குழந்தைக்கு தரும் லன்ச் பாக்ஸ்... 21 ரூல்ஸ்... எதில் அலட்சியம் வேண்டாம்?

குழந்தைக்கு தரும் லன்ச் பாக்ஸ்... 21 ரூல்ஸ்... எதில் அலட்சியம் வேண்டாம்?

குழந்தைகளை இப்போதெல்லாம் 3 வயதிலே பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர். அதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்கள் செய்யும் சேட்டைதான். இருப்பினும் உங்கள் குழந்தை பள்ளி செல்லவும் தானாக உணவு உண்ணவும் தயாராகி இருக்குமா என்பது தெரியாது. பள்ளி குழந்தைகளுக்கு என சில லன்ச் பாக்ஸ் விதிமுறைகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

மிக குறைந்த வயதிலே குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்குகின்றனர். பெரும்பாலும் பள்ளி வகுப்பு 12 அல்லது 1 மணி வரைதான் இருக்கும். எனினும் நாம் அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் உணவு கட்டித் தருவோம். ஏனெனில் குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள்.

பள்ளியிலும் நிறைய குழந்தைகள் இருப்பதால் ஒவ்வொருவராக தனித்தனியாக குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாது . எனவே, பெற்றோர்தான் தன் குழந்தைகள் தானாக உண்ணக் கற்றுத்தர வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பும் உணவில் பெற்றோர் தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு விஷயத்தில் பெற்றோர் கவனிக்க வேண்டியவை

lunch box rules

இதையும் படிக்க: பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி

#1.சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

#2.குழந்தையின் லன்ச் பாக்ஸ், எளிதில் திறக்க கூடிய அளவுக்கும் அதேசமயம் சிந்தாத படியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

#3.சிறுதானிய உணவுகளால் செய்யப்பட்ட சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என செய்து கொடுத்து அனுப்பலாம்.

#4.இட்லி, தோசை, சப்பாத்தி, பராத்தா போன்றவை கொடுத்து அனுப்பினால் அதை சின்ன சின்னதாக கட் செய்து கொடுக்கலாம்.

#5.பிரெட்டில் காய்கறிகளை முழுசாக, பெரியதாக வைக்காமல் சின்ன சின்னதாக அறிந்து வைக்கலாம்.

#6.ஒரே உணவை வைக்காமல் 3 வித உணவுகளாவது லன்ச் பாக்ஸில் இருக்கட்டும்.

#7.கொஞ்சம் சாதம், கொஞ்சம் காய்கறிகள், கொஞ்சம் பழங்கள் என வைத்து அனுப்புவது நல்லது.

#8.விதவிதமாக லன்ச் வைத்து அனுப்பினால் குழந்தைகள் வீணாக்காமல் சாப்பிடுவார்கள்.

#9.ஒரு உணவு பிடிக்கவில்லை என்றாலும் வேறு உணவை அவர்களால் சாப்பிட முடியும். 3 விதமாக பிரித்து லன்ச் பாக்ஸை கட்டித் தர வேண்டும்.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?

#10.பிஸ்கெட் கொடுத்து அனுப்பினாலும் அதை கவர் இல்லாமல் பிரித்துக் கொடுத்து அனுப்புங்கள்.

#11.ஸ்பூன் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதேசமயம் கைக்குட்டையோ டிஷ்ஷூவோ இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

#12.குழந்தை எடுத்து செல்லும் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோல லன்ச் பாக்ஸூம் பிளாஸ்டிக்கால் தயாரித்ததாக இருக்க கூடாது.

#13.குழந்தையின் வாட்டர் பாட்டிலில் ஸ்ட்ரா இருந்தால் குழந்தை தண்ணீர் குடிக்க உதவியாக இருக்கும்.

#14.அசைவ உணவுகளைக் கொடுத்து அனுப்பினால் மிகவும் கவனத்துடன் கொடுத்து அனுப்புங்கள். மீனில் முள்ளோ இறைச்சி எலும்போ சவ்வோ இருந்தால் குழந்தையின் தொண்டையில் சிக்கி கொள்ளலாம்.

#15.முட்டை கொடுத்து அனுப்புவது சிறந்தது. வேகவைத்தோ ஆம்லெட்டொ பொடிமாஸ் போலவோ செய்து தரலாம்.

#16.காய்கறிகளை நன்றாக வேக வைத்து, சாஃப்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

#17.பழங்களைத் தோல் நீக்கி, சின்ன சின்ன சதுரங்களாக வெட்டிக் கொடுக்கலாம். அதை எடுக்க முள் கரண்டியும் வைத்து விடுங்கள். kids lunch box

இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…

#18.பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற, எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

#19.ஒரே மாதிரியான உணவுப் பட்டியலை பின்பற்றாமல் விதவிதமாக லன்ச் கொடுத்து அனுப்புவது நல்லது.

#20.ஈ மொய்த்த உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை உண்டால் குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

#21.சின்ன குழந்தைகள் மெதுவாக சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு போதிய நேரம் கொடுப்பது நல்லது.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

சரியான நேரத்துக்கு உணவு தரும் பழக்கம் உள்ளதா? அலட்சியம் வேண்டாம்!

பொதுவாக பெரியவர்களே சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, தூங்குவது கிடையாது. ஏனெனில் வேலை பளு, சூழல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். இதெல்லாம் குழந்தையின் கவனிப்பு முறைகளிலும் மாற்றமாக தெரியும்.

பெற்றோர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, தூங்குவது, எழுவது எனப் பழகி கொண்டால் குழந்தைகளும் அதையே பின்பற்றுவார்கள். இல்லையெனில் அவர்களை நல்வழிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

சரியான உணவை சரியாக சாப்பிடாத குழந்தைகள் பலவீனமாகவும் நோய் எதிர்ப்பு திறன் குறைந்ததாகவும் இருக்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null