மாத்திரையை விடுங்க… இந்த உணவுகளை சாப்பிடுங்க… வலி நீக்கும் உணவுகள்...

மாத்திரையை விடுங்க… இந்த உணவுகளை சாப்பிடுங்க… வலி நீக்கும் உணவுகள்...

தலைவலியா உடனே மாத்திரை சாப்பிடுவது. தொண்டை வலி, வயிறு வலி என அனைத்துக்கும் மாத்திரை சாப்பிடும் பழக்கம் பரவலாக பார்க்க முடிகிறது. வலி என்பது அறிகுறி. அந்த அறிகுறியைப் போக்க உடனே பெயின் கில்லர் மாத்திரைகளை சாப்பிட்டால், பின்னர் வலிக்கான அறிகுறிக்கு காரணமே கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். பின்னர் பெரிய பிரச்னையாக மாறும். பெயின் கில்லர் மாத்திரைகளை ஒருமுறை சாப்பிட்டால் கூட பக்கவிளைவுகள் வரத்தான் செய்யும். வலியை நீக்க உணவுகள் மூலமே நிரந்தர தீர்வு கிடைக்கும். வலி என்ற அறிகுறியை சரி செய்து, அதன் காரணத்தையும் சரியாக்கும் சக்தி உணவுகளுக்கு உண்டு. இப்பதிவில் நேச்சுரல் பெயின் கில்லர் உணவுகளைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

வலியைப் போக்கும் உணவுகள்...

சின்ன வெங்காயம்

தொண்டை வலி, விழுங்க முடியாமல் தவிக்கும் உணர்வு, சளி அடிக்கடி தொண்டையிலிருந்து வருவது, இரவில் எச்சில் கூட விழுங்க முடியாத அளவு வலி, சைனஸ் தொல்லையால் வரும் தொண்டை வலி, சரியாகத் தலைமுடியை துடைக்காததால் ஏற்படும் தொண்டை வலி, தொண்டையில் தொற்று ஆகிய அனைத்துத் தொண்டை பிரச்னைகளுக்கும் பெயின் கில்லர் மாத்திரை போட வேண்டிய அவசியமில்லை. சின்ன வெங்காயத்தை 3-5 வரை, அப்படியே கடித்து, வாயில் அடக்கி கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தின் சாறு சிறிது சிறிதாக தொண்டையில் இறங்க வேண்டும். சின்ன வெங்காயம் சற்று காரமாக இருந்தாலும் பரவாயில்லை, அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாறு இறங்க சாப்பிடுங்கள். தொண்டை வலி சில மணி நேரத்திலே நீங்கி விடும். குழந்தைகள் அதாவது 1 வயது + குழந்தைகளுக்கு, சின்ன வெங்காய சாறுடன் சிறிது தேன் கலந்து 2 ஸ்பூன் வரை கொடுக்கலாம். பெரியவர்கள் சின்ன வெங்காயத்தை நன்கு மென்று சாப்பிடலாம். back pain Image Source : Webmd இதையும் படிக்க: தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள்...

மஞ்சள்

அல்சர் தொல்லையால் வரும் வயிறு வலி, செரிமான பிரச்னையால் வரும் வயிறு வலி, வயிறு மந்தம் ஆகிய பிரச்னைகளுக்கு மஞ்சள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் குணம் கிடைக்கும். ஆர்த்ரிடிஸ் வலி, நெஞ்சு எரிச்சல், வீக்கம், பித்தப்பை நோய்கள் ஆகியவற்றுக்கும் சிறந்தது இந்த மஞ்சள். மூட்டுகளில் வலி, வீக்கத்தையும் குறைக்க மஞ்சள் கலந்த உணவுகள் நல்லது. முடிந்தவரை மஞ்சளை ஆர்கானிக்காக பார்த்து வாங்குங்கள். மஞ்சளை உலரவைத்து நீங்களே பொடி செய்து கொண்டு பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.

இஞ்சி

வலி நிவாரணி மாத்திரைகளுக்கு இணையாக வேலை செய்வதில், இஞ்சிக்கு சிறப்பான இடம் உண்டு. உடலுக்குள் உள்ள வீக்கம், எரிச்சலைப் போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. அசிடிட்டி, வீக்கம், எரிச்சல் ஆகியவற்றை இஞ்சி உண்பதால் குணப்படுத்த முடியும். உணவில் இஞ்சி சேர்ப்பது, இஞ்சி டீ, தேன் இஞ்சி, இஞ்சி துவையல், சட்னியில் கொஞ்சமாக இஞ்சி சேர்ப்பதால் வலி நிவாரணம் கிடைக்கும்.

சுக்கு

தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றுக்கு சுக்குவை, இழைத்து நெற்றியில் பூச குணம் கிடைக்கும். வலி நீங்கும். உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். இதையும் படிக்க: பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட்

மீன் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்து கிடைக்கும். இந்த சத்து ஒவ்வொரு செல்லையும் சரி செய்யும். உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். வலி நீங்கும். ஸ்ட்ரெஸ் தொடர்பான வலிகளைப் போக்கும். குழம்பில் உள்ள மீன், ஃபிளாக்ஸ் விதைகள், உலர் விதைகள் ஆகியவற்றில் ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்து உள்ளது.

ப்ரோபயாடிக்ஸ்

நீண்ட காலம் இருக்க கூடிய வயிறு வலி, வயிற்றில் தொற்று ஆகியவை இருந்தால் அதற்கான சிறந்த உணவு ப்ரோபயாடிக்ஸ். ப்ரோபயாடிக்ஸ் உணவுகளான தயிர், யோகர்ட், மோர் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் மேற்சொன்ன தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வயிறு வலி, அடிவயிறு வலி நீங்கும். இதில் முக்கியம் என்னவென்றால் பால், பசும்பாலாக இருப்பது நல்லது. ஆர்கானிக் பாலாகப் பார்த்து வாங்கி தயிர், மோர் தயாரித்துக் குடிக்கலாம்.

சல்ஃபர் சத்துள்ள உணவுகள்

உடலில் வீக்கம், வலி, தசை பிடிப்பு, தசை இறுக்கம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளைப் போக்க சல்ஃபர் சத்துள்ள உணவுகள் உதவும். வெங்காயம், பூண்டு, புரோக்கோலி, முட்டைக்கோஸ், தக்காளி, அவகேடோ, சர்க்கரைவள்ளி கிழங்கு, டர்னிப், கீரைகள், தர்பூசணி, நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் மேற்சொன்ன உடல் பிரச்னைகளை விரட்டலாம். இதையும் படிக்க: தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்...

மெக்னிசியம் சத்துள்ள உணவுகள்

தசை இறுக்கமாக இருத்தல், உடலுக்கு சரியாக ரத்தம் போகாமல் இருத்தல், ரத்த ஓட்டத்தில் பிரச்னை, ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் கை, கால், தலை வலி, வயிற்றுப் பிடிப்பு, சோர்வு, மயக்கம், சோர்வால் வரும் உடல் வலி ஆகிய பிரச்னைகளுக்கு மெக்னிசியம் சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும். கீரைகள், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், நூல்கோல், முளைவிட்ட விதைகள், பயறுகள், சிறிது கொகோ ஆகியவற்றை சாப்பிடுவதால் மேற்சொன்ன பிரச்னைகள் நீங்கும்.

கருப்பு திராட்சை

முதுகு வலி, மூட்டு வலி போக தினமும் ஒரு கப் விதை உள்ள கருப்பு திராட்சை சாப்பிட வேண்டும். திராட்சையில் உள்ள ரிஸ்வெரடிரால் முதுகு வலி, மூட்டு வலியை நீக்கும்.

புதினா

ஒரு கைப்பிடி புதினாவை நன்கு அலசி வைத்துக் கொள்ளுங்கள். தசை வலி, தசை இறுக்கம், பல் வலி, தலைவலி, நரம்பு வலி மற்றும் இறுக்கம், நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றுக்கு ஃபிரெஷ் புதினா இலைகளை மென்று சுவைக்க வேண்டும். புதினா டீ போட்டுகூட குடிக்கலாம். இதையும் படிக்க: குறை ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம்… ஏன்? எப்படி? அறிகுறிகள்? தீர்வுகள்?

உப்பு

வலி, எரிச்சல், அரிப்பு ஆகிய பிரச்னைகள் இருந்தால் நீங்கள் குளிக்கும் இளஞ்சூடான தண்ணீரில் 10-15 டேபிள் ஸ்பூன் கல்லுப்பு போட்டு 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு அந்த தண்ணீரால் குளிக்கலாம். பாத் டப் இருந்தால் இப்படி உப்பு போட்டு 15 நிமிடங்கள் பாத் டப்பிலே இருப்பது நல்லது. விரைவில் பலன் கிடைக்கும். மூட்டு வீக்கம், வலிகூட நீங்கும். உடல் வலி சரியாகும். pain relief Image Source :  Healthline
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
இதையும் படிக்க: வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு...

பூண்டு

வாயுவால் ஏற்படும் வயிற்று வலிக்கு, பூண்டை இடித்துப்போட்டு உணவில் சேருங்கள். அதைத் தவறாமல் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

கிராம்பு

உணவில் கிராம்பு அவசியம் சேருங்கள். அதை பொடியாகவும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பல் வலி, குமட்டல், தலைவலி, சளி போன்ற சமயத்தில் கிராம்பு டீ அல்லது சிறிது தேன் கலந்து கிராம்பு பொடியை சாப்பிடலாம். கிராம்பு எண்ணெயைத் தடவினால் பல் வலிகூட நீங்கும்.

உடல் சூட்டால் வரும் நோய்களை விரட்டும் உணவுகள்

பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் அடிவயிறு வலி, இடுப்பு வலிக்கு நிறைய பேர் மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இது தவறு. மோரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு ஊறவைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கட்டும். வாரம் மூன்று முறை இளநீர் குடித்து வரலாம். வலியே வராது. கற்றாழை ஜூஸ் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிலக்கு வலி வரவே வராது. மாதுளை பழ ஜூஸ் குடித்தாலும் வலி வராது. வயிற்றை சுற்றி விளக்கெண்ணெய் தடவி மசாஜ் செய்தால் வலி நீங்கும். மாதவிலக்கு வரும் நாள் முன் ஒரு வாரத்திலிருந்தே 20 விதை உள்ள கருப்பு உலர்திராட்சை, இளநீர், கற்றாழை, மாதுளை, மோர் ஆகியவை உண்டு வந்தால் வலி இல்லாத மாதவிலக்காக அமையும். இதையும் படிக்க: உடல் சூட்டை குறைக்கும் வழிகள்… அனைவருக்குமான தீர்வு... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null