கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட்டால்  என்னாகும்? ஆபத்தானதா?

கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் என்னாகும்? ஆபத்தானதா?

கர்ப்ப காலத்தில் ஒரு கர்ப்பிணி பெண் எதையெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பதையொட்டி, நம் நாட்டில் ஓராயிரம் விசயங்கள் நிலவுகின்றன. இதை செய்.. இதை செய்யாதே..! என்று பல யோசனைகள் ஒரு கர்ப்பிணியை சுற்றி நிலவிக் கொண்டே இருக்கும். இந்த விசயங்கள் அனைத்தும் பாட்டி, அம்மா, உறவினர் என்ற வகையில் வழிவழியாக கடத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆனால் இதில் உண்மை எது? பொய் எது என்று சிறிதளவாவது ஆராய்ந்து தெரிந்து கொள்வது அவசியம்!

அந்த வகையில் பப்பாளி பழங்களைக் குறித்த விசயங்களும் குறிப்பிடத்தக்கது. ஆம்! கர்ப்பிணிகள் பப்பாளி பழங்களைத் தொடவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் பப்பாளிகளை சாப்பிடலாமா? உண்மை என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.

இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது என்று பார்க்கலாமா? இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான். கர்பிணிகளுக்கு மாதுளைஉகந்தது.

மலேசியா, இந்தோனேசியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பப்பாளி பழங்களின் சில பகுதிகள் கருக்கலைப்பிற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 82 % பெண்கள் கர்ப்பகாலத்தில் பப்பாளி பழங்களை சாப்பிடுவது இல்லை. இந்த தகவல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டு அறியப்பட்டுள்ளது.

பப்பாளி உடல் சூட்டை ஏற்படுத்துமா?

ஆசியக் கண்டத்தைப் பொருத்தவரை உணவுகள் சூடு தன்மை கொண்டவை மற்றும் குளிர்ச்சி தன்மை கொண்டவை என்று பிரிக்கப்பட்டுள்ளது. மிகவும் சூடு நிறைந்த உணவுகளைக் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றது. இந்த வகை சூடு தன்மை வாய்ந்த உணவு குழந்தையைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. இதே போல சற்று குளிர்ச்சி தன்மையான உணவுகளைச் சாப்பிடும் பொழுது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. பப்பாளி சூடு தன்மையான உணவுப் பட்டியலில் சேர்க்கிறது. அதனாலேயே கர்ப்ப காலங்களில் பப்பாளி பழங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சூட்டை குறைக்க?

பப்பாளிகளை இந்த நவீன காலத்திலும் கர்ப்பிணிகள் தவிர்க்கின்றனரா?

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் போதிய அளவில் அலசி ஆராய வேண்டும். அப்படியே யோசிக்காமல் பழைய பழக்க வழக்கங்களையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். நம்பிக்கைக்கு உகந்த செய்தி தளங்களில் விசயத்தைப் படித்து அறியலாம்.

கர்ப்பகாலத்தில் பப்பாளி பழங்களை எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்?

கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.

உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

பப்பாளி பழங்களில் என்ன சத்துக்கள் உள்ளன?

பப்பாளி பழங்கள் மிகவும் சத்து நிறைந்தது. இது சாப்பிடுவதால் ஏற்படும் பொதுவான நன்மைகளைப் பார்க்கலாம்.

செரிமானம் சிறப்புறும்

இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் செரிமானம் சிறப்படைந்து மலச்சிக்கல் ஏற்படாது.

சருமம் பொலிவடையும்

பப்பாளி பழங்களைச் சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறும். முகத்தில் ஏற்படும் புண்கள் கொப்புளங்கள் குணமடையும். கூந்தல் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

 

பச்சை தன்மை கொண்ட பப்பாளிகளைச் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தா?

ஆமாம். பச்சை தன்மை கொண்ட பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளில் பெப்சின் காணப்படும். இந்த பொருள் கர்ப்பிணிப் பெண்களை எப்படிப் பாதிக்கிறது? என்று விரிவாகப் பார்க்கலாம்.

பெப்சினால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

பிரசவ வலிகான ஹார்மோன்களைத் தூண்டி விடும்

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது, இயற்கையாக அவர்களின் உடலில் பிரசவ வலி தூண்டப்பட சில ஹார்மோன்கள் உற்பத்தியாகும். அவை ஆக்ஸிடோசின் மற்றும் பிரோஸ்டாகிளான்டின் என்பனவாகும்.இந்த ஹார்மோன்கள் உற்பத்தி ஆவதால் கருப்பை சுருங்க தொடங்கும். பச்சை பப்பாளிகளில் உள்ள பெப்சின் இந்த ஹார்மோன்களை உடலில் சுரக்கத் தூண்டி விடும். அதனால் உரிய காலத்திற்கு முன்பே கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ வலி தூண்டப் படும் அபாயம் உள்ளது. ஆக சரியாகப் பழுக்காத பப்பாளி பழங்களைக் கர்ப்பிணிகள் உண்ணவே கூடாது.

உணவின் மீது ஒவ்வாமையைத் தூண்டும்

இந்தப் பெப்சின் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக உணவின் மீது ஏற்படும் ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். இதனால் அவர்களுக்கு வாந்தி ஏற்படலாம். அதனால் சரியாகப் பழுக்காத பப்பாளிகளைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டாம்.

கருப்பை தோலைப் பாதிக்கும்

இந்த பெப்சின் கர்ப்பப்பையின் தோலை தாக்கும் தன்மை கொண்டது. அதனால் கருப்பையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடும்.குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.

சிசுவின் வளர்ச்சியைத் தாக்கும்

இந்த பெப்சின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் தன்மை கொண்டது. அதிக அளவு பெப்சியில் உடலில் சேரும் பொழுது குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்

இந்த வகை பப்பாளிகளைச் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இதனால் உற்கசிவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

கருச்சிதைவு

கர்ப்பகாலத்தின் முதல் நிலையில் இருக்கும் பெண்கள் இந்த வகை பப்பாளிகளைச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதை எடுத்துக்கொள்வதால் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை சுருங்கி விரிய துணைபுரிகிறது. இதனால் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

நன்கு கனிந்த பப்பாளிப் பழங்களில் பெப்சின் உள்ளதா?

இல்லை. இந்த பழங்களில் பெப்சின் கிடையாது. ஆக இதை தாராளமாகக் கர்ப்பிணிப் பெண்கள் எந்த பயமும் இன்றி உட்கொள்ளலாம்.இன்னும் சொல்லப்போனால் கனிந்த பப்பாளி பழங்களை உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

கர்ப்பிணிகள் தனித்த பப்பாளிகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் நிறைய பலன்கள் ஏற்படுகின்றன என்பது உண்மை.பல கர்ப்பிணிப் பெண்கள் இதை முயன்று பலன் அடைந்து உள்ளனர்.இதில் நிறைந்துள்ள சத்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நார்ச்சத்து

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை தொல்லையைத் தவிர்க்க உதவுகிறது.கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் , மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றுகின்றது.

போலிக் ஆசிட்

கனிந்த பப்பாளிகளில் போலிக் ஆசிட் சத்து நிறைவாக உள்ளது. இந்த சத்து கருவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது.

இதய செயல்பாடு மேம்படும்

கனிந்த பப்பாளிகள் இதய செயல்பாட்டினை மேம்படுத்துகின்றது.

ஆன்ட்டி ஆக்சிடென்ட்

பப்பாளிகளில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் ஃபிரி ராடிக்கல்ஸை தடை செய்கின்றன.

விட்டமின் ஏ, பி ,சி

இந்த சத்துக்கள் அனைத்தும் கர்ப்பிணிப் பெண்ணின் உடலின் எதிர்ப்புச் சக்தி மையத்தை வலுப்படுத்துகிறது. அதனால் கர்ப்ப காலத்தில் எந்த நோய்த் தொற்றும் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

பொட்டாசியம்

இதில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.பொட்டாசியம் தசைகளில் உள்ள திரவங்களை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கம் தடுக்கப்படுகிறது.

இந்தப் பதிவின் மூலம் கர்ப்பிணிகளுக்குப் பப்பாளி பழத்தைப் பற்றிய பயம் நீங்கி இருக்கும் என்று நம்புகிறோம். இனி எந்த கட்டுக்கதைகளையும் நம்பி கவலைப்பட வேண்டாம். கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்திற்குத் துணைபுரியும் கனிந்த பப்பாளிப் பழங்களை அளவான அளவில் சாப்பிட்டு நல்ல பலனை அடையலாம். அதே போல சரியாகக் கனியாத பச்சை பப்பாளிகளைத் தொடவே வேண்டாம்!

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null