யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்...

யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்...

பலருக்கு கர்ப்பம் வெற்றிகரமாக அமைகிறது. சிலருக்கு, பாதியிலே கருச்சிதைவும் ஏற்பட்டு விடுகிறது. என்ன காரணம் என்று தெரியாமல் திரும்பத் திரும்ப மனப்பதற்றத்தோடு குழந்தைக்கு முயற்சி செய்து தோல்வியை சந்திக்கிறார்கள். காரணங்களை தெரிந்துகொள்வது பிரச்னைகளை அறிந்துகொள்வதும் நல்லது. ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் கருச்சிதைவு நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருந்து, கருச்சிதைவு ஏற்படாமல் தற்காத்து கொள்வதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 20வது வாரம் முடிவதற்கு முன்னே சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். 15% - 25% பேருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்படும் பெண்களில் 80% பேருக்கு, முதல் மூன்று மாதத்துக்குள் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுவதாக சொல்லப்படுகின்றன.

கருச்சிதைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்…

லேசான ரத்தபோக்கு முதல் அதிக ரத்தபோக்கு ஏற்படுதல் தீவிரமான வயிற்று பிடிப்பு ஏற்படுதல் அடிவயிறு வலி காய்ச்சல் பலவீனமாகுதல் முதுகு வலி

கருச்சிதைவு ஏற்பட யாருக்கு அதிக வாய்ப்புகள்?

35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சர்க்கரை நோய் அல்லது தைராய்டு உள்ள பெண்கள் 3-4 முறை ஏற்கெனவே கருச்சிதைவு நடந்திருக்கும் பெண்கள்

கருச்சிதைவு ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?

தொற்று சர்க்கரை நோய், தைராய்டு இருந்தால் கருச்சிதைவு ஏற்படலம். ஹார்மோன் பிரச்னை நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருத்தல் உடல்ரீதியான பிரச்னைகள் ஏதேனும் இருத்தல் யூட்டரின் பிரச்னை இதையும் படிக்க : முதல் 3 மாதங்கள்... கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா? miscarriage reasons Image Source : istock
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

முதல் மும்மாதம்…. கருச்சிதைவு ஏற்பட்டால் என்ன காரணம்?

கிரோமோசம் பிரச்னை இருத்தல் பிளாசென்டா பிரச்னை - குழந்தைக்கு சரியான அளவில் ரத்தம் செல்லாமல் இருத்தல் அதிக உடல் எடை புகை, மது அதிகமாக காபி, டீ குடிப்பது - கெஃபைன் உணவுகள் சாப்பிடுவது

2வது மும்மாதத்தில் வரும் பிரச்னைகள் என்னென்ன?

நாட்பட்ட நோய்களும் ஒரு காரணம் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் அதிகமான ரத்தக்கொதிப்பு சிறுநீரக நோய் ஓவர் ஆக்டிவ் தைராய்டு சுரப்பு குறைவான ஆக்டிவ் தைராய்டு சுரப்பு ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம்

காரணங்களும் பிரச்னைகளும்...

தொற்றுகள்… ரூபெல்லா பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று எச்.ஐ.வி மலேரியா சிபிலிஸ் எனும் பிரச்னை ஃபுட் பாய்சன் சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டு ஃபுட் பாஸ்சனாகி கருச்சிதைவு ஏற்படும் நிலை. காய்ச்சப்படாத பால், வேக வைக்காத முட்டை சாப்பிடுவதால் வரும் ஃபுட் பாய்சன். சமைக்கபடாத உணவுகளை சாப்பிடுதல் கெட்டுப்போன இறைச்சி அல்லது சரியாக வேக வைக்கப்படாத இறைச்சி சாப்பிடுதல் பச்சை முட்டை குடிப்பது, ஹாஃப் பாயில் சாப்பிடுவது இதையும் படிக்க : கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்... உண்மை நிலை என்ன?

கர்ப்பப்பை வாய் பிரச்னை

சில பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருக்கலாம். கருவைத் தாங்கி பிடிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். 2வது மும்மாதத்தில் இந்த மாதிரி பிரச்னை உள்ளவர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடலாம். இதை cervical insufficiency என்பார்கள்.

பிசிஓஎஸ்

சிலர் பிசிஓஎஸ் பிரச்னையை அலட்சியப்படுத்துவார்கள். இயல்பான ஓவரியைவிட பெரிதளவில் காணப்படும். ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தும்.

வாழ்வியல் பிரச்னை

அதிகமாக மருந்துகளை உட்கொள்ளுதல், மது, புகைப்பழக்கம் ஆகியவை இருந்தால் கருச்சிதைவு ஏற்படும்.

உடல் தொடர்பான பிரச்னை

இது கொஞ்சம் அரிதுதான். இயல்பற்ற யூட்டரின், செப்டம் அல்லது பாலிப்ஸ், சர்விகல் பிரச்னை போன்றவை இருந்தால் 2 அல்லது 3வது மும்மாதத்தில்கூட கருச்சிதைவு நடக்கலாம்.

சில வகை மருந்துகள்

ரூமட்டாய்டு ஆர்த்தரிடிஸ் மருந்துகளை உட்கொண்டாலும் கருச்சிதைவு ஏற்படலாம். ஆக்னி, ஹார்மோனல் ஆக்னி, எக்ஸிமா தோல் நோய்க்கு மருந்து உட்கொண்டால் கருசிதைவு நடக்கலாம். சில வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டாலும் கருச்சிதைவு நடக்கலாம். இதையும் படிக்க : கர்ப்பிணிகளின் வயிறு பெரிதாக இருக்க 9 அறிவியல் காரணங்கள்

கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதை எப்படி அறிவது?

ரத்தபோக்கு இருத்தல், பொதுவான அறிகுறிகள் இல்லாமல் அதிக அளவில் அசௌகரியமான உணர்வைப் பெறுதல். காய்ச்சலுடன் அதிக ரத்தபோக்கு இருப்பது. காய்சலுடன் வலி, குளிர் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக சந்திக்கவும். தொற்றால் கூட கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம்.

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு மீண்டும் கர்ப்பம் உண்டாகுமா?

ஆம்… 85% பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தாலும் மீண்டும் கர்ப்பமாக முடியும். நார்மல் டெலிவரி பெற்றுகொள்ள முடியும். ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் செய்யும். கருச்சிதைவு ஏற்பட்டால் இனி மீண்டும் நீங்கள் கர்ப்பமாக மாட்டீர்கள் என அர்த்தம் கிடையாது. இது குழந்தையின்மை பிரச்னை கிடையாது. 1 - 2 % பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் பிரச்னை இருக்கும். சில ஆய்வார்கள் இதை ஆட்டோ இம்யூன் நோய் எனச் சொல்கிறார்கள். இவர்கள் சரியான மருத்துவரை அணுகி, குழந்தைக்கு திட்டமிடும் முன்னரே ஆலோசனை பெறுவது நல்லது. இரண்டு முறை யாருக்காவது கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்த முறை தாங்களாகவே குழந்தைக்கு திட்டமிடாமல், ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு தீர்மானிக்க வேண்டியது அவசியம். இதையும் படிக்க : கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா? miscarriage reasons Image Source : pinterest

கருச்சிதைவு நடந்த பெண்கள் மீண்டும் கருத்தரிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டாலே அடுத்த முறை அவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் குழந்தைக்கு திட்டமிடுவது நல்லது. சில மருத்துவர்கள், குறைந்தது 3-6 மாதமாவது இடைவேளி விட்டு மீண்டும் கருத்தரிக்க திட்டமிடும்படி சொல்வார்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு பெண் இருக்க வேண்டியது முக்கியம். ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அதற்குதானே காரணம் என நினைத்துவிட கூடாது. பல்வேறு மருத்துவ ரீதியான பிரச்னைகள் இருக்கலாம் என்பதால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

கருச்சிதைவை தடுக்க முடியுமா?

அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்க முடியாது. ஏனெனில், அது இயல்பான கருத்தரிப்பாக இருக்க முடியாது. ஆனால், கருத்தரிக்க திட்டமிடும் முன்னரே மருத்துவரை சந்தித்து விட்டால், நிச்சயம் அடுத்த கருத்தரிப்பு வெற்றிகரமானதாக அமைய வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு ஏதேனும் பிரச்னை உள்ளது எனத் தெரிந்தால் அதற்கான சிகிச்சைகளை மருத்துவரே தருவர். தாயின் உடல்நலத்தைத் தேற்றி, தக்க ஆலோசனை மருத்துவர் வழங்கி, அதை சரியாக பின்பற்றினால் வெற்றிகரமாக கருவை காப்பாற்றி, குழந்தையை பெற்றெடுக்கும் வாய்ப்புகளும் அதிகம். இதையும் படிக்க : கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null