பரு, ஆக்னி இரண்டு விதமான பிரச்னைகள் சருமத்தில் வரும். சிலருக்கு வருவது பரு. சிலருக்கு வருவது ஆக்னி. பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணம் என இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். எதை சாப்பிட்டால் இப்பிரச்னை (home remedies for pimples and acne) வரும் எனத் தெரிந்து கொள்ளலாம். எது மரபியல் வழியாக வரும் என்பதையும் இங்குப் பார்க்கலாம். இயற்கையான தீர்வுகள், தடுக்க வழிகளும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
ஆக்னி (Acne)
சீபம், இறந்த சரும செல்கள், முடியின் வேர்கால்கள் (ஃபாலிக்கல்ஸ்) எல்லாமே ஒன்றாகி வீக்கமாக மாறி, பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டு, வீக்கத்துடன் பரு இருந்தால் அது ஆக்னி (Acne). முகம், கழுத்து, தோள்ப்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் வரும்.
வயதுக்கு வருவதற்கு முன் குழந்தைகளுக்கு வருவது அக்னி வல்காரிஸ் (acne vulgaris).
பெரியவர்களுக்கு வரும் அக்னி ரோசசியா (acne rosacea). நீண்ட காலம் இருக்கக்கூடிய பிரச்னை. மரபியல் வழியாக வரக்கூடியது.
பிம்பள் (pimple)
சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்னை பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்னையல்ல.
காரணங்கள்...பிம்ப்லெச்மு
வயிறு சுத்தமின்மை
மரபியல்
மலச்சிக்கல்
சுகாதாரமின்மை
மேக் அப் நீக்காதது
ஒத்துக்கொள்ளாத மேக் அப்
மேக் அப் பிரஷ் சுத்தமின்மை
தலைமுடியிலிருந்து பரவுதல்
பொடுகு
துடைக்கும் துண்டு
எண்ணெயில் பொரித்த உணவுகள்
துரித உணவுகள்
சீபம் சுரப்பு அதிகமாக இருப்பது
ஹார்மோன் பிரச்னை
பிசிஓடி
உடல்பருமன்
கெட்ட கொழுப்பு உடலில் இருப்பது
தலையணை உறை
மலத்தைக் கழிக்காமல் அடக்குதல்
உடல் சூடு
தண்ணீர் குடிக்காமல் இருத்தல்
வெள்ளைப்படுதல் பிரச்னை
இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
பரு, ஆன்கி நீங்க இயற்கை சிகிச்சைகள்…
ஈஸ்ட்
கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.
Image Source : stylecraze
தயிர் பேக்
எலுமிச்சை சாறில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால், ஆக்னியை விரட்டும். ஆன்டிபாக்டீரியல் பொருள் உள்ளதால் ஆக்னியை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். நேரடியாக எக்காரணத்துக்கும் தனியாக எலுமிச்சை சாறை முகத்தில் போட கூடாது. மற்ற பொருட்களோடு சேர்த்துதான் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். தனியாக எலுமிச்சை சாறு மட்டும் போட்டால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.
யோகர்டை நன்றாக வடிகட்டி கெட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கெட்டி யோகர்ட் அல்லது தயிர்.
அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மாதுளை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்காக போடலாம்.
30 நிமிடங்கள் கழித்து வெறும் நீரில் கழுவலாம்.
தக்காளி ஸ்கரப்
முகத்தைக் கழுவிய பிறகு, தக்காளியை பாதியாக அறிந்து கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சளை கொஞ்சமாக தட்டில் போடவும். அறிந்த தக்காளி பகுதியை அப்படியே மஞ்சளில் போடவும். தக்காளியில் மஞ்சள் ஒட்டிக்கொள்ளும். இதை முகம் முழுவதும் நன்கு தேய்த்து, மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
கடலை மாவு பேக்
2 ஸ்பூன் கடலைமாவு, அதைக் கலக்க எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.
கழுவிய பின் ஆலுவேரா ஜெல்லை லேசாக பூசிக் கொள்ளலாம்.
ஆலுவேரா ஜெல்
ஆலுவேரா ஜெல்லுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் பூசுங்கள். இரவில் தடவி மறுநாள் காலை கழுவி விடலாம்.
பட்டைத் தேன்
பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.
தேன் பேக்
தேனும் எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
வாரம் 3 முறை செய்யுங்கள்.
துளசி ஃபேஸ் பேக்
துளசி இலை பவுடர் - ஒரு ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - ஒரு சிட்டிகை
முல்தானிமிட்டி - ஒரு ஸ்பூன்
ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
இதையும் படிக்க: கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
ஒரே இரவில் பரு, ஆக்னி குறைய வழிகள்…
வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். பரு, ஆக்னி குறைந்து இருப்பது தெரியும்.
கஸ்தூரி மஞ்சளை, ரோஸ் வாட்டரில் குழைத்து பரு உள்ள இடத்தில் மட்டும் தடவி மறுநாள் கழுவுங்கள்.
ஜாதிக்காயை சிறிது ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.
அதேபோல சந்தன கட்டையை ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.
5 சொட்டு ஆலிவ் எண்ணெய் மற்றும் 5 சொட்டு டீ ட்ரீ எண்ணெய் கலந்து பரு, ஆக்னி உள்ள இடத்தில் பூசி மறுநாள் கழுவலாம். பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.
தடுக்க வழிகள்…
அதிகமாக மேக் அப் போடுவதைத் தவிர்க்கவும்.
மேக் அப் போட்டாலும் கட்டாயமாக இரவில் அதை நீக்கிவிட்டு தூங்குவது அவசியம்.
பருக்களை விரட்ட பீட்ரூட் சாறு உதவும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும்.
அதிகமான வெயில்கூட சருமத்தைப் பாதிக்கலாம்.
ஹெவியான கிரீம் போட வேண்டாம்.
பரு, ஆக்னி உள்ளவர், ஜெல் வகை கிரீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.
துரித உணவுகள், சாக்லேட், கேக், பிஸ்கெட் சாப்பிட்டால் பருக்கள், ஆக்னி வரும்.
அடிக்கடி முகத்தில் கைவைத்துக்கொண்டே இருந்தாலும் பருக்கள் அதிகமாக வரும். பரவவும் செய்யும்.
ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் அல்லது ஃபேஸ் வாஷ் பவுடரால் முகத்தைக் கழுவுங்கள்.
இதையும் படிக்க: 3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்...
தலையில் பொடுகு, தலைமுடி சுத்தமில்லாமல் இருந்தாலும் பரு, ஆக்னி வரும்.
வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடி சுத்தப்படுத்துங்கள்.
கட்டாயம் தலையணை உறையை மாற்றுங்கள். வாரம் 1-2 முறை தலையணை உறையை மாற்றி விடுங்கள்.
முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தலாம். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்க கூடாது.
இதையும் படிக்க: கண்ணாடி போன்ற சருமம்... தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…
Image Source : Indiatimes
பரு, ஆக்னி நீக்கும் உணவுகள்…
2-3 லிட்டர் தண்ணீர்
தினமும் ஒரு எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை வாட்டர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இளஞ்சூடான தண்ணீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதுதான் லெமன் வாட்டர்.
மாதுளை
தினம் ஒரு வெள்ளரிக்காய்
வாரம் 3 இளநீர் குடிக்கலாம்
திரிபலா பவுடர் கலந்து மாலையில் அரை டம்ளர் அளவுக்கு குடிக்கலாம்.
இரவு 7 மணியளவில் 1-2 வாழைப்பழம்
சாத்துகுடி, ஆரஞ்சு, கமலா
தேங்காய்ப் பால்
காலையில், கற்றாழை ஜூஸ்
சப்ஜா விதைகள்
வெறும் வயிற்றில் பாதாம் பிசின்
இவையெல்லாம் பரு, ஆக்னி போக்க உதவும் உணவுகள்.
இதையும் படிக்க: சோர்ந்து போன தாய்மார்களுக்கு உற்சாகம் அளிக்கும் சிறப்பு உணவுகள்...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null