குழந்தைகள் விரும்பி சாப்பிட சில ஓட்ஸ் ரெசிபிகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட சில ஓட்ஸ் ரெசிபிகள்

ஓட்ஸ் தானிய வகையைச் சேர்ந்தது. இன்று பெரும்பாலானவர்கள் ஓட்ஸை தங்கள் உணவில் சேர்க்கத் தொடங்கி விட்டனர். குழந்தைகளுக்கும் ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகின்றது. அந்த வகையில் ஓட்ஸைக் கொண்டு தயாரிக்கப்படும், குழந்தைகள் விரும்பி சாப்பிட உதவும் வகையிலான  சுவையான ஓட்ஸ் கீர் ரெசிபி மற்றும் ஓட்ஸ் உப்புமா தயாரிப்பது எப்படி என்று கீழே காணலாம்.

 

ஓட்ஸ் கீர் ரெசிபி தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்:

 

குழந்தைகள் விரும்பி சாப்பிட ஏதுவான இந்த ஓட்ஸ் ரெசிபி மிகவும் எளிதானது. எப்படி செய்யலாமென பார்க்கலாம் வாங்க.

ஓட்ஸ் கீர் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் பின்வருமாறு,

 • ஓட்ஸ் பவுடர் ¼ கப்
 • ஆப்பிள் பியூரி ¼ கப்
 • தண்ணீர் ½ கப்
 • நெய் ½ டீஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் ½ டீஸ்பூன்

 

இதன் செய்முறையை கீழே பார்க்கலாம்,

 

 1. மிக்ஸியில் ஓட்ஸை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
 2. பிறகு பொடித்து வைத்துள்ள ஓட்ஸில் தண்ணீரை கலந்து வேக வைக்கவும்.
 3. இத்துடன் ஆப்பிள் பியூரி சிறிதளவு சேர்க்கவும்.
 4. இவை வெந்தவுடன் நர்ஸ் பவுடர் மற்றும் நெய் சேர்த்து கிளறி விடவும்.
 5. பிறகு அடுப்பிலிருந்து இறக்கி,குழந்தைக்கு உண்ணக் கொடுக்கலாம்.

 

இதையும் படிங்க: வெள்ளி பாத்திரத்தில் குழந்தைக்கு உணவு தரலாமா?

 

எந்த மாத குழந்தைக்கு இந்த ஓட்ஸ் கீர் ரெசிபி தரலாம்?

 

6+ மாத குழந்தைகளுக்கு இந்த உணவை தரலாம். இது மிகவும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவாகும்.

 

ஓட்ஸ் உப்புமா ரெசிபி தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

 

 • ஓட்ஸ் 1 கப்
 • தண்ணீர் தேவையான அளவு
 • வெங்காயம் 2(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
 • உப்பு தேவையான அளவு
 • மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
 • கொத்தமல்லித்தழை சிறிதளவு
 • எண்ணெய் அல்லது நெய் 2 ஸ்பூன்
 • கடுகு 1 சிட்டிகை
 • உளுத்தம்பருப்பு 1 சிட்டிகை
 • பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்றபடி
 • கறிவேப்பிலை சிறிதளவு

 

இதையும் படிங்க: குட்டீஸ் ஆரோக்கியம், உயரம் அதிகரிக்கும் உணவுகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி?

 

 1. கடாயில் ஓட்ஸை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்னர் இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 2. பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றவும்.
 3. பிறகு இதில் கடுகு,உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
 4. நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை இத்துடன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
 5. பிறகு பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் முதலியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
 6. வறுத்து வைத்துள்ள ஓட்ஸை இத்துடன் சேர்த்து கலக்கவும்.பின் ஓட்ஸ் வேக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.ஓட்ஸ் வேக அதிக அளவு தண்ணீர் அவசியம் இல்லை.அதனால் கொஞ்சம் அளவு தண்ணீரே ஓட்ஸ் வேக போதுமானது.
 7. தேவையான அளவு உப்பை கலந்து கொள்ளவும்.
 8. இவை அனைத்தையும் நன்கு கிளறி விடவும்.
 9. பின் சில நிமிடங்கள் கடாயைத் தட்டை வைத்து மூடி வைக்கவும்.
 10. அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு கிளறி விடவும்.
 11. ஓட்ஸ் மென்மையான பதத்திற்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
 12. இதில் கொத்துமல்லி தழையைக் கிள்ளி தூவி விட வேண்டும்.
 13. தற்போது மணம் வீசும் சுவையான ஓட்ஸ் உப்புமா தயாராகிவிட்டது.

 

எந்த வயது குழந்தைகளுக்கு தரலாம்?

 

8 மற்றும் 8+ மாத வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த உணவை தரலாம். நிச்சயமாக இந்த ஆரோக்கியமான உணவை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

ஓட்ஸில் நிறைந்துள்ள பயன்கள்

 

 • இதில் அதிக அளவு நார்ச் சத்து நிரம்பியுள்ளது. இச்சத்து செரிமானத்திற்கு மிகவும் உதவுகின்றது. ஓட்ஸ் எடுத்துக் கொள்வதால் தேவையில்லா கொழுப்பு கரையும். அதனால் குழந்தைகளின் உடல் எடை குறைந்து சீரடையும்.
 • இதில் பல்வேறு விதமான விட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. உதாரணமாக மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1,விட்டமின் பி5 ஆகியவற்றை குறிப்பிடலாம்.
 • ஓட்ஸ் குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொந்தரவு வராமல் பாதுகாக்கின்றது.

 

ஓட்ஸின் பல்வேறு நன்மைகளை அறிந்து கொண்டீர்களா?இனி பெற்றோர்களே ஓட்ஸ் ரெசிபிகளை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பலனடையுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null