குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளை தெரிந்துகொள்ளுங்கள்...

குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளை தெரிந்துகொள்ளுங்கள்...

குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்னவென்றால் அது தாயின் கடமைதான். தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின் அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான இடம் உண்டு. இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.

தாய் செய்யும் தவறுகள் என்னென்ன?

 • ஒவ்வொரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. பிற குழந்தைகள் அல்லது அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச கூடாது.
 • பிற குழந்தைகளின் நல்ல பழக்கங்களை காண்பித்து அதுபோல தானும் வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் அறிவுறுத்தலாம்.
 • குழந்தை ஒரு வயது ஆனதும் ஓடியாடி விளையாடும்போது சில தாய்மார்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. இது தவறு. சிறிது நேரமாவது குழந்தையுடன் ஓடியாடி விளையாடுவதுதான் சரி.
 • வீட்டில் சண்டை போன்றதை பார்க்கும் குழந்தைகள் மனதால் வெகுவாக பாதிக்கின்றனர். இதைத் தாயும் தந்தையும் சேர்ந்தே தவிர்க்க வேண்டும்.
 • பிடிவாதம் செய்யும் குழந்தைகளை அடிப்பது தவறு. பிடிவாதமாக உள்ள குழந்தைக்கு முதல் முறையில் விட்டுக் கொடுத்து பின் பிடிவாதம் செய்ய கூடாது எனச் சொல்லலாம்.
 • கிள்ளுவது, கொட்டுவது, அடிப்பது, கடுஞ்சொற்களில் திட்டுவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
 • குழந்தை தவறு செய்துவிட்டால் பாசத்தால் கண்டிக்காமல் இருப்பது பெரும் தவறு. சில நிமிடங்கள் பேசாமல் இருந்து, பின் குழந்தையை கண்டித்து மெதுவாக புரிய வைத்துவிட வேண்டும்.
 • தன் குழந்தை மற்ற குழந்தைகளை அடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடித்து விளையாடினால் உடனே தடுத்து கண்டிப்பதும் அவசியம்.
 • டிவியை பேட்டால் அடிப்பது, ரிமோட்டை தூக்கி போடுவது போன்றவற்றை குழந்தைகள் செய்தால் அதன் மதிப்பு, அதன் முக்கியத்துவம், அந்தப் பொருளின் விலை போன்றவற்றை சொல்லி இச்செயல்களை தடுக்க புரிதல் ஏற்படுத்தி விடலாம்.
 • குழந்தை உண்ணும் தின்பண்டங்களைத் தன் குழந்தைக்கு என வைத்துக்கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் குழந்தையையே கொடுக்குமாறு சொல்லி அறிவுறுத்த வேண்டும்.
இதையும் படிக்க: பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா? parenting
 • பொய் சொல்வதைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர் அதிகமாக உள்ளனர். ஆரம்பத்திலே பொய் சொல்ல கூடாது. பொய் சொன்னால் பிறர் கேலிக்கு ஆளாக வேண்டி இருக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.
 • குழந்தைகள் தவறாக, மரியாதைக் குறைவாக பேசும்போது பார்த்து ரசிக்க கூடாது. வீட்டில் இருப்பவர்கள் சிரித்தால், அது குழந்தைகளின் மனதில் பதிந்து வெளியிடங்களிலும் அதையே செய்யும்.
 • குழந்தை கேட்டவுடன் வெளி உணவுகளை வாங்கி தருவது தவறு. அதே உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடலாம் எனச் சொல்லி புரிய வைக்கலாம். மேலும், வயிறுக்கு கெடுதி என்றும் சொல்லுங்கள்.
 • குழந்தைக்கு தேவையில்லாமல் காசு கொடுப்பதைத் தவிருங்கள். காசை உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டலாம். அந்தப் பணத்தை குழந்தைக்கான உடை, மற்ற முடியாத குழந்தைகளுக்கு நோட், பேனா வாங்கி தருவது மிக சிறப்பு. இதெல்லாம் குழந்தையை நல்வழிப்படுத்தும்.
 • குழந்தையிடம் பெற்றோர் அன்பாக, அரவணைப்பாக இருப்பதை அடிக்கடி சொல்லுங்கள். குழந்தைக்கு இதை உணர்த்துங்கள்.
 • நேரமின்மை காரணத்தால் பெற்றோர் குழந்தைகளிடம், பொறுமையாக இருப்பது இல்லை. பொறுமை இல்லாத பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் அதிக இடைவெளி விழும்.
 • குழந்தை செய்யும் ரசிக்கும்படியான குறும்புகளை ரசிப்பதும் தவறை கண்டிப்பதும் சமபங்காக இருத்தல் நல்லது. ஆனால், தற்போது இது குறைந்து வருகிறது.
 • பிற குழந்தையை ஒப்பிட்டு பாடுவது, ஆடுவது, படிப்பது போல தன் குழந்தை இல்லை என வருத்தப்படுவதும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதிகமாகி வருகிறது. இதைத் தவிர்க்கவும்.
 • குழந்தையை அடிக்கடி பாராட்டுவதில்லை. இதனால் குழந்தைகள் சோர்வடையும். முடிந்த அளவு குழந்தையை பாராட்டுங்கள்.
 • குழந்தையிடம் நட்பாகவும் கண்டிப்பாகவும் இருந்தால் நல்ல குழந்தையை வளர்த்து எடுக்க முடியும்.
 • அதிக நாடகங்களைப் பார்ப்பதை அவசியம் தவிருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் குழந்தை கவனிக்கின்றது என மறக்க வேண்டாம்.
 • நன்மை செய்தால் நல்ல விளைவு, தீமை செய்தால் தண்டனை கிடைக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.
 • ஆண் குழந்தைக்கு இரண்டு முட்டை, பெண் குழந்தைக்கு ஒரு முட்டை தருவது என வேறுபாடு காண்பிக்க கூடாது.
 • ஆண் குழந்தைதான் நடனம், விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெண்கள் அல்ல என பெண் குழந்தைகளைத் தடுப்பது சரியான வளர்ப்பு முறை அல்ல.
 • அன்பு கலந்த கண்டிப்பு, நியாயமான கோபம், தேவையானவற்றுக்கு பாராட்டு என சரியான முறைகளை கையாளுங்கள்.
 • அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், நட்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான அர்த்தங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து நல்ல குழந்தையாக மாற்றுங்கள்.
இதையும் படிக்க: நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? parenting tips
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

தாயின் கடமைகள்

 • ஒரே நேரத்தில் குழந்தையை எழுப்பி விடுதல். அந்த நேரத்தை சரியாக குழந்தைக்கு பழக்கப்படுத்தி விடுதல்.
 • எழுந்தவுடன் சிறுநீர், மலம் கழிக்க பழக்குதல்.
 • உறவுப் பெயர்களை மரியாதை முறையாக சொல்லி அழைக்க கற்று தருதல்.
 • அனைவருக்கும் மரியாதை தருதல்.
 • பொய் பேசும் குழந்தைகளைக் கண்டித்தல்.
 • தவறான தொடுதலை பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல்.
 • பாலியல் கேள்விகளுக்கு தயங்காமல் சரியான, புரியும்படியான பதில் தருதல்.
 • உடலமைப்பு, தோற்றம் பற்றி கேலி செய்வதைத் தடுத்தல். தவறு என்று புரிய வைத்தல்.
 • எளிய வேலைகளை தாங்களே செய்ய கற்றுக் கொடுத்தல்.
இதையும் படிக்க: குழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய தவறுவது என்னென்ன? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null