வலி இல்லாமல் இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்கும் முறைகள்...

வலி இல்லாமல் இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்கும் முறைகள்...

தேவையற்ற முடியை நீக்க பெண்கள் சிரமப்படுகின்றனர். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது. இதனால் வாக்சிங் செய்ய அவசியம் இல்லை. ஆனால், வாக்சிங் செய்ய வேண்டிய அவசியத்துக்கு தற்போது அதிகம் தள்ளப்படுகின்றனர். காரணம் சில பெண்களுக்கு ஹார்மோன்களின் பிரச்னையால் முகத்தில் மீசை, தாடி வளர்கிறது.

வலி இல்லாமல் இயற்கையான முறையில் முடிகளை நீக்க முடியுமா? இயற்கை முறையில் இதற்குத் தீர்வு இருக்கிறது.

கை, கால், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளில் முடிகள் இருப்பது இயல்பான விஷயம். இது ஆரோக்கியமற்றது எனச் சொல்ல முடியாது. அனைத்துப் பெண்களுக்கும் இந்த இடங்களில் முடி வளரத்தான் செய்யும்.

இந்த இடங்களில் கட்டாயம் முடியை நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படியான இயற்கையான விஷயங்களைப் பார்த்து மன உளைச்சலால் பாதிக்க பட வேண்டாம்.

தற்போது பெண்கள் அதிகம் பயன்படுத்தும் முறைகள் இவை.

 • ஷேவிங்
 • வாக்சிங்
 • கிரீம் போட்டு முடியை நீக்குவது
 • சிலர் லேசர் சிகிச்சையும் செய்து கொள்கின்றனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளை நாம் சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அக்குள் பகுதியில் வியர்வையால் உண்டாகும் கிருமிகள் அதிகம். முடி அதிகம் இருப்பின் கிருமிகள் பெருகலாம். துர்நாற்றம் வீசலாம். கருமை நிறமும் அதிகமாகலாம். இவற்றை முறையாக அகற்றுவதே சரி. ஆதலால், அக்குள் பகுதியை சுத்தமாகப் பராமரிக்க முடியும். அதுபோலத்தான் பிறப்புறுப்பு பகுதியையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

ஷேவிங்

கை, கால், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் ஷேவ் செய்யும் பழக்கம் சில பெண்களுக்கு இருக்கிறது.

தன்னுடைய உடலை சுத்தமாக பராமரிக்க இப்படி செய்தாலும், ஷேவ் செய்ய, செய்ய முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பதே உண்மை.

முடியின் வளர்ச்சியும் திசை மாறிப் போகும்.

இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கவே செய்யும். இன்னும் திக்காக முடி வளரும்.

சிலர் டிரிம்மர் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஷேவிங் போலத்தான். முடி அதிகமாக வளரும்.

வாக்சிங்

வீட்டிலே செய்ய கூடிய வாக்சிங், பார்லர்களிலும் வாக்சிங் செய்யப்படுகின்றன.

இதைச் செய்துகொள்ள செலவு அதிகம்.

சாதாரண வாக்சிங்கைவிட ஃப்ளேவர் வாக்சிங் சற்று வலி குறைவாக இருக்கும். அதுபோல சருமத்தில் உள்ள டான் கூட சிறிதளவு நீங்கும்.

முடி மீண்டும் வளர்வது கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

தொடர்ந்து வாக்சிங் செய்பவருக்கு, முடியின் வளர்ச்சி வேகம் குறையும். ஆனால், இதை செய்துகொள்ளும்போது வலி இருக்கத்தான் செய்யும்.

இதற்கான செலவும் அதிகம்தான். வலியும் இருக்கும்.

removing unwanted hair

Image Source : Khoobsurati

லேசர் சிகிச்சை

மருத்துவர்களிடம் செய்து கொள்வது நல்லது. ஆனால், இந்த சிகிச்சையும் செலவு அதிகம்தான்.

மீண்டும் முடி வளரத்தான் செய்யும். வசதி இருப்பவர்களால் மட்டுமே இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும்.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

இயற்கை சிகிச்சை

இதற்கான ப்ளஸ், மைனஸ் இரண்டையுமே பார்க்கலாம்.

இயற்கை சிகிச்சையில் வலி இருக்காது. நிரந்தர தீர்வு இருக்கும். பக்க விளைவுகள் இருக்காது. இதெல்லாம் ப்ளஸ்.

மைனஸ் என்னவென்றால் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குறைந்தது 6 மாதம் – 1 வருடம் ஆகலாம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கால கட்டம் எடுக்கும். சிலருக்கு 3 மாதத்தில் ரிசல்ட் தெரியலாம். சிலருக்கு 6 மாதம் ஆகலாம். சிலருக்கு ஒரு வருடமும் ஆகலாம். ஆனால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து தாமதம் ஆகும். ஆனால், தீர்வு நிச்சயம் உண்டு.

இயற்கை சிகிச்சைகள் பொறுத்தவரை 5 விஷயங்கள் தேவை

 • பொறுமை
 • காத்திருப்பு
 • தொடர்ந்து பின்பற்றுவது
 • நம்பிக்கை
 • தரமான பொருட்கள்

இவை  இருந்தால் நிச்சயம் தேவையற்ற முடிகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

இயற்கையான வீட்டு வைத்திய சிகிச்சைகள்…

சாப்பிட வேண்டிய மருந்து

தேவையற்ற முடிகள் வளர முக்கிய காரணம், ஹார்மோன் மாற்றங்கள்.

சோற்று கற்றாழையை கருப்பட்டி சேர்த்து சாப்பிட அல்லது ஜூஸாக குடிக்க மாதவிலக்கு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும்.

ஹார்மோன் சமநிலையின்மை சீராகும். தேவையற்ற முடிகள் வளராது.

இதையும் படிக்க: இளநரையைப் போக்கும் 3 வகையான ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை…

தேவையற்ற முடியை நீக்கும் குளியல் பொடி

 • பச்சைப்பயறு – 250 கிராம்
 • கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
 • வெட்டி வேர் – 100 கிராம்
 • விலாமிச்சை வேர் – 100 கிராம்
 • சீமை கிச்சலி கிழங்கு – 100 கிராம்
 • கோரை கிழங்கு – 100 கிராம்

இவற்றை பொடித்து வைத்து குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். அல்லது தேவையான இடங்களில் பேக் போல போட்டு,அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதைத் தினமும் செய்யலாம்.

6 மாதத்தில் ரிசல்ட் தெரிய தொடங்கும்.

முடியின் வளர்ச்சி குறைந்திருக்கும். சில முடிகளும் உதிரும்.

ரெடிமேடாக கடையில் பவுடராக விற்பதை வாங்க வேண்டாம். தரமாக இல்லையெனில் பலன் அளிக்காது.

நீங்கள் பொருட்களை வாங்கி அரைத்துப் பயன்படுத்துவதே நல்லது.

hair removing powder

Image Source : Etsy

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

தேவையற்ற முடியை நீக்கும் பொடி

 • கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் – ஒரு பங்கு
 • அம்மான் பச்சரிசி – பாதி பங்கு

இவற்றை நன்கு அரைத்துப் பொடித்துக் கொள்ளவும்.

தண்ணீரில் குழைத்துத் தேவையான இடங்களில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவவும்.

தினமும் செய்யலாம்.

அம்மான் பச்சரிசி சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் ஒருமுறை செக் செய்துவிட்டு பயன்படுத்தவும்.

இதையும் படிக்க: 3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்…

கஸ்தூரி மஞ்சள் பேஸ்ட்

 • கஸ்தூரி மஞ்சள் – 2 ஸ்பூன்
 • பால் – 1 ஸ்பூன்

இவற்றைக் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளின் மீது தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த சிகிச்சை செய்யலாம்.

முட்டை மாஸ்க்

 • முட்டை வெள்ளை கரு – 1
 • சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
 • சோள மாவு – ½ டேபிள் ஸ்பூன்

இதை மூன்றையும் கலந்து, நன்கு பேஸ்டாக்கி முகத்தில் போட்டு, ஆற விட்டு 20 நிமிடங்கள் கழித்து மாஸ்க் போல மாறி இருக்கும். அதை அப்படியே பிரித்து எடுக்கவும்.

வாரம் 2 முறை செய்யலாம்.

முகத்தில் உள்ள முடியை எடுக்கும். அழுக்கையும் நீக்கும்.

மேற்சொன்ன எந்த சிகிச்சை செய்த பின், உங்களுக்கு உலர்ந்த சருமம் போல மாறுவதாகத் தெரிந்தால், குறைந்த அளவில் நல்ல தரமான மாய்ஸ்சரைசர் அல்லது ஆலுவேரா ஜெல்லை முகத்தில் பூசிக் கொள்ளவும்.

சருமம் இயற்கையாக, நன்றாக, பளபளப்பாக மின்னும்.

இந்தச் சிகிச்சைகள் அனைத்தும் இயற்கையானவை. பாதிப்பு இல்லாதவை. தொடர்ந்து பயன்படுத்தினால் 6 மாதத்துக்கு மேல் நல்ல மாற்றம் தெரியும். நிரந்தர தீர்வாக அமையும்.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null