சுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!

சுக பிரசவமாக கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!

இன்று பல பிரசவ முறைகள் இருந்தாலும், சுக பிரசவம் போல சிறந்த பிரசவ முறை எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். இதனை யாராலும் மறுக்கவும் முடியாது. ஒரு சில பிரசவ முறைகள் சில தவிர்க்க முடியாத சூழலில் பயன் படுத்தப் பட்டாலும், சுக பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை உறுதி செய்கின்றது. ஆனால், சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அதற்கு கர்ப்பிணி பெண்களின் முயற்சிகள் மிகவும் தேவை. இதற்கு ஒரு சில விசயங்களை அவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

இன்று பல பெண்களுக்குச் சுக பிரசவத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நன்கு ஏற்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் அறுவைசிகிச்சை பிரசவம் மற்றும் வேறு சில வகை பிரசவங்கள் பிரபலமாகி நடந்திருந்தாலும், அவை சில உடல் உபாதைகளையும், சங்கடங்களையும் நாளடைவில் அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். இது ஒரு வரவேற்க தக்க மாற்றமாகும்.

கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவத்தின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு முயற்சி செய்ய தொடங்க வேண்டும். இந்தப் பதிவில் எப்படி சுக பிரசவம் (Normal Delivery in Tamil)அடைவது என்பதைப் பற்றிய சில எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகளைத் தந்துள்ளோம், மேலும் வாசியுங்கள்.

பெரியோர்களின் ஆலோசனை

நமது முதல் மருத்துவர் எப்போதும் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களே. பாட்டி வைத்தியம் போல நிரந்தர தீர்வும் பலனும் தரக்கூடிய ஒரு வைத்தியம் வேறு இருக்க முடியாது. மேலும் பெரியவர்கள் சுமார் 20- 30 வருடங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டிலேயே பிரசவம் செய்து கொண்டவர்களாகவே இருப்பார்கள். மேலும் அவர்கள் பல கர்ப்பிணி பெண்களுக்குப் பிரசவ காலங்களில் உதவிகள் செய்திருப்பார்கள்.

அந்த அனுபவம் அவர்களுக்குப் பிரசவத்தைக் குறித்து ஒரு நல்ல விழிப்புணர்வைத் தந்திருக்கும். எப்படி நடந்து கொண்டால், சுக பிரசவம் (Normal Delivery in Tamil) ஏற்படும் என்கின்ற தெளிவையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும். அதனால், முதல் கட்ட நடவடிக்கையாக உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா, பாட்டி போன்ற பெரியவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.

தேவையில்லாமல் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிருங்கள்

எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிருங்கள். முடிந்த வரை பெரியோர்களின் ஆலோசனைப் படி, கர்ப்ப காலத்தில் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வீட்டு வைத்தியத்தைச் செய்ய முயற்சி செய்து சரி செய்யுங்கள். அது நிச்சயம் உங்களுக்குப் பலன் தரும். ஆனால் அதை தவிர்த்து நீங்கள் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று தேவை இல்லாமல் அதிகம் மாத்திரைகள் சாப்பிட்டால் அது உங்கள் உடலை மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் உடல் நலத்தையும் பாதிக்கும். மேலும் இது சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பையும் குறைத்து விடும்.

உங்கள் எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் சுக பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டால் அதில் உறுதியான மனதோடு இருங்கள். இந்த தீர்மானமே, உங்களுக்கான சரியான வழியை வகுத்துக் கொடுத்து விடும். மேலும் அப்படி மனதளவில் நீங்கள் உறுதியாக இருக்கும் போது, உங்கள் உடலும், ஆன்மாவும் அதனையும் நாளடைவில் விரும்பத் தொடங்கும். இறுதியில், நீங்கள் எதிர்பார்த்த சுக பிரசவமும் நடக்கும்.

சுக பிரசவத்தை ஆதரிக்கும் மருத்துவரை அணுகவும்

இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியில் சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பு முழுமையாக இருந்தாலும், ஒரு சில அறியாமையாலும்,சில காரணத்தினாலும், அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.மருத்துவர்களின் உரிய ஆலோசனைகள் சுக பிரசவம் நடக்க மிக அவசியம். பல இளம் பெண்கள், சரியான புரிதல் இல்லாததாலும், பிரசவ நேரத்தில் வலி ஏற்படும் என்கின்ற பயத்தாலும் அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்வு செய்கின்றனர்.

ஆனால், நீங்கள் சுக பிரசவத்தை மட்டுமே ஆதரிக்கும் ஒரு சரியான மருத்துவரை அணுகி விட்டால், உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது. அவரே உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, உங்கள் பயத்தையும் போக்கி நீங்கள் சுக பிரசவத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் சூழலை ஏற்படுத்தி விடுவார்.

சரியான உணவு

சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால், இரும்புச் சத்து, கால்சியம், புரதம், நார்ச் சத்து, மக்னீசியம், மங்கனீஸ், ஜின்க் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் ஏ, சி, பி, பி12 போன்ற சத்துக்களும் உங்கள் உணவில் நிறைவான அளவு இருக்க வேண்டும்.

இவற்றை நீங்கள் சத்து மாத்திரை சாப்பிட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. இயற்கையாக விளையும் காய், பழம் மற்றும் கீரை வகைகளைச் சரியான முறையில் சமைத்து , அதிலிருந்து சத்துக்களைப் பெற்று கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே, சுக பிரசவத்திற்கு ஏற்ற உணவாக அவை இருக்கும்.

பிரசவ பயத்தைக் கைவிடுங்கள்

நிறைய கர்ப்பிணி பெண்களின் விசயத்தில் பிரசவத்தைப் பற்றிய தேவையில்லா பயமே அறுவை சிகிச்சை பிரசவத்திற்கான காரணியாக அமைந்து விடுகிறது.ஆகப் பிரசவத்தைக் குறித்த பயத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம்.
நல்ல இசையைக் கேட்டு உங்கள் மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

எளிய வீட்டு வேலைகள் மேற்கொள்ளுங்கள்

சுக பிரசவம் ஏற்படாமல் போவதற்கு உடல் உழைப்பு இன்மையும் ஒரு முக்கிய காரணமாகும். நீங்கள் எவ்வளவு உடலுக்கு வேலை கொடுக்கின்றீர்களோ அவ்வளவு உங்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், முடிந்த வரை போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், உங்களால் உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும், உங்கள் வீட்டு வேலைகளை முடிந்த வரை நீங்களே செய்து விட முயற்சி செய்ய வேண்டும். இதனால் சுக பிரசவம் ஏற்படச் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

நடைப்பயிற்சி

மேலும் தினமும், ஒன்று முதல் இரண்டு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், உங்கள் உடல் சுக பிரசவத்திற்கு தயாராகி விடும். மேலும் பிரசவ நேரத்தில் வலியும் குறைவாக இருக்கும்.நடைப்பயிற்சியை ஒழுங்காகக் கடைப்பிடித்த பல கர்ப்பிணி பெண்களுக்குச் சுக பிரசவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் குழந்தையே பிரசவ நாளை நிர்ணயிக்கட்டும்

இன்று பலர் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும், நாளையும் தேர்வு செய்து அன்றே குழந்தை பிறந்து விட வேண்டும் என்று அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்வு செய்கின்றனர். இது ஒரு தவறான செயல். இப்படிச் செய்வதால் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் உடல் நலமும் பாதிக்கப் பட்டு, அது அவர்களது உயிருக்கே பாதிப்பை உண்டாக்கி விடும். அதனால், உங்கள் குழந்தை பிறக்கும் நேரத்தையும், நாளையும் குழந்தையிடமும், இயற்கையிடமே விட்டு விடுங்கள். இது உங்கள் இருவரின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளையும் நீடிக்க உதவும்.

யோகா பயிற்சி

சில குறிப்பிட்ட ஆசனங்களை மேற்கொள்ளுவதால் கர்ப்பிணி பெண்களின் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் வலுவடையும். நாளடைவில் எலும்புகள் நன்கு நெகிழத் தொடங்கும். இதனால் சுக பிரசவம் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.

புத்தகம்

சுக பிரசவம் குறித்து உள்ள சிறந்த புத்தகங்களைப் படிக்கலாம். தரமான இணைய தளங்களில் உள்ள நல்ல தகவல்களை சேகரித்து பயன்அடையலாம்.இந்த விசயங்கள் எல்லாம் சுக பிரசவம் நடக்க வழி வகை செய்யும்.

கர்ப்பிணி பெண்கள் இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதோடு மட்டும் நில்லாமல், முடிந்த வரை உங்களிடம் எதிர்மறையாகப் பேசுபவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். அவர்களின் பேச்சு உங்கள் நம்பிக்கையை உடைத்து விடக் கூடும். போதுமான அளவு தூக்கம் இருக்க வேண்டும். சுக பிரசவத்தை பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் ஏற்பட வேண்டும். எப்போதும் உங்களுடன் ஒருவர் உதவிக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாகச் சுக பிரசவத்தை பற்றி நன்கு தெரிந்தவரும், அனுபவம் மிகுந்தவராகவும் இருந்தால் நல்லது. இவை அனைத்தின் மூலமாக உங்களுக்கு சுக பிரசவம் ஏற்படும் என்று நம்புகிறோம். Normal delivery in Tamil.

இதையும் படிக்க : வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null