குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்...

குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்...

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் (Planning for Pregnancy) இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். அதற்கான டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தாய்மைக்குத் தயாராகும் முன்… (Planning for Pregnancy)

#1. மாதவிலக்கு காலத்தில்…

மாதவிலக்கின் போது,

 • கருப்பு உளுந்து
 • கருங்குருவை அரிசி
 • நல்லெண்ணெய்
 • முட்டை ஆகியவற்றை உணவாகச் சாப்பிடுங்கள்.

மாதவிலக்கு காலத்தில் வயிறு, கருப்பைச் சதைகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்கும் பொருட்டு 2 அல்லது 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.

மாதவிலக்கின் போது, குறைந்தது 18 மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும்.

#2. புத்துணர்வு தேவை

stress free life

Image Source: Credit blogs.constantcontact.com

இதையும் படிக்க: அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்…

பெண்கள் வீட்டிலே அடைந்து கிடக்காமால் கொஞ்சம் வெளியே சென்று புத்துணர்வு பெற்றுக் கொள்ளுங்கள். சுத்தமான காற்று, ரம்மியமான சூழலில் இருக்கப் பழகலாம்.

#3. புகை, மது தவிர்க்கலாம்

கட்டாயமாக புகை, மது போன்ற இவ்வித பழக்கங்களை தம்பதியர் இருவரும் தவிர்க்க வேண்டியது அவசியம். புகை, மதுவால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.

#4. உடற்பயிற்சி நல்லது

ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க உடற்பயிற்சி அவசியம். ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்ள உடற்பயிற்சி செய்வது சிறந்த வழி. உடற்பயிற்சியால் உடல் இயக்கங்கள் சீராகும். கருத்தரிக்க உதவும்.

#5. பெஸ்ட் டைம்

மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

#6. காபி, டீக்கு நோ சொல்லுங்கள்

avoid coffee

Image Source: Credit food.ndtv.com

இதையும் படிக்க: கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

சில ஆய்வுகளில் அதிகமாக காபி குடிப்பதால் குழந்தையின்மை தன்மை உருவாகிறதாக சொல்லப்படுகிறது. டீ குடிப்பதையும் தவிர்க்கலாம். பால் சேர்க்காத சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ இப்படி வீட்டில் தயாரித்துக் குடிக்கலாம்.

#7. கெமில்கல்கள் இல்லாத சூழல்

வீட்டை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், கதிர்வீச்சுகள் அதிகம் உள்ள இடம், டிடர்ஜென்ட், பூச்சிக் கொல்லி இப்படியான கெமிக்கல்களிடமிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம்.

#8. உடல் எடை பராமரிப்பு

weight loss exercise

Image Source : Credit today.com

உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடையோ குறைவான உடல் எடையோ இருக்க கூடாது.

#9. ஃபோலிக் ஆசிட் உணவுகள்

ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்…

#10. ஆரோக்கியமான குழந்தை உருவாக உதவும் உணவுகள்

 • பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.
 • முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • புரோக்கோலியும் நல்ல உணவு.
 • உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
 • மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும்.
 • மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள். pomegranate for pregnancyImage Source : Credit dietspotlight.com
 • வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள்.
 • அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
 • பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது.
 • ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம்.
 • பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.
 • கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் 48 நாட்களுக்குத் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்து வர கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆரோக்கியமானக் குழந்தை பிறக்க நல்ல வாய்ப்பாக இருக்கும்.
 • மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null