தங்கை/தம்பிக்காக அக்கா/அண்ணாவைத் தயார்ப்படுத்துவது எப்படி? சூப்பர் சீக்ரெட்ஸ்...

தங்கை/தம்பிக்காக அக்கா/அண்ணாவைத் தயார்ப்படுத்துவது எப்படி? சூப்பர் சீக்ரெட்ஸ்...

புதிதாகப் பிறந்திருக்கும் அடுத்த குழந்தை இன்னொரு பொக்கிஷம்தான். ஏற்கெனவே இருக்கும் முதல் குழந்தையை எப்படி தயார்ப்படுத்துவது? சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சவால்கள் காத்திருக்கின்றன. அதை எப்படி கையாள்வது? முதல் குழந்தைக்கு ஏற்படும் ஏக்கத்தையும் பொறாமையும் சரியான முறையில் கையாள்வது எப்படி? அனைத்தையும் பார்க்கலாம்.

1-2 வயது உள்ள முதல் குழந்தையை கையாள்வது எப்படி?

இந்த வயதுள்ள குழந்தைகள் நீங்கள் சொல்வதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவர்களே குழந்தைகள்தான். இன்னொரு குழந்தையை அதிகமாகப் புரிந்துகொள்ளும் பக்குவம் குறைவுதான். நீங்கள் புதிதாக பிறக்கப்போகும் குழந்தையை பற்றி அவர்களிடம் பேசுங்கள். உங்களது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அவர்களிடம் தெரிவியுங்கள். முதல் குழந்தையை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். இது ஒரு பாசிட்டிவ் அணுகுமுறை. உங்கள் மகிழ்ச்சியை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் உங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாவார்கள். உங்களால் இரண்டு குழந்தைகளையும் திருப்திப்படுத்த முடியாது. இதை மனதில் வையுங்கள். இதற்கான ஒரு வழி இருக்கிறது. உங்கள் கணவர், பாட்டி, தாத்தா, வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களை முதல் குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்த சொல்லலாம். நீங்களும் உங்கள் முதல் குழந்தையும் சேர்ந்தே சின்ன சின்ன குழந்தைகளின் போட்டோக்களை பாருங்கள். இதுபோன்ற போட்டோக்களை காட்டி இதோ இரண்டு குழந்தைகள். ஒன்றாக விளையாடுகிறார்கள் என பாசிட்டிவ் அணுகுமுறை கொடுக்கலாம். நீ அக்கா/அண்ணா என ஒரு பட்டத்தைக் கொடுத்து, குழந்தையை குஷிப்படுத்துங்கள். புதிய குழந்தை பிறந்த பின், உங்களது முதல் குழந்தைக்கு ஸ்பெஷல் ரெசிபி, பொம்மை என எதாவது பரிசு பொருள் வாங்கி கொடுக்கலாம். தன் மீது அன்பு இருக்கிறது என்பதை உணருவார்கள். முதல் குழந்தையை அப்பா, பாட்டி போன்ற பெரியோரிடம் அதிக நேரம் செலுத்தும் படி செய்யலாம். prepare your child for sibling

2 - 4 வயது வரை உள்ள முதல் குழந்தை தயார்ப்படுத்துதல்...

இந்த வயதில் குழந்தைகள் ரொம்பவே நெருக்கமாக இருப்பார்கள். இந்த வயது குழந்தைகள், தன் தாயை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்ப மாட்டார்கள். மிகவும் சென்சிட்டிவ்வாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் புதிய நபர் வரப்போகிறது என்பது கொஞ்சம் இவர்களுக்கு அச்சம் தரலாம். இதையும் படிக்க: உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்...

ஈஸியான டிப்ஸ் மூலம் இவர்களைத் தயார் படுத்தலாம்...

மற்றவர்கள் சொல்வதைவிட நீங்களே உங்கள் முதல் குழந்தையிடம் பிறக்க இருக்கும் குழந்தையைப் பற்றி சொல்லுங்கள். வயிறு வளர்ந்துகொண்டு இருப்பதைக் காண்பித்து, ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். நிறைய சித்திரங்கள் கொண்ட புத்தகங்களை வாங்கி இவர்களுக்கு பரிசளியுங்கள். முதல் குழந்தையிடம் நீ ரொம்ப அழகு, கியூட். அதுபோல, இன்னொரு அழகான குழந்தையும் வரப்போகிறது எனச் சொல்லுங்கள். நீ ரொம்ப சமத்து குழந்தை, நல்ல குழந்தை. உன்னை போல இன்னொரு குழந்தையும் பிறக்கும். நீ தான் முதல் செல்லம் எனச் சொல்லுங்கள். புதிய குழந்தை பிறந்தால், சின்ன குழந்தை என்பதால் அதற்கு சாப்பிட தெரியாது, தூங்க தெரியாது. உனக்கு நான் சொல்லி கொடுப்பதைப் போல அந்த குழந்தைக்கும் சொல்லி கொடுப்பேன் எனச் சொல்லி புரிய வைக்கலாம். புதிய குழந்தை வந்தவுடன் நீ விளையாடலாம் என ஆர்வத்தை தூண்டி விடுங்கள். இப்போது உங்கள் குழந்தையை நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அதுபோலவே பிறகும் விரும்புவேன் என உறுதியாக குழந்தையிடம் சொல்லுங்கள். புதிய குழந்தைக்கு தேவையானப் பொருட்களை வாங்கும்போது, முதல் குழந்தையையும் ஈடுபடுத்துங்கள். முதல் குழந்தை பிறந்தபோது எடுத்த படங்களை காண்பியுங்கள். இதுபோன்ற ஆடை வாங்கலாம் எனச் சொல்லலாம். அவர்கள் குழந்தையாக இருந்த படங்கள் அனைத்தையும் காண்பிக்கலாம். இது அவர்களுக்கு கொஞ்சம் புரியும். தானும் இப்படி இருந்தோம் என சிந்திப்பார்கள். புதிய குழந்தைக்கு வாங்கும் பொம்மைகளை, முதலில் முதல் குழந்தை விளையாடிவிட்ட பின் கொடுக்கலாம். புதிய குழந்தை பிறப்பதற்கு முன்னே, கழிப்பறை பழக்கங்கள் அனைத்தும் முதல் குழந்தைக்கு கற்று கொடுத்து விடுங்கள். ஏனெனில், புதிய விஷயங்களை இப்போது கற்று கொள்ள சிரமப்படுவதுடன் இந்தக் குழந்தை வந்ததால்தான் நானே செய்ய வேண்டும் என நினைப்பார்கள். கழிப்பறைப் பழக்கங்களை கற்றுக்கொண்ட பின்னும், இப்போது புதிய குழந்தை வந்ததால் சில நேரம் அடம் பிடிப்பார்கள். நீங்கள் அவ்வபோது முதல் குழந்தையுடன் நேரம் செலவழியுங்கள். முதல் குழந்தை, நல்ல முறையில் நடக்கும்போதெல்லாம் பாராட்டுங்கள். அவர்களை வழிக்கு கொண்டு வந்து விடலாம். குழந்தையை பெற்றெடுக்க நீங்கள் மருத்துவமனைக்கு செல்லும் முன், நீங்கள் தம்பி/தங்கையுடன் திரும்பி வருவேன் எனச் சொல்லி புரிய வைத்துவிட்டு செல்லுங்கள். கதை சொல்வது, பேசுவது, படிப்பது, விளையாடுவது போன்ற விஷயங்களை முதல் குழந்தையுடன் செய்யுங்கள். புதிய குழந்தைக்கு நீங்கள் பாலூட்டும் போது, முதல் குழந்தை பார்த்தால் அவர்களை அணைத்து முத்தம் இடுங்கள். புதிய குழந்தையை பார்க்க வருபவர்களிடம் சில மணி துளிகளாவது முதல் குழந்தையிடம் கொஞ்ச நேரம் செலவழிக்க கேளுங்கள். புதிய குழந்தை வந்த பின், முதல் குழந்தையுடன் அப்பா அதிக நேரம் செலவழிக்கலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
preparing your child for sibling Image Source : titansautheneticshop இதையும் படிக்க: குழந்தைகளின் சருமப் பிரச்னைகளும் அதன் தீர்வுகளும்...

பள்ளி செல்லும் முதல் குழந்தைகளை தயார்படுத்துதல்...

இவர்களைக் கையாள்வது சுலபமான விஷயம்தான். எனினும், புதிய குழந்தை வந்த பின் இவர்களையும் நீங்கள் கவனிக்கதான் வேண்டும். முதல் குழந்தைக்கு, தம்பி/தங்கை வரப்போகிறது எனச் சொல்லுங்கள். இதனால் இருக்கும் நன்மைகள் என்னென்ன எனச் சொல்லுங்கள். சில நேரங்களில் நீங்கள் கொஞ்சம் பிஸியாக இருக்கும்படி இருக்கலாம் என்பதையும் சொல்லுங்கள். அவர்களுக்கு புரியும். முதல் குழந்தையுடன் சேர்ந்து சின்ன சின்ன வேலைகளை செய்வது, துணிகளை எடுப்பது, டயாப்பர் வாங்குவது, குழந்தைக்கு தேவையான ஷாப்பிங் போன்ற அனைத்தும் முதல் குழந்தையுடன் செய்யுங்கள். மருத்துவமனைக்கு வந்து பிறந்த குழந்தையை முதல் குழந்தை பார்க்க அனுமதியுங்கள். தொட அனுமதியுங்கள். புதிய குழந்தை வீட்டுக்கு வந்ததும், நீங்கள் எப்படி அக்கறை எடுத்து செய்கிறீர்களோ அதுபோல முதல் குழந்தையையும் பார்த்துகொள்ள சொல்லுங்கள். குழந்தையை அழாமல் பார்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் எனப் பெரிய குழந்தைக்கு சொல்லித் தரலாம். சின்ன குழந்தையின் ஆடைகளை நீங்களும் முதல் குழந்தையும் சேர்ந்தே மடித்து வையுங்கள். சின்ன குழந்தையிடம் பெரிய குழந்தை அன்பாக நடந்துகொள்ளும் போதெல்லாம் பாராட்டுங்கள். பரிசு கொடுக்கலாம். சூப்பர் என அணைத்துக் கொள்ளலாம். பெரிய குழந்தையை எக்காரணத்துக்கும் கவனிக்காமல் விட வேண்டாம். கொஞ்சம் முயற்சி செய்து அவ்வப்போது பெரிய குழந்தையுடன் நேரம் செலவழியுங்கள். பெரிய குழந்தைக்கு ஓவியம் வரைதல் போன்ற எதாவது ஒரு பழக்கத்தில் ஈடுபடுத்தலாம். இதனால் அவர்களின் கவனம் மாறும். இது உங்களுக்கும் ஈஸியான வழி. இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null