பேலியோ டயட் உடல் எடையை குறைக்கும் மந்திரம்! முழு தகவல்கள்!

பேலியோ டயட் உடல் எடையை குறைக்கும் மந்திரம்! முழு தகவல்கள்!

பேலியோ டயட் என்பது சமீபகாலமாக பிரபலமாக இருந்து வரும் ஒரு டயட் முறையாகும். இந்த பேலியோ டயட் முறையில் சில சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த பேலியோ டயட் உணவு முறையானது கற்காலத்தில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதாவது நாம் இன்று சமைத்து சாப்பிடும் நிறைய உணவுகள் சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை. அதற்கு முன்னர் இந்த உணவுகள் எல்லாம் வழக்கத்தில் இல்லை.

ஏன் ஆதிகாலத்தில் விவசாயம் என்கின்ற விஷயமே கிடையாது. அரிசி போன்ற தானிய வகைகள் ,துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகள் எல்லாம் அந்த சமயத்தில் கிடையாது. ஆனால் இதை எதையுமே சாப்பிடாதவர்கள் மிகவும் ஆரோக்கியமானவர்களாகவும், மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால் நாம் இன்று பல வகையான உணவுகளை கண்டுபிடித்த சாப்பிட்டு வருகின்றோம். ஆனால் நாம் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளோமா என்பது பெரிய கேள்விக்குறிதான். படிக்க: குழந்தைகள் சாப்பிட சத்தான உணவுகள்.

இந்த பதிவில் நாம் பேலியோ டயட் என்றால் என்ன? இந்த பேலியோ டயட் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? உடல் எடையைக் குறைக்க இந்த டயட் முறையை எவ்வாறு கடைபிடிக்க முடியும் போன்ற பல தகவல்களையும் தெளிவாகப் பார்க்கலாம். எடையை குறைக்கும் திரவ உணவுகள்..

பேலியோ டயட் முறையில் சில உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதேபோல இந்த டயட் முறையில் சில உணவுகளை சாப்பிடவே கூடாது. ஆக இந்த பேலியோ டயட் முறையை தொடங்க முடிவு செய்தவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட கூடாது ?என்பதைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். அதேபோல இந்த டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்குவது மிகவும் ஏற்றது.

பேலியோ டயட் முறையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

1.சில பால் வகை உணவுகள்

2.தானியங்கள்

3.உப்பு

4.பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்( சிப்ஸ் ,பீட்சா ,பர்கர்)

5.நொறுக்கு தீனிகள்

6.பருப்பு பொருட்கள்( பட்டாணி பீன்ஸ் சோயா)

7.சில எண்ணெய் வகைகள்( சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ,பட்டாணி எண்ணெய், சோள எண்ணெய்)

8.சர்க்கரை

9.காபி

10.மது

பேலியோ டயட் முறையில் சாப்பிட வேண்டிய உணவுகள்

 • காய்கறிகள்
 • கேரட்
 • கீரை
 • ப்ராக்கோலி
 • முட்டைக்கோஸ்
 • காலிபிளவர்
 • கத்தரிக்காய்
 • பச்சை வெங்காயம்
 • குடைமிளகாய்
 • கொட்டை வகைகள்
 • வேர்கள்
 • முட்டை
 • அசைவ உணவுகள்( உதாரணம் ஆடு ,கோழி ,பன்றி ,மீன்)
 • எண்ணெய் வகைகள்( ஆலிவ் எண்ணெய் ,அவகேடோ எண்ணெய் ,தேங்காய் எண்ணெய்)

குடிக்க ஏற்ற பானங்கள்

தண்ணீர்
பாதாம் பால்
தேங்காய் பால்
இளநீர்
கிரீன் டீ

பேலியோ உணவுமுறை நன்மைகள்

இந்த உணவு முறையை பின்பற்றும் நபர்கள் அதை தொடர்ச்சியாகவும் ,உறுதியான மனப்பான்மையுடன் கடைபிடித்தல் அவசியம். இவ்வாறு செய்யும் நபர்களுக்கு இந்த உணவு முறை பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.அந்த வகையில் சில நன்மைகளை கீழே காணலாம்.

1.இந்த உணவு கலப்படம் அற்றது. இவற்றில் செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் என்று எதுவுமே கலக்கப்பட்டு இருக்காது.

2.இந்த உணவு முறையில் அசைவ உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உடலுக்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து நிறைந்த அளவில் கிடைக்கப் பெறுகின்றது.

3.இந்த உணவின் வழியே புரதம் மற்றும் கொழுப்புச் சத்து சரியான அளவில் கிடைக்கப்பெறுகின்றன.

4.உடலில் ஹார்மோன்கள் சீரான அளவில் சுரக்க தொடங்கும்.

5.உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்பெறும்.

6.கல்லீரலில் சேர்ந்த கழிவுகள் எல்லாம் நீங்கி சுத்தமடையும்.

7.இந்த உணவுமுறை உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கிருமித்தொற்று தாக்குதல் இருக்காது.

8.இதன் மூலம் அதிக அளவு நார்சத்து கிடைக்க படுகின்றது.

9. இந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வராது. உதாரணமாக புற்றுநோய் ,சர்க்கரை ,இதய வியாதிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

பேலியோ டயட் உடல் எடையைக் குறைக்குமா?

ஆம்.மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்களின் உடல் எடை குறையும். உடல் எடை குறையும் பொழுதும் அவர்களால் வலிமையானவர்களாகவும் ,ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க முடியும்.பேலியோ டயட் மூலம் கிடைக்கப் பெறும் நார்ச் சத்து,செரிமானம் சிறப்பாக நடைப்பெற உதவும்.இதன் மூலம் உடல் எடை குறையும்.

பேலியோ டயட் சர்க்கரை நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது?

இந்த உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளை அடையலாம் என்று பார்த்தோம். அதிலும் இந்த உணவுப் பழக்கம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகை கிடையாது.இது இன்சுலின் சுரப்பை ஏற்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது தீவிரம் அடையாமல் வழிவகுக்கும்.இந்த உணவுப்பழக்கம் மிகவும் பிரபலமடைந்ததற்கு மிக முக்கிய காரணம்.

பேலியோ உணவுகள்

இப்பொழுது பேலியோ டயட் முறையில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று தெளிவாக பார்க்கலாம்.

பேலியோ டயட் முறையை மேற்கொள்ளும் முன்பு ரத்தம் மற்றும் உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்கு காரணம் இந்த டயட் தொடங்கிய பிறகு உடலில் எந்த விதமான மாற்றங்கள் தென்படுகின்றன என்பதை அறியவே இந்த விஷயம் அறிவுறுத்தப்படுகின்றது. ஒரு மாத கணக்கில் இந்த டயட்டை கடைப்பிடித்த பிறகு மீண்டும் இதே பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும். பரிசோதனையின் முடிவில் வியத்தகு மாற்றங்கள் தென்படும்.

பேலியோ டயட் மெனு 1

பேலியோ டயட் மெனு சிலவற்றை பார்க்கலாம்.

காலை:
முட்டை 4 வேகவைத்து அல்லது ஆம்லெட்

அல்லது

பாதாம் அல்லது பிஸ்தா பருப்புகள் 100 கிராம்
(பொறுமையாக கடித்து மென்று சாப்பிட வேண்டும்)

மதியம் நேரம் வரை பசி எடுக்காமல் மேலே சொன்ன உணவுகள் காக்கும். மீறியும் பசி எடுக்கும் சூழலில் கிரீன் டீ அல்லது கொய்யா பழம் சாப்பிடலாம்.

மதியம்:
கிரில்டு சிக்கன்

அல்லது

காலிபிளவர் அல்லது ப்ராக்கோலி( வேக வைத்தது) அல்லது கீரை

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு
இளநீர்

( நடுவில் தேவைப்பட்டால் 40 கிராம் அளவிற்கு கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக் கொள்ளலாம். பேலியோ டயட் உணவு முறைகள் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வது உகந்தது அல்ல. ஆனால் இவ்வளவு நாள் உடல் கார்போஹைட்ரேட்டை நம்பியே இருந்துள்ளது. உடனே உணவு பழக்கத்தை மாற்றும் பொழுது உடல் ஏற்றுக்கொள்ள சிரமப்படும். அதனால் இந்த அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான அளவு 40 கிராம் கார்போஹைட்ரேட்.இதற்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். படிப்படியாக இந்த அளவை குறைத்துக் கொள்ளலாம்.)

மாலை:
கிரீன் டீ

அல்லது பால்( கொழுப்பு நீக்க படாதது),தேங்காய் துண்டுகள்

மாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிறந்தது.

இரவு:
டுனா மீன்

காலை எழுந்தவுடனும் தூங்குவதற்கு முன்பும் வாயை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கொப்பளித்து விடுங்கள்.

பேலியோ மெனு 2

இன்னொரு வகையான பேலியோ மெனுவை பார்க்கலாம்

காலை
முட்டை 4

மதியம்
சிக்கன் சூப் இறைச்சி சூப்

மாலை
சாலட் ஒரு கப்

இரவு
ஸ்டஃப்டு குடமிளகாய்/ சிக்கன் ஃபிங்கர்ஸ்

பேலியோ டயட் முறையை பின்பற்ற விரும்புவர்களுக்கு சில குறிப்புகள்

1.நாள் தவறாமல் முன்னூறு கிராம் அளவிற்கு காய்கறிகள் சாப்பிட வேண்டும்.

2.அதேபோல நிச்சயமாக வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கீரைகளை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

3.தினமும் பூண்டு ,மஞ்சள்தூள் போன்றவற்றை உணவுகளில் சேர்ப்பது உகந்தது.

4.ஒவ்வொரு விதமான காய்கறி மற்றும் கீரை வகைகளுக்கு தனித்தனியான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதனால் ஒரு அட்டவணையை போட்டுக் கொள்ளவேண்டும். இதனைப் பயன்படுத்தி சுழற்சிமுறையில் காய்கறி மற்றும் கீரைகளை உட்கொள்ளுதல் அவசியம்.

இந்த பதிவின் மூலம் பேலியோ டயட்டின் பல்வேறு நன்மைகளையும், பேலியோ உணவு வகைகள் பற்றியும் படித்து அறிந்திருப்பீர்கள். இந்த உணவுப் பழக்கத்தை பயன்படுத்தி உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ளுங்கள். மேலும் பல்வேறு நல்ல பலன்களை அடையுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null