ஃபேஸ்புக் நிறுவனரான 'மார்க்' தன் குழந்தைக்கு 'குவான்டம் ஃபிஸிக்ஸ்' வாசித்து காட்டுகிறார்... ஏன்?

ஃபேஸ்புக் நிறுவனரான 'மார்க்' தன் குழந்தைக்கு 'குவான்டம் ஃபிஸிக்ஸ்' வாசித்து காட்டுகிறார்... ஏன்?

குழந்தைகளின் முதல் 1000 நாட்களில், குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பெற்றோர்கள் (Newborn Parenting tips) செய்ய வேண்டியதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர், மார்க். 2015 டிசம்பரில் தன் குழந்தைக்கு அப்பாவான போது ஒரு படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். ஒரு வாரமே ஆன அந்தக் குழந்தைக்கு அவர் ‘குவான்டம் பிஸிக்ஸ்’ பற்றிய ஒரு புத்தகத்தை அதில் அவர் வாசித்துக் கொண்டிருந்தார்.

உணர்வு, மொழி, உணர்வு ரீதியான சமூக வளர்ச்சி ஆகியவை குழந்தையின் முதல் 1000 நாட்களில் பெரும்பாலும் நடைபெறுகின்றன.

குழந்தையின் வளர்ச்சி

  • கற்றுக் கொள்ளும் திறன்
  • பள்ளியில் செயல்படும் முறை
  • வயது வந்த பிறகு நடந்துகொள்ளும் முறை
  • வேலையில் வெற்றிகரமாக செயல்படுவது
  • வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது

ஆகியவை முதல் 1000 நாட்களில் நடைபெறுகின்றன.

சொல் வளம் அதிகரிக்க…

குழந்தைகளிடம் புத்தகத்தை வாசித்துக்காட்டுவதால், அவர்களின் சொல் வளத்தையும் வாசிக்கும் திறன்களையும் மேம்படுத்தலாம். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும்கூட.

மூளை வளர்ச்சி

முதல் 1000 நாட்களில் குழந்தையின் மூளை செல்கள் நிமிடத்துக்கு 700 – 1000 வரையான நியூரல் இணைப்புகள் என்ற அளவில் படுவேகமாக வளர்கின்றன.

இந்த இணைப்புகள் மூளையின் கட்டமைப்பை உருவாக்குகின்றன.

மேதைகளின் விளக்கம்

கற்றல், நடத்தை, ஆரோக்கியம் தொடர்பான அனைத்தையும் அமைக்கின்றன என்கிறது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் குழந்தை மேம்பாட்டுக்கான மையம்.

இந்த இணைப்புகள் குழந்தையின் வாழ்க்கை எனும் கட்டிடத்துக்காக செங்கல் கற்கள். அவை மரபணுக்களாலும் முன்னதான அனுபவங்களாலும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துபவை.

குழந்தையின் சின்ன மூளைக்குள் நடப்பவை ஒரு ஏவுகணை அறிவியல் போன்றது என்கிறார் பேராசிரியர் பாட்ரிகா குல்.

newborn brain development

Image Source : Credit mesmerised.com

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…

வாசிப்புதான் மூளைக்கு உணவு

ஒரு குழந்தையோடு நாம் விளையாடியும் பேசியும் வாசித்துக் காட்டியும் குழந்தையின் மனதை நாம் தூண்டுகிறபோது குழந்தைகளின் வளரும் மூளைக்கு உணவளிக்கிறோம்.

சரியான சத்துணவோடு நாம் ஒரு குழந்தையின் உடலுக்கு ஊட்டம் தரும்போது அதற்குள் வளர்ந்து வரும் மூளைக்குள் உள்ள நியூரல் தொடர்புகளுக்கும் இணைப்புகளுக்கும்கூட உணவளிக்கிறோம்.

குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தைகளை வன்முறைகளிலிருந்தும் தொந்தரவுகளிலிருந்தும் பாதுகாக்க அக்கறை எடுக்கும்போது, மூளைக்கு தீங்கை ஏற்படுத்தும் மனஅழுத்தத்திலிருந்து குழந்தையைக் காக்கிறோம்.

நல்ல அனுபவம் அவசியம்

குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் கிடைக்கும் அனுபவங்களும் வெளி உலக வாய்ப்பும் அவர்களின் பிற்கால வாழ்க்கையிலும் பள்ளி செயல்பாட்டிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுகின்றன.

கல்லூரி வரை படித்த பெற்றோர்களின் குழந்தைகளின் சொல்வளம், உயர்நிலைப் பள்ளி வரை படிக்காத பெற்றோர்களின் குழந்தைகளுடைய சொல்வளத்தைவிட 3 வயதில் 2-3 மடங்குகள் அதிகமாக சொல்வளத்தை கொண்டவையாக உள்ளன.

குழந்தைகளின் ஆரம்ப கால அனுபவங்கள் அவர்களின் அறிவு ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான வளர்ச்சியில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. வளர்ந்த பருவத்தில் அவர்களின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தை பருவத்தில் 7 அல்லது 8 விரும்பத்தகாத அனுபவங்களைக் கொண்டு வளர்பருவத்தினர் அவற்றை நினைவுக் கொள்பவர்களுக்கு, இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கு 3 மடங்கு வாய்ப்பிருக்கிறது.

பெற்றோர்களும் பாதுகாவலர்களும் குழந்தையின் ஆரம்ப கால தூண்டுதலுக்கு கட்டாயம் செய்ய வேண்டியவை

newborn parenting tips

Image Source: Credit pamplinmedia.com

இதையும் படிக்க: எந்த நோயும் வராமல் தடுக்க என்னென்ன உணவுகளை குழந்தைக்கு தரலாம்?

நல்ல இசையை குழந்தையின் முன்பு வாசிக்க அல்லது பாட வேண்டும். இசையின் லயங்களைக் கற்றுக் கொள்வது என்பது கணிதத்தைக் கற்றுக் கொள்வதோடு இணைந்ததாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மென்மையாக பேசுங்கள், புத்தகங்களை வாசியுங்கள், கதைகளைக் கூறுங்கள், கூடுதலான வார்த்தைகளை குழந்தைகள் கேட்கும்போது அவர்களின் மூளையின் இணைப்புகள் கூடுதலாகின்றன.

8 மாத குழந்தைகள்கூட கதைகளை 2-3 முறை வாசித்துக்காட்டும்போது அவற்றைப் புரிந்து கொண்டன.

குழந்தையிடம் எதாவது பேசுங்கள். காகா/கூகூ என்று… குழந்தைகள் இயல்பாக பதில் அளிப்பார்கள். இது ‘செய்க திரும்ப பெறுக’ எனும் முயற்சி எனப்படும். குழந்தையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அவசியம்.

கண்கள் பார்த்துப் பேசுங்கள். ஆரம்ப கட்டத்திலே முகத்தை குழந்தைகள் அடையாளம் காணும். ஒவ்வொரு முறை குழந்தை உற்றுப் பார்க்கும் போது தன் நினைவுத் திறனை உருவாக்கிக் கொள்கிறார்கள் என அர்த்தம்.

புன்னகையுங்கள், சிரியுங்கள், ஜோக் சொல்லுங்கள், வேடிக்கையாக சத்தம் செய்யுங்கள், கண்ணாடியில் முகங்களைக் காட்டுங்கள், இவை குழந்தைகளிடம் நகைச்சுவை உணர்வை உருவாக்கும்.

குழந்தைகளை சிரிக்க வைக்க பாதங்களை சீண்டுங்கள்.

நாக்கை நீட்டுங்கள். 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கூட முகத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முயலும். தீர்வுகளை உருவாக்குவதற்கான ஆரம்ப கால அறிகுறி இது.

குழந்தைகளை கட்டி அணையுங்கள், முத்தமிடுங்கள், தழுவிக் கொள்ளுங்கள், மென்மையாகத் தேய்த்துக் கொள்ளுங்கள், கையையும் விரல்களையும் பிடித்துக் கொள்ளுங்கள், மென்மையாக தடவிக் கொடுங்கள்.

குழந்தைகளோடு ஒளிந்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள்.

அசையும் பொருட்களைத் தொங்கவிடுங்கள்.

சின்ன சின்ன கட்டுமானங்களை உருவாக்குவதற்கு குழந்தைகளை உற்சாகமூட்டுங்கள். பொருத்தமான விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான திறனை மேம்படுத்துங்கள்.

ஒரு படத்தை நான்காக வெட்டி பிறகு குழந்தைகளை அவற்றை ஒன்றாக சேர்க்க சொல்லுங்கள். இது அவர்களின் சிந்தனைத் திறன்களை மேம்படுத்தும்.

குழந்தையின் ஆரம்பகால தூண்டுதலுக்கு அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, பாதுகாவலர்கள் போன்றோர் பங்களிக்க வேண்டும்.

Source: UNICEF

இதையும் படிக்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிகுறிகள் என்னென்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null