குழந்தைகளுக்கு ஏற்ற 4 வகை ஹெல்தி, டேஸ்டி பான்கேக் ரெசிபி...

குழந்தைகளுக்கு ஏற்ற 4 வகை ஹெல்தி, டேஸ்டி பான்கேக் ரெசிபி...

குழந்தைகளுக்கு தோசைக்கு பிறகு பிடித்தமான உணவு என்னவென்றால் அது பான்கேக்தான். தற்போது அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கிறது. இனிப்பு மற்று கார சுவையிலும் பான்கேக் செய்ய முடியும். சத்தும் சுவையும் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு தரலாம். பான்கேக் ரெசிபி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

4 வகை ஹெல்தி பான்கேக் ரெசிபி

#1. வாழைப்பழ பான்கேக்

தேவையானவை

கோதுமை மாவு - 1 கப் வாழைப்பழம் மசித்தது - 2 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன் பட்டைத் தூள் - 1 டீஸ்பூன் ஆப்பிள் துண்டுகள் - அரை கப்

செய்முறை

ஒரு பவுலில் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், பட்டைத் தூள் போட்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மாவுப் பதத்தில் கலக்கவும். தவாவை மீடியம் சூட்டில் வைத்து, வெண்ணெய் போட்டு தேய்க்கவும். சின்ன சின்ன பான்கேக் அளவில் மாவை ஊற்றவும். இருபுறமும் வெண்ணெய் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். தட்டில் பான்கேக் வைத்து, தேன் ஊற்றி, ஆப்பிள் துண்டுகள் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு

8+ மாத குழந்தைக்கு தரலாம். 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தேன் தவிர்க்கலாம். பழங்கள் உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப சேர்க்கலாம். oats meal pancakes இதையும் படிக்க: குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

#2. ஓட்ஸ்மீல் பான்கேக்

தேவையானவை

ஓட்ஸ் - 1 கப் பால் அல்லது தேங்காய் பால் - ½ கப் பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை

ஓட்ஸை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். பவுலில் ஓட்ஸ், பால் அல்லது தேங்காய்ப்பால், தேவையான தண்ணீர், பட்டைத்தூள் சேர்த்துக் கலக்கவும். தோசை மாவு பதத்தில் கலக்க வேண்டும். சூடான தவாவில் நெய் ஊற்றி, பான்கேக்குகளை ஊற்றவும். இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு

7-12 மாத குழந்தைக்கு, தேங்காய் பால் சேர்க்கலாம். 1 வயது + குழந்தைக்கு, பால் சேர்க்கலாம். இனிப்புக்கு வெல்லம், பாலிஷ் செய்யாத சர்க்கரை சேர்க்கலாம். ஒரு வயது + குழந்தைக்கு மட்டுமே இனிப்பு. pancakes for babies இதையும் படிக்க: 8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#3. யோகர்ட் பான்கேக்

தேவையானவை

கோதுமை மாவு - 1 கப் பாலிஷ் செய்யாத சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் யோகர்ட் - ½ கப் முட்டை - 1 வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

பவுலில் மாவு, சர்க்கரை, யோகர்ட், முட்டை சேர்த்து நன்கு கலக்கவும். சூடான தவாவில் வெண்ணெய் தடவி, பான்கேக்குகளாக ஊற்றவும். பான்கேக்குகளை இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு

1 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது. pancakes for kids இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

#4. சர்க்கரைவள்ளி கிழங்கு பான்கேக்

தேவையானவை

கோதுமை மாவு - 1 கப் வேகவைத்து, மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு - ½ கப் பால் - கலக்கத் தேவையான அளவு நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

பவுலில் கோதுமை மாவு, சர்க்கரைவள்ளி கிழங்கு, பால் ஆகியவற்றைக் கலந்து தோசை மாவு பதத்தில் கலக்கவும். சூடான தவாவில் நெய் தடவிய பின், பான்கேக்குகளாக ஊற்றவும். சத்தான இனிப்பான பான்கேக் ரெடி.

குறிப்பு

6-12 மாத குழந்தைகளுக்கு, பாலைத் தவிர்த்து தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null