இளநரையைப் போக்கும் 3 இயற்கையான ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை...

இளநரையைப் போக்கும் 3 இயற்கையான ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை...

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கூட இளநரை வந்துவிட்டது. இளநரை வருவது என்பது பொதுவான விஷயம் என்றாலும், அதை மறைக்க பலரும் மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டிலே ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

இளநரை வர பல காரணங்கள்…

மரபியல்

ஊட்டச்சத்து குறைபாடு

அதிக கெமிக்கல்கள் கொண்ட ஷாம்பு பயன்படுத்துவது

மெலனின் உடலில் குறைவது

புகை, குடிப்பழக்கம்

விட்டமின் பி12 குறைபாடு

அதிக ஸ்ட்ரெஸ்

மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுதல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

இளநரையை மீண்டும் கருப்பாக்க முடியுமா?

ஏற்கெனவே வந்த வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்குவது சாத்தியமல்ல. ஆனால், காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் மேற்கொண்டு வராமல் தடுக்கலாம்.

ஏற்கெனவே வெள்ளையான முடியை இயற்கையான ஹேர் டை மூலம் பாதுகாத்து பராமரிக்கலாம்.’

கெமிக்கல்கள் கொண்ட ஹேர் டை பயன்படுத்தினால், மண்டைத்தோல், முடி பாதிப்பதுடன் கண், சரும பிரச்னைகள் வரலாம்.

சில கெமிக்கல்கள் புற்றுநோய் காரணியாக செயல்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

ஹோம்மேட் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

#1. ஹோம்மேட் ஹென்னா ஹேர் டை

தேவையானவை

மருதாணி பவுடர் – 1 கப்

அவுரி இலை பவுடர் – 1 கப்

homemade hair dye

செய்முறை

முன்னாள் இரவே மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி வைக்கவும்.

மறுநாள், எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

முடியை நன்கு உலர்த்திய பிறகு, அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து, அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

இந்த முறையில் முடிக்கோ மண்டைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது.

100% இயற்கையானது. ஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும். பிறகு மீண்டும் வெள்ளையானால் மீண்டும் இதேபோல செய்து தலை முடியில் பூசிக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்…

#2. நெல்லி ஹேர் டை

தேவையானவை

உலர்ந்த நெல்லி – 100 கி

homemade amla dye

Image Source : Health Extremist

செய்முறை

உலர்ந்த நெல்லியில் கொட்டைகள் இருந்தால் நீக்கி கொள்ளவும்.

சிறிது சிறிதாக அறிந்து அதை இரும்பு வாணலியில் போட்டு வறுக்கவும்.

வறுக்க, வறுக்க நெல்லி பெரிதாகும்; கருப்பாகும்.

பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.

நெல்லி வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

கருப்பான தண்ணீரில், இரும்பு வாணலியில் நெல்லி இரவு முழுவதும் ஊறட்டும்.

மறுநாள் காலை நெல்லியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். இதில் ஊறவைத்த நெல்லி தண்ணீரே கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும்.

சுத்தமான, இயற்கையான நெல்லி ஹேர் டை தயார்.

எண்ணெய் இல்லாத தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின், வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.

அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ப கருமை நிறம், தலை முடியில் நீடிக்கும். அவரவர் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் எத்தனை முறை தலைக்கு குளிக்கிறார்கள் என்பது பொறுத்து கருமை நீடிக்கும்.

இதையும் படிக்க: 40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?

#3. ஹோம்மேட் பவுடர் ஹேர் டை

தேவையானவை

மருதாணி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

அவுரி இலை பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

நெல்லி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

டீ தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

homemade henna powder

Image Source : The Epoch times

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

பின் வடிகட்டி டிகாஷனை வைத்திருக்கவும்.

ஒரு பவுலில் மேற்சொன்ன 3 பவுடர்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.

இதில் தயிரை ஊற்றி கலக்கவும்.

பின் சிறிது சிறிதாக டீ டிகாஷனையும் கலந்து கலக்கவும்.

பேஸ்டாக வரும் வரை கலக்கவும்.

பின்னர் ஒரு வெள்ளை துணி போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

அவ்வளவுதான். நேச்சுரல் ஹேர் டை தயார்.

எண்ணெய் இல்லாத முடியில் பூசி, 1 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள்.

ஒரு மாதம் வரை இந்த நிறம் நீடிக்கும்.

இதையும் படிக்க: தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா?

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

10 டம்ளர் தண்ணீராவது தினமும் குடியுங்கள்.

20 உலர்திராட்சை, 3 பேரீச்சைகளைத் தினமும் சாப்பிடலாம்.

இரண்டு வேர்க்கடலை உருண்டை சாப்பிடலாம்.

ஒரு எள்ளு உருண்டை சாப்பிடுங்கள்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இரவில் ஒரு டம்ளரில் ஊறவைத்து, அதை மறுநாள் காலையில் கொதிக்கவிட்டு, வடிகட்டு தினமும் 48 நாளைக்கு வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கொத்தமல்லி துவையல், புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் அடிக்கடி சாப்பிடலாம்.

மாதம் இரு முறையாவது கரும்பு சாறு குடிக்கலாம்.

பச்சை நிற காய்கறிகளை அன்றாடம் சாப்பிடுங்கள்.

உங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக் கொண்டால் மேலும் இளநரை வராமல் தடுக்கலாம்.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null