உணவில் சேர்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு நல்லதா? எப்போது எண்ணெய் சேர்க்கலாம்?

உணவில் சேர்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு நல்லதா? எப்போது எண்ணெய் சேர்க்கலாம்?

பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உணவில் எண்ணெய் சேர்க்கலாமா? எந்த எண்ணெய் சேர்க்கலாம் என்ற குழப்பத்துடன் இருக்கிறார்கள். ஏன் எண்ணெய் பயன்பாடு பற்றிய இத்தனை குழப்பங்களும் சந்தேகங்களும். அதற்கான விளக்கமும் குழந்தைக்கு நன்மைகளை செய்யும் எண்ணெய் பற்றி இங்கு பார்க்கலாம். ‘கொழுப்பு’ குறித்த அச்சம் நம்மிடம் அதிகமாக இருக்கிறது. இது ஒரு பக்கம் நல்லது என்றாலும் பல சமயங்களில் நல்ல உணவைகூட நாம் தவறான உணவுகளாகவே கருதுகிறோம். இந்தக் குழப்பம் தீர வேண்டும். கொழுப்பிலே இரண்டு வகை உள்ளன. நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. நல்ல கொழுப்பு, ‘HDL’ என்பார்கள். தேங்காய், எள்ளு, விதைகள், நட்ஸ் போன்ற தாவர வகைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய். கெட்ட கொழுப்பு, ‘LDL’ என்பார்கள். அசைவ உணவுகளைப் பொரிக்கும்போது கெட்ட கொழுப்பு, மீண்டும் மீண்டும் சுட்ட எண்ணெயை பயன்படுத்துவது, ரீஃபைன்டு எண்ணெய், கலப்பட எண்ணெய்… இவையெல்லாம் உடலில் கெட்ட கொழுப்பாக மாறும். மேலும் பீசா, பர்கர், சீஸ் மைதா ஃபிரான்கி, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவை கெட்ட கொழுப்பு வகையை சேரும். சில பெருநிறுவனங்கள் தங்களின் வியாபார நோக்கத்திற்காக, தேங்காய் எண்ணெய் மாரடைப்பை ஏற்படுத்தும். கெட்ட கொழுப்பு என்று கிளப்பி விட பலரும் அதை நம்பி தேங்காய் எண்ணெயின் பயன்பாடே குறைந்துவிட்டது. உண்மை எதுவென தெரிந்து கொள்வது நல்லது. தாவர எண்ணெயால் வரும் கொழுப்பால், நமக்கு நேரடியான பாதிப்பு ஏற்படாது. நம் ரத்தக்குழாய்களில் ஏதாவது கீறல், புண்கள் வந்துவிட்டாலோ அதை சரி செய்ய உடலுக்கு கொழுப்பு தேவை. அந்த நல்ல கொழுப்பை தருவது நம் ஊர் தேங்காய் எண்ணெய், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய், கடலெண்ணெய், கடுகெண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய்கள்தான். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நம் உடலில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாது. துரித உணவுகளும் ஃபாஸ்ட் ஃபுட்டும்தான் (transfat) நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்த உணவுகள் தரலாமா?

தாராளமாக கொடுக்கலாம். தேங்காய் எண்ணெய் நல்ல கொழுப்பு வகையை சார்ந்தது. ஆனால், செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயே பெஸ்ட். பல நிறுவனங்கள் தேங்காய் எண்ணெயில் மற்ற எண்ணெய்கள், வேதிபொருட்களை சேர்க்கின்றன. எனவே, செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயை குழந்தைக்கு கொடுக்கலாம். நீங்களும் சாப்பிடலாம். அடைப்பு உருவாக காரணமாக உள்ள நுண்கிருமிகளை கூட கொல்லும் சக்தி சுத்தமாக தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயில் உள்ளது என சில ஆய்வுகள் கூறுகின்றன. எடை குறைவான குழந்தை, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் தேற தேங்காய் எண்ணெயை சில சொட்டுகள் விட்டு அரிசி கஞ்சி, தேங்காய்ப் பால் கஞ்சியை 6 மாத குழந்தைக்குகூட கொடுக்கலாம். அவ்வளவு நன்மைகளைக் கொண்டது சுத்தமான தேங்காய் எண்ணெய். இதனால் எடை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். லாரிக் அமிலம் இருக்கும் சத்து தேங்காய் எண்ணெயிலும் தாய்ப்பாலிலும்தான். இதை மறந்துவிட வேண்டாம். மருத்துவ குணங்கள் தேங்காய் எண்ணெயில் அதிகம். இதையும் படிக்க: சிறுதானியங்களில் உள்ள சத்துகளால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்கள்... எப்போது சிறுதானியம் தரலாம்? coconut oil Image Source : Kerala spices online
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

தவிட்டு எண்ணெய் நல்லதா?

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வரும் எண்ணெய், தவிட்டு எண்ணெய். இதில் உள்ள MUFA- PUFA சரியான சதவிகிதத்தில் இருப்பதால், இதயத்துக்கு நல்லது. ஒரைஸினால் சத்து இருப்பதால் சமையலுக்கு ஏற்றது.

எள் எண்ணெய் - நல்லெண்ணெய் நல்லதா?

குடல் புண்களை குணமாக்கும் ஆற்றல் பெற்றது. கர்ப்பப்பையைக் காக்கும் சக்தி கொண்டது. உளுந்து களியும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம் பாட்டி காலத்தில் இருந்து வந்தது. மிக மிக அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது. குழந்தை முதல் முதியோர் வரை நன்மைகளை செய்யும் எண்ணெய் இது. இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வளர்ச்சி, எடை அதிகரிப்பு, எனர்ஜி தரும் உணவுகள்…

எவ்வளவு எண்ணெய்? எப்படி பயன்படுத்தினால் நல்லது?

groundnut oil Image Source :  standard cold pressed oil எண்ணெயை அளவாகப் பயன்படுத்துவது நல்லது. அளவுடன் செக்கில் ஆட்டிய எண்ணெயை பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி இருக்க கூடாது. கடலெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயால் பொரித்த வடை, முறுக்கு, தட்டை ஆகியவை அளவுடன் சாப்பிட நல்லது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்த உணவுகளும் நல்லது. ஆனால், அளவுடன் சேர்த்திருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்பதால் அளவுடன் உணவில் சேர்க்க பழகலாம். குழந்தைகளுக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். கஞ்சி, களி, துவையல், கீரை கூட்டு, மசியல், அவியல், தோசை, பூரி, பொங்கல், உப்புமா, கிச்சடி, சாம்பார் சாதம் போன்ற பல்வேறு உணவுகளில் சிறிதளவு எண்ணெய் இருப்பதில் தவறில்லை. ஒரு மாதம் கடலெண்ணெய், அடுத்த மாதம் தவிட்டு எண்ணெய், அடுத்த மாதம் சூரிய காந்தி எண்ணெய் போன்ற மாதந்தோறும் எண்ணெயை மாற்றி வரலாம். நல்லெண்ணெயும் தேங்காய் எண்ணெயும் அவ்வப்போது உங்களது உணவுகளில் இடம் பெறட்டும். பொரிக்க, வதக்க போன்ற உணவுகளை செய்யும் போது, கடலெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், மக்காசோள எண்ணெய் போன்றவை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில், நல்லெண்ணெயில் உணவுகளைப் பொரிக்க வேண்டாம். அவியல், கூட்டு போன்ற பல்வேறு உணவுகளில் தாளிக்க, சிறிதளவு சேர்க்க பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயை சாலட் போன்ற உணவுகளில் சேர்க்கலாம். அதாவது, அடுப்பில் சமைக்கபடாத உணவுகளில் ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். இதையும் படிக்க: குழந்தைகளை சாப்பிட வைக்கும் கறிவேப்பிலை பொடி… பலரும் அறியாத, தெரியாத பலன்கள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null