சானிட்டரி நாப்கின்களில் அதிக கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால் அதைத் தவிர்க்க நிறைய பேர் ஆர்கானிக் பேட் நோக்கி செல்கிறார்கள். சிலர் மென்சுரல் கப் பயன்படுத்த முன் வருகிறார்கள். மென்சுரல் கப் எப்படி பயன்படுத்துவது? அதில் உள்ள ப்ளஸ், மைனஸ் என்ன? அது நமக்கு பாதுகாப்பானதா? அனைவருக்கும் பொருந்தகூடியதா? இந்தப் பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.
பல தாய்மார்கள் மென்சுரல் கப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி கேட்டு இருந்ததால் இந்தப் பதிவு. மற்றபடி மென்சுரல் கப்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. சானிடரி நாப்கின், துணி நாப்கின், மென்சுரல் கப் போன்றவற்றை பயன்படுத்துவது அவரவர்களின் விருப்பம்.
மென்சுரல் கப்
சாப்டாக, வளையும் தன்மையில், சிலிக்கானில் தயாரிக்கப்பட்டிருக்கும்.
கப் போல மேலே வந்து, கீழே காம்பு போன்ற தோற்றத்தில் இருக்கும்.
அதன் அளவுகள் என்னென்ன?
S - Small, M - Medium, L - Large அளவுகளில் கிடைக்கும்.
சில நிறுவனங்களில் அதன் சுற்றளவு அளவு வைத்துப் பல அளவுகளில் கிடைக்கிறது.
அனைவருக்கும் பொருந்தகூடிய அளவுகளில் விற்கப்படுகின்றன.
S - Small, கல்லூரி மாணவர்கள், 25 வயதுக்கு கீழ் இருப்பவர்கள், திருமணமாகதவர்களுக்கு இந்த அளவு சரியாக இருக்கலாம்.
M - Medium - 25 வயது +, திருமணமானவர்களுக்கு இந்த அளவு பொருந்தலாம். உடலமைப்பு பெரிதாக இருப்பவர்களுக்கு இது சரியாக இருக்கலாம்.
L - Large - குழந்தை பெற்றவர்களுக்கு இந்த அளவு பொருந்தும்.
அவரவரின் உடல் நிலையை பொறுத்தும் அளவுகள் மாறுப்படும். நிறுவனங்களின் தயாரிப்புகள் பொருத்தும் அளவு மாறுப்படும்.
எனவே அளவு நபருக்கு நபர் மாறுப்படும். இங்கு சொல்லப்படுவது பொதுவான அளவுதான்.
நீங்கள் சரியாகப் பார்த்து வாங்குங்கள்.
மென்சுரல் கப் பாதுகாப்பானதா?
பலரும் மென்சுரல் கப்பை எப்படி பயன்படுத்துவது. அது உள்ளே போய்விட்டால் என்ன செய்வது எனப் பயப்படுகிறார்கள்.
இதுவரை பல பேர் மென்சுரல் கப்பை பயன்படுத்துகிறார்கள். யாருக்கும் உள்ளே சென்றது இல்லை. உள்ளே சென்றுவிடும் அமைப்பில் மென்சுரல் கப் இல்லை.
நாப்கின்களில் உள்ள கெமிக்கல்களை ஒப்பிட்டால் மென்சுரல் கப் எவ்வளவோ பரவாயில்லை.
இதையும் படிக்க : வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…
மென்சுரல் கப் பயன்படுத்தும்போது வலிக்குமா?
முதன் முதலில் மென்சுரல் கப்பை உள்ளே சொருகும்போது லேசாக வலிக்கும். அதன் பிறகு வலி தெரியாது.
எந்தவித அசௌகரிய உணர்வும் இருக்காது.
மென்சுரல் கப் லீக் ஆகுமா?
சரியான அளவில் நீங்கள் மென்சுரல் கப் பயன்படுத்தினால் லீக் ஆகாது.
சரியாக நீங்கள் பொருத்தி இருந்தாலும் லீக் ஆகாது.
அளவு மாறி, சரியாகப் பொருத்தாவிட்டால் லீக் ஆகலாம். இது தயாரிப்பின் தவறு அல்ல. நாம் சரியாகத் தேர்வு செய்யவில்லை. பொருத்தவில்லை.
அதிக ரத்தப்போக்கு இருப்பவர்களுக்கு பொருந்துமா?
நாம் இதுவரை நினைப்பது போல் நமக்கு லிட்டர் லிட்டராக ரத்தப்போக்கு ஆகாது.
சானிட்டரி நாப்கின் ரத்தத்தை உறிஞ்சுவதால், நாப்கின் முழுவதும் ரத்தத்தைப் பார்த்து நமக்கு அதிகமாக ரத்தம் வருகிறது என உளவியல் ரீதியாக நினைக்கிறோம்.
சிலருக்கு, உண்மையிலே அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். அவர்களுக்கும் இந்த கப் ஏற்றதுதான்.
மாதத்துக்கு வரக்கூடிய பீரியட்ஸ் பிளீடிங்கின் அளவு, 10-35 மி.லிதான்.
அதிக ரத்தபோக்கு எனில் 80 மி.லி வரை இருக்கும். அதற்கு மேல் இருக்காது.
மாதவிடாய் காலத்தில் 6-8 மணி நேரத்துக்கு ஒருமுறை கப்பை எடுத்து, ரத்தத்தைக் கழிப்பறையில் ஊற்றிவிட்டு கப்பை நன்கு கழுவி மீண்டும் வைத்துக்கொள்ளலாம்.
அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள், 4-5 மணி நேரத்துக்கு ஒருமுறை கப்பை எடுத்து ஊற்றி, சுத்தம் செய்து பின் மீண்டும் பயன்படுத்தலாம்.
பல நிறுவனங்கள் தயாரிக்கும் கப்கள் எல்லாம், 12 மணி நேரம் வரை கப்பை உள்ளே வைத்திருக்கலாம் என்கிறது.
நமது பாதுகாப்புக்காக நாம் 5-8 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். இது முன்னெச்சரிக்கைதான்.
நீங்கள் பழகிவிட்டால் 10 மணி நேரம் வரை கூட பயன்படுத்தலாம்.
ஒவ்வொருவரின் ரத்தப்போக்கு அளவை பொறுத்தும் நீங்கள் மாற்றும் நேரத்தை தீர்மானிக்கலாம்.
2-3 மாதங்கள் பயன்படுத்திய பின்னர், உங்களுக்கு தெரிந்துவிடும். ரொம்ப ஈஸிதான்.
இரவில் பயன்படுத்தலாமா?
8 மணி நேரம் வரை தூங்குபவர்கள், தாராளமாகப் பயன்படுத்தலாம். அதற்கு மேல் தூங்குபவர்கள் ஒருமுறை கழிப்பறைக்கு சென்று கப் எடுத்து ஊற்றிவிட்டு, பின்னர் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கப் வைத்துக்கொண்டு நடக்கலாமா, ஓடலாமா, வண்டியில் போகலாமா?
மென்சுரல் கப் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. நீச்சல்கூட அடிக்கலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
எப்படி பயன்படுத்துவது?
வெளி கழிப்பறைகளில் ஸ்குவாட் நிலையில் நின்று கூட மென்சூரல் கப் வைக்கலாம்.
அல்லது ஒரு காலை ஒரு சின்ன ஸ்டூலில் தூக்கி வைத்து இன்னொரு கால் தரையில் இருப்பது போன்ற நிலையில் உங்களை ரிலாக்ஸாக்கி கொண்டு நம் பிறப்புறுப்பு வழியே கப்பை உள்ளே சொருகலாம்.
படங்களைப் பார்க்க…
கப்பை படங்களில் இருப்பது போல மடித்த பின் சொருகலாம்.
பயன்படுத்தும் முன் இளஞ்சூடான தண்ணீரில் ஃபேஸ் வாஷ், ஹான்ட் வாஷ் அல்லது சோப் போட்டு கழுவிய பின் பயன்படுத்துங்கள். ஒவ்வொருமுறை கப் எடுத்த பின் மீண்டும் வைக்கும் போதும் இப்படியே செய்யலாம்.
பொது கழிப்பறையில் இந்த வசதிகள் இல்லையெனில், சாதாரண தண்ணீரால் நன்கு கழுவிய பின், நீங்கள் வைத்திருக்கும் டிஷ்ஷூவால் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
கைகளையும் கப்களையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் எந்த வித தொற்றோ பாதிப்போ வராது.
இதையும் படிக்க : சீரற்ற மாதவிடாய் பிரச்னைகளைப் போக்கும் 13 வீட்டு வைத்தியம்... ஒரு ஸ்பெஷல் ரெசிபி...
எப்படி எடுப்பது?
காம்பு போன்ற பகுதியை மெதுவாக இழுக்க கப் வெளியே வந்துவிடும். ரத்தத்தை ஊற்றி, சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக் கொள்ளலாம்.
கப் வைத்துக்கொண்டே சிறுநீர், மலம் கழிக்கலாமா?
சிறுநீர், ரத்தப்போக்கு, மலம் வரும் மூன்றுமே வேறு வேறு ஓட்டைகள். இதில் எதற்கும் தொடர்பு இல்லை.
கப் வைத்துக்கொண்டே சிறுநீர், மலம் கழிக்கலாம். கப்பை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
மிகவும் ஹைஜீனிக்காக இருப்பவர்கள், வேண்டுமானால் எடுத்து சுத்தம் செய்து மீண்டும் வைத்துக்கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்.
அலர்ஜி ஆகுமா? தொற்று வருமா?
சிலிக்கான், ரப்பர் லேடக்ஸ் போன்ற மெட்டீரியலில் தயாரிக்கப்படுகிறது.
பெரும்பாலும் அலர்ஜி ஆகாது. சுத்தமாக இல்லாமல் இருந்தால் மட்டும் தொற்று ஏதேனும் வரலாம்.
கைகளும் கப்பும் சுத்தமாக இருப்பின், எந்த பிரச்னையும் இல்லை.
கன்னித்திரை கிழியாதவர்கள் பயன்படுத்தலாமா?
கன்னித்திரை (hymen layer), இல்லாமலே கூட பிறக்கும் பெண்கள் உண்டு.
சிறு வயதிலே சைக்கிள் ஓட்டுவது, குதித்து விளையாடுவது, நீச்சல் அடிப்பது போன்றவற்றால்கூட கன்னித்திரை கிழியும்.
கன்னித்திரை கிழிவது பற்றி மிகவும் ஆலோசிப்பவர்கள், வேண்டுமெனில் நீங்கள் மென்சுரல் கப்பைத் தவிர்க்கலாம்.
இதைப் பற்றி கண்டு கொள்ளாதவர்கள், மென்சுரல் கப் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க : மீண்டும் அழகான கட்டுடல் சாத்தியமே... 5 ஈஸியான கார்டியோ பயிற்சிகள்...
மென்சுரல் கப்பின் விலை… எங்கும் கிடைக்கும்?
ரூ.350 லிருந்து கிடைக்கிறது. 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அந்தந்த பேக்கிங்கில் போட்டு இருக்கிறது.
உங்களது விருப்பப்படி நீங்கள் ஆண்டுக்கு ஒரு கப் எனப் பயன்படுத்துவதும் ஓகேதான்.
மெக்கல் ஷாப், சூப்பர் மார்கெட், ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம்.
மென்சுரல் கப் மைனஸ் என்ன?
கப்பை பொருத்தும்போது மட்டும் வலிக்கும்.
எடுக்கும்போது லேசாக வலிக்கும். மற்றபடி வலி இருக்காது.
ப்ளஸ் என்ன?
சானிடரி நாப்கின் ஆண்டு முழுவதும் பயன்படுத்தினால் அதிக பண செலவு.
ஒரு மென்சுரல் கப் ரூ. 350 லிருந்து தொடங்குகிறது. 3 ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
செலவு மிச்சம். சானிடரி நாப்கின்களின் கெமிக்கல் பாதிப்பு, அரிப்பு தொல்லையிலிருந்து விடுதலை.
இதையும் படிக்க : பிறப்புறுப்பு பகுதியில் வரும் பிரச்னைகள்… எதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null