குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள் மிக்க 5 அவல் ரெசிபி

குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள் மிக்க 5 அவல் ரெசிபி

அவல் உணவு குழந்தைகளுக்கான பிரத்யேக உணவு என்றே சொல்லலாம். சத்துகளையும் சுவையையும் தரக்கூடியது. காலை, மதியம், இரவு என எந்த வேளையிலும் அவல் உணவுகளைக் குழந்தைகளுக்கு செய்து தரலாம். இதை செய்யும் நேரமும் 5-10 நிமிடங்களுக்குள்தான் ஆகும். எப்படி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

வகை வகையான 5 அவல் ரெசிபி

ராகி கேரட் அவல்

தேவையானவை

 • ராகி அவல் - 100 கிராம்
 • பொடியாக நறுக்கிய கேரட் - 50 கிராம்
 • மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை
 • உப்பு - சிறிதளவு
 • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
 • கடுகு, உளுந்து, வெந்தயம் - தாளிக்க

செய்முறை

 • ராகி அவலை தண்ணீர் விட்டு கழுவிய உடன், சுத்தமாக வடிகட்டி 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும்.
 • காய்கறிகள் சேர்த்து வதக்க வேண்டும்.
 • உப்பு, மிளகுத்தூள் சேர்த்து அவல் போட்டு கிளறவும்.
 • ராகி கேரட் அவல் தயார்.
இதையும் படிக்க: ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?

சோள வெஜ் அவல்

solam aval recipe Image Source: Jeyashris kitchen

தேவையானவை

 • சோள அவல் - 100 கிராம்
 • துருவிய கேரட், முட்டைக்கோஸ் - 50 கிராம்
 • கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
 • உப்பு, மிளகு தூள் - சிறிதளவு
 • கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

 • சோள அவலை தண்ணீர் விட்டு கழுவிய உடன், சுத்தமாக வடிகட்டி 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
 • எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும்.
 • இதனுடன் காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • பின்னர் கழுவி வைத்துள்ள அவலை சேர்த்துக் கிளறவும்.
 • உப்பு, மிளகுத்தூள் போட்டு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.
இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

கம்பு இனிப்பு அவல்

sweet poha recipe Image Source: Pinterest

தேவையானவை

 • ஊறவைத்த கம்பு அவல் - 100 கிராம்
 • தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
 • வெல்லம் தூள் - 1-2 டீஸ்பூன்
 • நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
 • நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

 • வாணலில் நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
 • பிறகு ஊறவைத்த அவலை போட்டு, வெல்லம் தூள் போட்டு கிளறவும்.
 • நட்ஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும். இளஞ்சூடாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

ஃப்ரூட் அவல் பால்ஸ்

poha fruit balls Image Source: Vegetarian Indian Recipes

தேவையானவை

 • ஊறவைத்த அவல் - 100 கிராம்
 • ஹோம்மேட் டேட்ஸ் சிரப் - சிறிதளவு
 • ஹோம்மேட் நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
 • துருவிய ஆப்பிள் - 1
 • தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
 • ஏலப்பொடி - ¼ டீஸ்பூன்
 • வறுத்த வெள்ளை எள் - 1/2 டீஸ்பூன்

இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

செய்முறை

 • பவுலில் ஊறவைத்த அவல் போட்டு, டேட்ஸ் சிரப், துருவிய ஆப்பிள், தேங்காய் துருவல், நெய், ஏலப்பொடி, ஹோம்மேட் நட்ஸ் பவுடர், வறுத்த வெள்ளை எள் சேர்த்து அவல் உருண்டை பால்ஸாக செய்யலாம்.
 • சுவையான, சத்தான அவல் ஃப்ரூட்ஸ் பால்ஸ் தயார்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் - ஸ்மூத்தி வகைகள்…

கார அவல்

aval recipe for babies Image Source: Chithras food book

தேவையானவை

 • ஒரு நிமிடம் ஊறவைத்த அவல் - 100 கிராம்
 • சீரகம் - 1 ஸ்பூன்
 • உளுந்து - 2 ஸ்பூன்
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • கறிவேப்பிலை - 1 கொத்து
 • மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
 • உப்பு - சிறிதளவு

செய்முறை

 • எண்ணெய் விட்டு சீரகம், உளுந்து, கறிவேப்பிலை தாளித்து ஊறவைத்த அவலை போட்டு கிளறவும்.
 • மிளகுத் தூளும் உப்பும் சேர்க்கவும்.
 • பிறகு கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.
இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்... 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி… ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null