நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

நகங்கள்தான் ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்வார்கள். நகங்கள் ஆரோக்கியமாகக் காட்சியளித்தால் உடலும் நன்றாக இருக்கிறது என அர்த்தம். பெரும்பாலான தாய்மார்களுக்கு அதிகமான வேலை, போதிய ஊட்டச்சத்து இல்லாதது, நோய்களின் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் நகங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் நகத்தில் சில அறிகுறிகள் தென்படும். அதைப் பார்த்து என்னென்ன நோய்கள் இருக்க கூடும் எனக் கண்டறியலாம். பெண்கள் பொதுவாக வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு எனத் தன் உடல்நலத்தைப் பார்க்காமல் எப்போதும் அவசர சூழலிலே இருப்பார்கள். ஒருமுறை உங்களின் உடல்நலத்தை செக் செய்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணிகள், தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் நகங்களைப் பார்த்து ஒரு முறை பரிசோதித்து கொள்ளுங்கள்…

நகங்கள் காட்டும் நோய் அறிகுறி 

 • வெளீர் நகம் – ஈரல் பாதிப்பு, ரத்தசோகை
 • நகத்தின் கீழ் பகுதியில் வெள்ளை – ஆக்ஸிஜன் அளவு குறைந்து இருத்தல்
 • நகங்கள் வெளுத்து குழியாக இருத்தல் – ரத்தசோகை
 • நகங்களின் வளர்ச்சி குறைதல், பாதி நகம் சிவப்பாக இருத்தல் – சிறுநீரக பாதிப்பு
 • மஞ்சள் நிற நகம் – மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு
 • நீல நிறம் – நுரையீரல், இதய தொடர்பான பிரச்னைகள், ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பது
 • நகத்தில் சிவப்பு நிறம் – இதய தொடர்பான பிரச்னை
 • நகத்தில் பச்சை நிறம் – பூஞ்சைப் பாதிப்பு, பாக்டீரியா, அலர்ஜி போன்றவை
 • நகத்தில் வெண் திட்டுக்கள் – சர்க்கரை அளவு சரியாக இல்லாதது, சத்து குறைபாடு
 • நகத்தில் மஞ்சள் கோடுகள் – புகை பிடித்தலால் ஏற்பட்ட பாதிப்பு, ரசாயன மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு
 • சின்ன குழிகள், வெடிப்பு, செதில்களாக உரிதல் – சோரியாஸிஸ்

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெறுங்கள்.

இதையும் படிக்க: பெண்கள், குழந்தைகளுக்கு வரும் ரத்தசோகையை தடுக்கும் உணவுகள்

நகங்களுக்கான சத்துகள்

nails disorders

முதலில், நகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நகத்துக்குத் தேவையான சத்துகள் எலும்புகளிலிருந்து கிடைக்கிறது.

நாம் உண்ணும் உணவின் சத்து, பிரிக்கப்பட்டு எலும்புகளுக்கு சேர்ந்து வலுப்பெற செய்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே நகங்களின் பலமும் பலவீனமும் தெரிய வரும்.

நகங்களுக்குத் தேவையான சத்து, குடலில் இருந்து பிரிக்கப்பட்டு நகங்களுக்கு சேர்கிறது.

நகங்களின் பாதிப்பு எப்போது?

கெமிக்கல்ஸ் கலந்த சோப், டிடர்ஜென்ட், டிஷ்வாஷ் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் நகங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

தரமில்லாத நெயில் பாலிஷ் போட்டு, அதை முறையாக நீக்காமல் இருந்தாலும் பிரச்னைதான்.

உள்ளுறுப்புகளின் பாதிப்பும்கூட நகத்தின் பாதிப்பாக காட்டலாம்.

உடலில் என்ன பாதிப்பு?

உண்ட உணவு சரியாக செரிக்காமல், அவை ரத்தத்தில் கலக்கப்பட்டு தோலில் பாதிப்பு தெரியும். இதனாலும் நகங்களும் பாதிக்கலாம்.

உள்ளுறுப்புகளின் பிரச்னையும் நகத்தில் தெரியும்.

இதையும் படிக்க:  3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்

நகங்களை ஆரோக்கியமாகப் பாதுகாப்பது எப்படி?

நகங்களுக்கான வீட்டு வைத்தியம்:

மருதாணி

மருதாணி இலையை அரைத்து நகங்களுக்கு பூசிவிட்டு, காலையில் அதை நீரில் கழுவி விடலாம்.

coconut oil for nails

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயை கால் நகங்கள், கை நகங்களில் தடவிக் கொண்டு இரவில் படுத்து தூங்கலாம். மறுநாள் கழுவி கொள்ளலாம். ஒரு மாதம் செய்திட பலன் தெரியும். பிறகு வாரம் 2 முறை செய்தாலே போதும்.

கடுக்காய்

கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்து இரவில் பூசிவிட்டு, மறுநாள் காலை அதைக் கழுவி விடலாம். இரண்டு மாதம் வரை செய்து வரலாம்.

கற்றாழை

கற்றாழையைத் தோல் நீக்கி, நன்கு தண்ணீரில் அலசி, அந்த ஜெல்லை கூழாக்கி நகங்களுக்கு பூசி விரைவில் நகங்கள் பொலிவு பெறும். வாரம் 4 முறை செய்யலாம்.

ஆலிவ் எண்ணெய்

olive oil for nails

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி, அதை நகத்தில் பூசி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு காலையில் எழுந்ததும் கழுவிக் கொள்ளலாம்.

லெமன்

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து லேசாக சூடுப்படுத்தவும். இதில் நகங்களை 10 நிமிடத்துக்கு ஊறவிட்ட பிறகு கழுவலாம்.

கல்லுப்பு

கண்ணாடி பவுலில் இளஞ்சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் கல்லுப்பு போட்டு, அந்த சூட்டிலே அப்படியே 10 நிமிடங்கள் நகங்களை வைக்க வேண்டும். பிறகு வெறும் நீரால் கைகளை அலசவும். இதனால் கிருமித் தொற்றுகள் நீங்கும். நகங்கள் உறுதியாகும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 1 டம்ளர் இளஞ்சூடான நீர் கலந்து, அப்படியே 10 நிமிடங்கள் நகங்களை வைக்க வேண்டும். பிறகு வெறும் நீரால் கைகளை அலசவும். நகங்கள் உறுதியாகும். அடிக்கடி நகங்கள் உடையாது.

இதையும் படிக்க: வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

விட்டமின்

vitamin e oil for nails

தூங்க செல்லும் முன் விட்டமின் இ எண்ணெய் காப்சூல்களை உடைத்து, அதில் உள்ள எண்ணெயை நகங்களுக்கு விட்டு 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்திட அழகான நகங்களாக மாறிவிடும். வாரம் 2 முறை செய்யலாம்.

டீ ட்ரீ எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் 5 துளி டீ ட்ரீ எண்ணெய் விட்டு கலந்து நகங்களில் பூசி 30 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் அலசி விட வேண்டும்.

கிரீன் டீ

கிரீன் டீ, மூலிகை டீ அதைத் தயாரித்து, அதை பவுலில் ஊற்றி நகத்தை அந்த பவுலில் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். வாரத்தில் 2 நாள் இப்படி செய்திட நல்ல பலன் கிடைக்கும்.

வாஸிலின்

moisturiser for nails

வாஸிலின் இருந்தால், அதை நகங்களுக்கு பூசி, நன்கு மசாஜ் செய்து, பருத்தி கிளவுஸில் அணிந்து இரவில் அப்படியே விட்டு, மறுநாள் காலை கழுவி விடலாம்.

ஹோம்மேட் முட்டை ஓடு பொடி

முட்டை ஓடுகளை சேமித்து வைத்து, அதை உலர வைக்கவும்.

உலர்ந்த முட்டை ஓடுகளுடன் பாதாம், ஃபிளாக்ஸ் விதைகள் தலா 1 ஸ்பூன் சேர்த்து பவுடராகி வைத்துக் கொள்ளவும்.

இந்த பவுடரை தினமும் 1 ஸ்பூன் எடுத்து பாலுடன் சேர்த்து, பசையாக்கி நகங்களில் மேல் தடவலாம். நன்கு மசாஜ் செய்யலாம். ஒரு மாசம் இதை சரியாக பின்பற்றி வர நகங்கள் ஆரோக்கியமாகும்.

இதையும் படிக்க: குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் 15 உணவுகள்

பயோடின் சத்துள்ள உணவுகள் நகங்களுக்கானப் பாதுகாப்பு

 • முட்டை
 • முழு தானியங்கள்
 • கேரட்
 • தக்காளி
 • மீன்
 • பாதாம்
 • காலி ஃப்ளவர்
 • வெள்ளரி
 • ஸ்டாபெர்ரி
 • பருப்பு – பயறு வகைகள்
 • வால்நட்
 • பாதாம்

இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள நகங்கள் அழகாகவே இருக்கும். பொலிவாகவும் காணப்படும். நகங்கள் உறுதியாகவே இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null