அதீத இயக்கத்துடன் மாறும். முரட்டுத்தனம் அதிகரிக்கும். மென்மை, பாசம், பொறுமை, அன்பு போன்ற நற்குணங்கள் மறைந்துவிடும். கேம்ஸ்களை விளையாட அனுமதிக்க வேண்டாம்.
உணவு வேளையில் செல்போனுக்கு தடை
சாப்பிட்டு கொண்டே டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்ற எதையும் செய்ய கூடாது. உணவில் உள்ள சத்துகள் உடலில் சேருவது தடுக்கப்படும். எவ்வளவு உண்கிறோம் என்ற அளவும் தெரியாது. பசிக்கு உண்கிறோம் என மனதில் பதியும். மென்று, சுவைத்து, உமிழ்நீர் கலந்து உண்பதும் சாத்தியம் இல்லாமல் போகும்.
செல்போனில் பேச அனுமதிக்க வேண்டாம்
குழந்தைகள் தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்ற யாரிடமாவது பேச வேண்டுமென்றால் வீட்டில் லாண்ட்லைன் வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து பேசும்படி பழக்கப்படுத்தலாம். செல்போன் கொடுத்து பேசுவதைத் தவிர்க்கலாம்.
தூக்கம் அவசியம்
வளரும் குழந்தைகளுக்கு தூக்கம் மிக மிக முக்கியம். தூக்கத்தில்தான் குழந்தைகள் அதிகமாக வளருவார்கள். மூளைக்கு ஓய்வு கிடைக்கும். மெலொடொனின் என்ற நொதி சுரக்கும். அடுத்த நாள் உடல், மூளை, மனம் ஆகியவை சீரான இயக்கத்தில் செயல்பட தூக்கமே உதவும். செல்போன், டாப்லெட், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களால் தூக்கம் குழந்தைகளுக்கு கெட்டுவிடும். வளர்ச்சியில் தடை ஏற்படும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்?
ஓரளவுக்கு கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க வழிகள்…
Image Source : L & T
ஈயர்போன் பயன்படுத்துங்கள். நல்ல தரமான ஈயர்போன் வாங்கி பேசலாம். 20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டாம். கட்டாயம் பேசும் சூழ்நிலை வந்தால், காதை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் இயர்போன் வைத்து பேசுங்கள். 30 நிமிடங்களுக்கு மேல் ஈயர்போன் பயன்படுத்த வேண்டாமே.
போனை சற்று கீழ் நோக்கி பிடித்தபடி பேசலாம்.
அதிக சிக்னல் இருக்கும் இடங்களில் பேசுங்கள். கொஞ்சம் காற்றோட்டம் அதிகம் உள்ள இடமாக இருக்கட்டும்.
இடது காதில் 10 நிமிடம் வைத்துப் பேசுங்கள்.
தனிமையில் இருந்தால் ஸ்பீக்கர் போட்டுகூட பேசலாம்.
குழந்தைகளிடம் செல்போனுக்கு பதிலாக லாண்ட் லைன் போன் கொடுத்து பேச வையுங்கள்.
மெசேஜ், மெயில், வாட்ஸ் ஆப்பில் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவசியம் எனில் மட்டும் போன் பேசுங்கள். அதிக நேரம் செல்போன் பார்த்தாலும் கண்களுக்கு கெடுதிதான்.
எதிலும் அளவுமுறை வைக்கப் பழகுங்கள். உங்கள் குழந்தைக்கு சொல்லும்முன் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: குழந்தைகளின் மூளை வளர்ச்சி, இயக்கத்துக்கு உதவும் மூளை விளையாட்டுகள்...
Source : L & T
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null