என் குழந்தையின் முதல் ஸ்பரிசம்  - என் கதை

என் குழந்தையின் முதல் ஸ்பரிசம் - என் கதை

அது லேசான  வெயிலோடு காணப்பட்ட ஒரு மாலைப் பொழுது.நான் என் கணவரோடு  மருத்துவமனையின் ரிசப்ஷனில் நின்று கொண்டிருக்கிறேன்.அவர் எனக்காகப்  படிவங்களை நிரப்பிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னே நின்று கொண்டிருந்த எனக்குச்  சிறிது பயம் மற்றும் பதட்டமான உணர்வு ஏற்பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படப் போகிறேன். நாளை எனக்கு சிசேரியன் நடக்க உள்ளது.

 

இப்போது என்னை இங்கே சேர்த்து விட்டு கணவன் மற்றும் பெற்றோர்கள் சென்று விடுவார்கள். அதற்குப் பிறகு நான் மிகவும் தனிமையாகவும் , பயமாகவும் உணரப் போகிறேன் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்குள் வேறு சில விஷயங்களில்  கவனத்தை செலுத்த வேண்டியதாக இருந்தது. சிசேரியனுக்கு முன்பு தேவையான டெஸ்டுகள் எல்லாம் எனக்கு எடுக்கப்பட்டன. கடைசியாக எடுக்கப்பட்ட ஸ்கேனில் குழந்தை பிரீச் பொசிஷனில்(தலைகீழ் நிலை) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலே எனக்கு சிசேரியன் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

 

ஒவ்வொரு தாய்க்கும்  தன் குழந்தையின் நலம் கருத்தில் பட்டால்  கூடவே அதிகமான வலிமையும் , மனவுறுதியும் பிறந்துவிடுகின்றன என்பது சுவாரசியமான உண்மை.. அதனாலே என்னுடைய டாக்டர்,எனக்கு சிசேரியனை தேர்வு செய்தபோது ,நான் உடனே ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் அதுதான் என் குழந்தைக்குப் பாதுகாப்பானது.

 

அல்ட்ரா சவுண்டு, யூரின் மற்றும் ரத்த  டெஸ்ட் எல்லாம் முடிந்த பிறகு, எனக்கு மிகவும் சிறிய அளவில் இரவு உணவு தரப்பட்டது. பிறகு என்னைத் தூங்கச் சொன்னார்கள். அன்றைய இரவு மிகவும் மெதுவாக நகர்ந்த மாதிரி எனக்கு இருந்தது. என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் நான் இப்படியும் ,அப்படியும் மாறி மாறி படுத்துக்கொண்டே இருந்தேன். அன்று எனக்குக் கவலை மற்றும் மகிழ்ச்சி  போன்ற உணர்வுகள் கலந்து வந்துகொண்டே இருந்தன. அடுத்த நாள் காலையில் நான் எழுந்த பொழுது என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.

 

நான் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த பொழுது, என் கணவர் மற்றும் என் அப்பா அம்மா எனக்காகக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்த உடனே எனக்குத்  தெம்பு கிடைத்த மாதிரி இருந்தது. பிறகு நான் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று விட்டேன். மயக்க மருந்து டாக்டர் எனக்கு ஸ்பைனல் அனஸ்தீசியா செலுத்தினார். கொஞ்ச நேரத்தில் என் இடுப்பிற்குக் கீழ் பகுதி மறத்த மாதிரி இருந்தது. நான் அப்படியே படுத்து இருக்கிறேன், சிசேரியன் தொடங்கியது. என் உடல் உணர்வற்று இருந்தபோதிலும், எனது கீழ் வயிற்றுப் பகுதியில் ஏதோ அழுத்தம் ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது.

 

சிசேரியன் நடக்கும் போது டாக்டர் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தார். சீக்கிரம் உன் குழந்தை வரப்போகிறது என்று சொன்னார். திடீரென்று ஒரு அதிகமான அழுத்தத்தை என் வயிற்றுப் பகுதியில் உணர்ந்தேன். அடுத்த சில நொடிகளில் என் குழந்தையின் அழுகுரல்,’வீல்…’ எனக் கேட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை ,என் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது. இதற்கு முன்பு என் வாழ்வில் இதுவரை இப்படி ஒரு உணர்வை நான் பெற்றதே இல்லை. நான் இப்போது அம்மா ஆகிவிட்டேன். என்னால் இதை நம்பவே முடியவில்லை.

 

உனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று என் டாக்டர் சொன்னார். இதற்கு மேல் என்னால் ஒரு கணம் கூட அவனைப் பார்க்காமல், தொடாமல் , தூக்காமல்  இருக்க முடியாது என்று தோன்றியது. உடனே நர்ஸ் என் அருகில் அவனை எடுத்து வந்துவிட்டார். எனக்கு உடனே எழுந்து அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் என் கீழ்ப் பகுதி முழுவதும் மறத்து இருப்பதால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.நர்ஸ் ஒரு அற்புதமான விஷயத்தைச் செய்தார்.அவனை என் மார்பின் மீது கிடத்தி , அவனது  கன்னம் என்னுடைய முகத்தைத் தொடுவது போல வைத்தார்.

 

நான் எப்படி அந்த நொடியில் உணர்ந்தேன் என்பதை விவரிக்க முடியாது. உண்மையாலுமே என்னால் அதை வார்த்தைகளால் விளக்க முடியாது.இது போல ஒரு அற்புதமான உணர்வு எதுவும் இருக்க முடியாது. அது ஒரு மேஜிக் போல இருந்தது. சிறிது நேரத்தில் அவனைப் பரிசோதனைக்காக எடுத்துவிட்டனர். பிறகு என்னை ஓய்வு அறைக்கு எடுத்துச் சென்றனர். சில நொடிகளில் நான் அசதியில்  தூங்கி விட்டேன்.

 

பல மணி நேரங்களுக்குப் பிறகு நர்ஸ் என்னை எழுப்பி விட்டார். என் கண்களில்  முதலில் பட்ட காட்சி, நர்ஸ் என் குழந்தையைக் கையில் வைத்து இருந்ததுதான். சிசேரியனுக்கு பிறகு அவனை மிகவும் சிறிய காலமே பார்த்த உள்ளோம் என்பது என் நினைவுக்கு வந்தது. உடனே அவனைத் தூக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற ஏக்கம் எழுந்தது.அவனை முதன்முதலாக வாங்கி அணைத்துக் கொண்டது ஒரு அழகான அனுபவம்.என் வாழ்நாளில் இது மாதிரியான விஷயமே நடந்ததில்லை என்று சொல்லலாம். அவன் மிகவும்  அழகாகவும் ,குட்டியாகவும் இருந்தான். அவன் ஒரே நேரத்தில் என்னை பலமாகவும் ,பலவீனமாகவும் மாற்றிக் கொண்டிருந்தான்.

 

நர்ஸ் எனக்கு அவனை எப்படிச் சரியாகப் பிடிப்பது என்று சொல்லிக்கொடுத்தார். அவர் என்னை அவனுக்கு உணவு தரச் சொன்னார். முதன்முதலாக அவன் தாய்ப்பாலை அருந்திய பொழுது,நான்  அவனது பசியை உணர்ந்தேன். அவன் என் தொடுகைக்காகவும் , அரவணைப்பிற்காகவும், என் தாய்ப்பாலுக்காகவும் ஏங்கி உள்ளான் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவனது குட்டி மேனி என்னை மிக நெருக்கமாகத் தீண்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நான் உணர்ந்தது இதுதான். இந்த உலகத்திலேயே குழந்தையின் முதல் ஸ்பரிசத்தை விட  உன்னதமான விஷயம் ஒன்றுமில்லை.

 

சீக்கிரம் நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்   ஆனேன். என் குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். அவனது முதல் ஸ்பரிசம் எப்படியோ ,அதே போல அவனது முதல் குளியலும் மறக்க முடியாத விஷயமாக எனக்கு அமைந்தது. அவனுக்கு நான் பேபி டவ் பயன்படுத்தினேன். இந்த விஷயம் என் குழந்தையின் முதல் ஸ்பரிசத்தை தொடர்புப்  படுத்திய மாதிரி எனக்கு இருந்தது. அது மிகவும் மென்மை மற்றும் பாதுகாப்பானதாக இருந்தது.. என் குழந்தைக்குக் சரியானதைத் தேர்வு செய்துள்ளோம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என் குழந்தையின் மிக மென்மையான சருமத்திற்கு பேபி டவ் பாதுகாப்பானது என்பதை நான் கண்டுபிடித்தேன். இன்று நான் என்  குழந்தைக்கு பேபி டவ்வை தேர்வு செய்ததற்காகப் பெருமைப்படும் அம்மா!அவன் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளேனோ, அதேபோல அவனது சருமத்தின் மீதும் மிகவும் அக்கறை வைத்துள்ளேன் என்பது உண்மை.

 

இதை உங்களுக்கு வழங்கியது பேபி டாவ்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null