8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி

8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி

சிறு குழந்தைகளுக்கு சத்தான, சுவையான, வகை வகையான உணவுகளைக் கொடுத்தால்தான் அவர்களின் உடல்நலத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த வயதில் நாம் தரும் சத்தான உணவுதான் அவர்களின் எதிர்கால பலத்தையே வடிவமைக்கும். எனவே சத்தான உணவுகளுக்கு முதலிடம் கொடுங்கள். சுவையான பாயாச வகைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம். 8 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த 5 வகை பாயாசங்களையும் கொடுக்கலாம். 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால், இனிப்பு சுவைக்கு உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

5 வகை பாயாசம்

#1. கசகசா பாயாசம்

kasa kasa payasam Image Source : Foodviva

தேவையானவை

 • கசகசா - ¼ கப்
 • டேட்ஸ் சிரப் - 2 டீஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
 • தேங்காய் பால் - 1 கப்
 • ஏலக்காய் - 1
 • நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

 • கசகசாவை 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின் தண்ணீரை வடித்து நைசாக அரைக்கவும்.
 • வாணலியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் அரைத்த கசகசாவைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
 • இறுதியாக, தேங்காய் பால், ஏலக்காய், டேட்ஸ் சிரப், நட்ஸ் பவுடர், நெய் சேர்த்துக் கலக்கவும்.
 • நன்கு கலக்கியதும் இறக்கிவிடலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

#2. சிவப்பு அரிசி பாயாசம்

red rice payasam Image Source : Just hindi இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்... 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…

தேவையானவை

 • சிவப்பு அரிசி - ½ கப்
 • தேங்காய் பால் - 1 கப்
 • ஏலப்பொடி - 1 சிட்டிகை
 • நெய் - 2 டீஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
 • பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் - சுவைக்கு ஏற்ப

செய்முறை

 • அரிசியை இரவு முழுவதும் ஊறவிட்டு, பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவேண்டும்.
 • வெந்த அரிசியை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
 • வாணலில் நெய் விட்டு அரைத்தவற்றை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றி கலக்கவும்.
 • சூடானதும் இறக்கி விடலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#3.அவல் பாயாசம்

aval payasam Image Source : India.com

தேவையானவை

 • அவல் - ½ கப்
 • ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் - 2 டீஸ்பூன்
 • தேங்காய் பால் - 1 கப்
 • ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
 • நெய் - 1 டீஸ்பூன்
 • நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் - சுவைக்கேற்ப

இதையும் படிக்க: ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்… 

செய்முறை

 • சிறிதளவு தண்ணீரில் அவலை கழுவிய பின் ஊறவைக்கவும்.
 • வாணலில் நெய், ஊறவைத்த அவலுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
 • பின்னர் தேங்காய் பால் ஊற்றவும்.
 • சூடானதும் ஏலப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் கலந்து இவை நன்கு கலந்ததும் இறக்கிவிடலாம்.
இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

#4. வீட் ரவை பாயாசம்

wheat rava payasam Image Source : Archana's Kitchen

தேவையானவை

 • கோதுமை ரவை - ½ கப்
 • பாசி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
 • தண்ணீர் - 2 கப்
 • ஏலப்பொடி - 1 சிட்டிகை
 • தேங்காய் பால் - 1 கப்
 • நெய் - 1 டீஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
 • டேட்ஸ் சிரப் - சுவைக்கேற்ப

செய்முறை

 • கோதுமை ரவை, பருப்பைக் கழுவி, வடிகட்டி வைக்கவும்.
 • வாணலில் நெய் ஊற்றி, கோதுமை ரவாவையும், பருப்பையும் போட்டு வறுக்கவும்.
 • வறுத்ததும் தண்ணீரை விடவும். மிதமான தீயில் வேகவிடவும்.
 • வெந்த பின் தேங்காய் பால், ஏலப்பொடி, நட்ஸ் பவுடர், டேட்ஸ் சிரப் சேர்த்துக் கலக்கவும்.
 • இளஞ்சூடாக பரிமாறலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி

#5.பருப்பு பாயாசம்

parupu payasam Image Source : Milkmaid

தேவையானவை

 • பாசி பருப்பு - ½ கப்
 • தண்ணீர் - 1 கப்
 • தேங்காய் பால் - ½ கப்
 • ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
 • டேட்ஸ் சிரப் அல்லது பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை

 • பாசிப் பருப்பை கழுவிக் கொள்ளவும்.
 • வாணலியில் பாசி பருப்பைப் போட்டு வறுக்கவும்.
 • 1 கப் தண்ணீர் ஊற்றி பாசி பருப்பை வேகவிடவும்.
 • வெந்த பாசி பருப்பை நன்கு கரண்டியாக் குழைத்துக் கொள்ளவும்.
 • அதில் தேங்காய் பால் ஊற்றி சூடேற்றவும்.
 • ஏலப்பொடி, நட்ஸ் பவுடர், எந்த இனிப்பு தேவையோ அதை சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • இளஞ்சூடாக பரிமாறலாம்.
இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.  

null

null