குடலிறக்கம்/ஹெர்னியா: காரணங்கள் & குணப்படுத்தும் வைத்திய குறிப்புகள்!

குடலிறக்கம்/ஹெர்னியா: காரணங்கள் & குணப்படுத்தும் வைத்திய குறிப்புகள்!

குடலிறக்கம்/ குடல் இறக்கம் / ஹெர்னியா என்னும் உடல்நிலை பாதிப்பு வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரையும் தாக்குகின்றது. இந்த பதிவில் ஹெர்னியா என்றால் என்ன? குடல் இறக்கம் ஏற்படக் காரணங்கள் என்ன? குடலிறக்கத்தில் உள்ள பிரிவுகள் என்ன மற்றும் இது பிறந்த குழந்தைகளுக்குக் கூட வருமா? இந்த பாதிப்பு வராமல் தடுக்க வழி என்ன? இதற்கான பாட்டி வைத்திய குறிப்புகள் என்ன? மற்றும் பல தகவல்களையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்

ஹெர்னியா/குடலிறக்கம் என்றால் என்ன?

ஹெர்னியா என்பது பொதுவாக உள்ள ஒரு வகை உடல்சார்ந்த பிரச்சனை. இதனைக் குடலிறக்கம் என்று குறிப்பிடுவார்கள். அடிவயிற்றுப் பகுதியில் இந்த குடலிறக்கம் ஏற்படும். இதன் மூலம் அடி வயிற்றுப் பகுதிகள் வெளிவருகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகள் அனைத்தும் தசை படலத்தின் உள்ளே அமைந்திருக்கும். இந்த தசை படலத்தில் கிழி ஏற்படும் பொழுது, தானாக உறுப்புகள் வெளியே வந்துவிடும்.

இதை இப்படி எளிமையாக வேண்டுமானால் விளக்கலாம். அதாவது ஒரு மூட்டை வழியாக எலுமிச்சை கனிகள் உள்ளன என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மூட்டையில் சிறிய கிழிசல் ஏற்பட்டுவிட்டது என்றால் என்ன நடக்கும்? கனிகள் வெளியே வரத் தொடங்கும். அதே மாதிரியான விஷயம் தான் நம் உடலிலும் ஏற்படும்.அந்த வகையில் தான் ஹெர்னியா பிரச்சனை ஏற்படுகின்றது.

குடல் இறக்கம் வரக் காரணங்கள்

இந்த ஹெர்னியா ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

1.உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் தசை நார்கள் விலக வாய்ப்புள்ளது.

2.அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது, ஹெர்னியா பிரச்சினைக்கான அடிப்படை காரணமாகும்.

3.அளவுக்கதிகமான உடல் எடையோடு இருப்பதும் முக்கிய காரணம்.

4.பிரசவ நேரத்தில் பெண்கள் குழந்தை பெறுவதற்காக அதிக அளவு முக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவர். இதனாலே இவர்களில் ஒரு சிலருக்குப் பிற்காலத்தில் ஹெர்னியா பாதிப்பு ஏற்படலாம்.

5.அதிக அளவு தூரங்கள் அடிக்கடி பயணம் செய்வது, மணிக்கணக்கில் இருசக்கர வாகனங்களில் பிரயாணம் செய்யும் சூழல்.

6.மிகவும் அதிக கணம் கொண்ட பொருட்களைத் தூக்குவது.இப்படி கடினமான பொருட்களைச் சுமக்கும் போது ஹெர்னியா பாதிப்பு ஏற்படுவதற்கான சதவீதம் அதிகம்.

7.இருமல் மற்றும் தும்மல்.

ஹெர்னியா பிரிவுகள்

ஹெர்னியாவில் பல பிரிவுகள் உள்ளன. எந்த இடத்தில் ஹெர்னியா பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து இது மாறுபடும்.

1.தொப்புள்

2.வயிற்றின் முன் பகுதி

3.ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு

4.முன்பு சிகிச்சை செய்த இடங்கள்

5.தொடை மடிப்பு பகுதி

போன்ற பல்வேறு இடங்களில் ஹெர்னியா ஏற்படலாம்.

குடல் இறக்கம் அறிகுறிகள் என்ன?

1.மேலே குறிப்பிட்ட இடங்கள் ஏதாவது ஒன்றில் சிறிய உருண்டை அளவு புடைப்பு ஏற்பட்டிருக்கும்.

2.இந்தப் படைப்பைத் தொட்டால் வலி இருக்காது.

3.லேசாக இதனைத் தள்ளினால் உள்ளே சென்றுவிடும். படுக்கும் நிலையிலும் இந்த புடைப்பு தானே உள்ளே சென்றுவிடும். ஹெர்னியாவின் ஆரம்ப நிலை மற்றும் அறிகுறி இது.

4.அடுத்த கட்டத்தில் இந்த புடைப்பு மிகவும் பெரியதாகி விடும். வீக்கம் ஏற்படும்.

5.மிகவும் கடுமையான வயிற்றுவலி ஏற்படும்.

6.வாந்தி வயிற்று ,உப்புசம் போன்ற தொந்தரவுகள் நிலவும்.

7.மலச்சிக்கல் அதிகரிக்கும்.

8.ரத்த ஓட்டம் இதன்மூலம் தடைப்படும்.

9.உடனே உரிய சிகிச்சை எடுக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இறப்பு கூட ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு ஹெர்னியா ஏற்படுமா?

குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இவர்களைத் தொப்புள் சார்ந்த ஹெர்னியா தாக்குகின்றது. பிறந்த ஒன்றிரண்டு வாரங்களில் இந்த பிரச்சனை நிலவும். அதாவது தொப்புள்கொடி விழுந்த பின்னர் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த வகை ஹெர்னியாவிற்கு அறுவைசிகிச்சை அவசியமில்லை. மருந்து மாத்திரைகள் கூட பெரும்பாலான சதவீதம் தேவைப்படாது.

இது மாதிரியான சூழலில் குழந்தைகளுக்கு 2 வயது ஆவதற்கு முன்னரே இந்த பிரச்சனை தானாகச் சரியாகிவிடும். இருப்பினும் இதை அப்படியே அசட்டையாக விடாமல் மருத்துவரிடம் ஒருமுறை காட்டி கலந்தாலோசிப்பது சிறந்தது. தொப்புள் சார்ந்த குடல் இறக்கம் தானே நிவர்த்தி அடையாத பட்சத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.

ஹெர்னியா பாதிப்பு வராமல் தடுக்கும் வழிகள்

1.தினமும் உடற்பயிற்சி அவசியம்.

2.உயரத்திற்கு ஏற்ற அளவு உடல் எடையைப் பராமரிப்பது கட்டாயம்.

3.சத்து நிறைந்த உணவுகள் தேவை. காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் தானிய வகைகள் போன்றவற்றைச் சாப்பாட்டில் தினமும் சேர்ப்பது உகந்தது.

4.தினமும் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் பருக வேண்டும்.

5.புகை பழக்கம் கூடாது.

6.இரவு நேரத்தில் அளவான அளவு உணவு எடுத்துக் கொள்வது சிறந்தது.

7.அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்பு உகந்ததல்ல.

8.அதிக அளவு பருமன் உள்ள பொருட்களைத் தூக்க வேண்டாம்.

9.சைக்கிள் ,பைக் போன்றவற்றில் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டாம்.

ஹெர்னியா குணமாக உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்

அதிமதுரம்

குடல் இறக்க நோய் சரிசெய்ய அதிமதுரம் சிறப்பாக உதவும். நாட்டு மருந்துக் கடைகளில் அதிமதுரம் பொடியாக கிடைக்கும். இந்த பொடியைப் பாலில் கலந்து, வாரம் ஒரு முறை என்ற அளவில் அருந்த வேண்டும். இதன் மூலம் ஹெர்னியா மூலம் ஏற்பட்ட புடைப்பு மெல்ல குணமடையத் தொடங்கும்.

கற்றாழை

கற்றாழைக்குப் புண்களை ஆற்றும் தன்மை இயற்கையாக உள்ளது. கற்றாழையின் மேலே உள்ள தோல் பகுதியை நீக்கினால் உள்ளே வளவளப்பான பகுதி காணப்படும். இதனை எடுத்து சாறாக அரைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கற்றாழை சாறு அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஹெர்னியா பாதிப்பு நிவாரணம் அடையும்.

மிளகு

மிளகு பல்வேறு விதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதற்கு இயற்கையாகவே வீக்கங்களைச் சரி செய்யும் தன்மை உள்ளது. இதை தினமும் பாலில் கலந்து அல்லது மற்ற உணவை சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை

அளவுக்கதிகமான உடல் எடையோடு இருக்கும் பட்சத்தில், சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க முயற்சி செய்யுங்கள். தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கூடுதலாகக் காலை அல்லது மாலை நேரம் நடைப்பயிற்சி தவறாமல் கடைப்பிடியுங்கள். படிக்க: உடல் எடையை குறைக்க!

இஞ்சி

வீட்டிலேயே கிடைக்கும் ஒரு எளிமையான பொருள் இஞ்சி ஆகும். இந்த இஞ்சியானது குடலிறக்கம் மூலம் ஏற்பட்ட வலியைக் குறைக்க உதவும். இஞ்சி டீ தயாரித்துச் சாப்பிடலாம்.

தண்ணீர்

உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்குத் தண்ணீர் மிகச் சிறந்த தீர்வாகும்.
தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஹெர்னியாவால் ஏற்பட்ட வலி குறையும்.

மஞ்சள்

ஹெர்னியா தொல்லையால் பாதிப்படைந்தவர்கள், தினமும் காலை வேளையில் மஞ்சளைப் பாலில் கலந்து பருகலாம். இதன்மூலம் சிறந்த நிவாரணம் அடையலாம்.

சாப்பிட ஏற்ற உணவுகள்

ஹெர்னியா பாதிப்பு இருக்கும் சமயத்தில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

 • கீரை வகைகள்
 • பீன்ஸ் மற்றும் பட்டாணி
 • தானிய வகைகள்
 • பழச்சாறுகள்

சாப்பிடக் கூடாத உணவுகள்

ஹெர்னியா பாதிப்பு இருக்கும் சமயத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

 • எண்ணெய்யில் பொரித்த உணவுகள்.
 • அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகள்.
 • காப்ஃபைன் நிறைந்த உணவுகள்.
 • சிவப்பு இறைச்சி
 • மது
 • தக்காளி
 • கார்பனேட்டட் பானங்கள்
 • பதப்படுத்தப்பட்ட உணவுகள்
 • இனிப்பு வகைகள்
 • சிட்ரஸ் வகை பழங்கள்
 • துரித உணவுகள்

இந்த பதிவின் மூலம் ஹெர்னியா பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள், ஹெர்னியா பாதிப்பு ஏற்படும் தவிர்க்கும் வழிகள், இந்த பாதிப்பு நீங்க பாட்டி வைத்திய குறிப்புகள் வைத்தியக் குறிப்புகள் மற்றும் பல தகவல் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null