வாயில் வரும் புண்களை சரி செய்யும் சிம்பிளான வீட்டு வைத்திய முறைகள்...

வாயில் வரும் புண்களை சரி செய்யும் சிம்பிளான வீட்டு வைத்திய முறைகள்...

குழந்தைகளின் வாயில் புண்கள் வருவது இயல்புதான். வாயில் புண்கள் வளர பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உங்கள் குழந்தைக்கு வாய்ப் புண் இருந்தால், அதற்கான காரணங்களை கண்டறியுங்கள். வாய்ப் புண் வந்தால் என்ன செய்யலாம்? அதற்கான தீர்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். உதடு, ஈறு பகுதிகளில் வெள்ளையானத் திட்டுகள், சிவப்பாகுதல், வீக்கமடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வாய் புண்கள் வரும் பிரச்னை எனச் சொல்வோம். வாய்ப் புண்ணை அடிக்கடி தொடும்போது, உதடு ஸ்ட்ரெச் ஆகும்போது, பேசும்போது, மெல்லும் போது வலி வரலாம். குழந்தைக்கு சிரமமாக இருக்கலாம். வாய்ப் புண் தொற்று நோய் அல்ல.

வாய்ப் புண் வர காரணங்கள்…

பசியின்மை வாந்தி ஸ்ட்ரெஸ் கீழே விழுந்து அடிபடுதல் விட்டமின் மற்றும் தாதுக்கள் குறைபாடு உடல் சூடு வயிற்றுப் புண்கள் உணவு அலர்ஜி

என்னென்ன அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்திக்கலாம்?

உடல் எடை குறைதல் வயிறு வலி காரணமே இல்லாத காய்ச்சல் மலத்தில் ரத்தம் வருதல் கழுத்து இறுக்கமாகுதல் ஆசன வாயில் புண் இருப்பது இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வளர்ச்சி, எடை அதிகரிப்பு, எனர்ஜி தரும் உணவுகள்… mouth ulcer in kids Image Source : joltvapor
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

வாய்ப் புண்களை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்…

தேங்காய்ப் பால்

தினமும் ஒரு கிளாஸ் தேங்காய்ப் பாலை கருப்பட்டி அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்க கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது. வீட்டில் தயாரித்த தேங்காய்ப் பால் பாதுகாப்பானது.

தேங்காய் எண்ணெய்

வாய்ப் புண்ணில் மேல் தேங்காய் எண்ணெயைத் தடவலாம். தொடர்ந்து தடவி வந்தால் பலன் தெரியும்.

பசு நெய்

வீட்டில் தயாரித்த ஹோம்மேட் பசு நெய்யைத் தடவி வருவது நல்லது. நாளடைவில் குணமாகும்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரையை பாசிபருப்புடன் சேர்த்து, கொஞ்சம் தேங்காய்த் துருவல் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கொடுக்கலாம். வாரம் 2-3 முறை கொடுப்பது நல்லது.

தேன்

ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தையாக இருந்தால், ஆர்கானிக், சுத்தமான தேனை புண்ணின் மேல் தடவலாம். 2 டீஸ்பூன் சாப்பிடவும் கொடுக்கலாம்.

மஞ்சள்

சிறிதளவு மஞ்சளை சிறிது தேனுடன் கலந்து புண்களின் மேல் வைக்கலாம்.

தயிர், மோர்

இரண்டு டம்ளர் மோர் குடிக்க கொடுக்கலாம். ஒரு கப் தயிர் சாப்பிட கொடுக்கலாம். தயிர் சாதமாக, தயிர் கிச்சடியாக கொடுப்பதும் நல்லது. வாய்ப் புண் விரைவில் சரியாகும்.

துளசி

5-6 துளசி இலைகளைக் கழுவிய பின் மென்று தின்ன குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுப்பது நல்லது. காலை, மாலை சாப்பிட தரலாம். துளசி சாப்பிட்ட பின் இளஞ்சூடான தண்ணீர் கொடுக்கலாம். இதையும் படிக்க : சளி, காய்ச்சலை விரட்டும் துளசி தண்ணீர் செய்வது எப்படி?

கற்றாழை

கற்றாழையைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை நன்கு கழுவிய பின் அரைத்து புண்களின் மேல் தடவலாம். கற்றாழை, சிறிது பனை வெல்லம் சேர்த்து ஜூஸாக தினமும் வெறும் வயிற்றில் குடிக்க கொடுப்பது நல்லது. பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்ப்பதால் சளி பிடிக்காது.

திரிபலா

ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் திரிபலா பவுடர் கலந்து, லேசாக சூடாக்க வேண்டும். 1 - 2 நிமிடம் வாயில் வைத்துக் கொப்பளிக்கவும். பின்னர் கீழே துப்பிவிடவும். home remedies for mouth ulcer Image Source : Thirfty fun

வாழைப்பழம்

தினமும் 1-2 வாழைப்பழத்தை மாலை 5-7 மணி அளவில் குழந்தைகளுக்கு தினந்தோறும் சாப்பிட கொடுப்பது நல்லது.

இளநீர்

வாரத்தில் 3 நாட்களாவது இளநீர் குடிக்கும்படி பழக்கப்படுத்துங்கள். இளநீர் வாய் புண் மற்றும் வயிற்றுப்புண்களை ஆற்றும்.

நீர் வறட்சி

உடலில் நீர் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி திரவ உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது.

வில்வம் பழம்

வில்வ பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கலாம். வில்வ பழத்தை வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null