கொசுக்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? இயற்கை விரட்டிகளால் முடியுமா?

கொசுக்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? இயற்கை விரட்டிகளால் முடியுமா?

கொசுக்கள் வீட்டுக்குள் வருவதை நாம் விரும்பவே மாட்டோம். கொசுக்களால் அதிக நோய்கள் வரும். குழந்தைகளுக்கு அதிக பிரச்னையை ஏற்படுத்தும். கொசுவை வீட்டுக்குள் வராமல் தடுக்க என்ன செய்யலாம். வந்த கொசுக்களை விரட்டுவது எப்படி? கொசு கடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள என்னென்ன வீட்டு வைத்தியங்கள். அனைத்துமே இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கொசு, பூச்சிகளை விரட்டும் ஸ்ப்ரே

ஆப்பிள் சிடர் வினிகர் தண்ணீர் டீ ட்ரீ எண்ணெய் - 5 துளிகள் லெமன் எண்ணெய் - 5 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் - 5 துளிகள் ஸ்ப்ரே பாட்டிலில் பாதி தண்ணீர், பாதி ஆப்பிள் சிடர் வினிகர் ஊற்றவும். அதில் மேற்சொன்ன எண்ணெய்களை கலக்கவும். அவ்வளவுதான் கொசு, பூச்சிகளை விரட்டும் ரூம் ஸ்ப்ரே தயார்.

கொசுக்களிடமிருந்து பாதுகாக்கும் ஹோம்மேட் லோஷன்

தேங்காய் எண்ணெய் - 1 கப் லாவண்டர் எண்ணெய் - 12 துளிகள் லெமன் கிராஸ் எண்ணெய் - 8 துளிகள் டீ ட்ரீ எண்ணெய் - 8 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் - 6 துளிகள் சிட்ரொனெல்லா எண்ணெய் - 6 துளிகள் தேங்காய் எண்ணெயில் மேற்சொன்ன அனைத்து எண்ணெய்களையும் கலக்கவும். இதை இரவில் கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் தடவி கொள்ளவும். கொசு கடிக்காது. இதையும் படிக்க: கொசுக்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிகள்... home remedies for mosquito bites Image Source : Youtube

எலுமிச்சை கிராம்பு

எலுமிச்சையை அறிந்து அதில் சில கிராம்புகளை சொருகி வையுங்கள். இதை நீங்கள் படுக்கும் அறையில் வைக்கலாம்.

கொசுவை விரட்டும் எண்ணெய்

தேங்காய் எண்ணெயுடன் ஒரு துளி லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், கொசு நெருங்காது. தேங்காய் எண்ணெய் உள்ள பாட்டிலில் 10-15 துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து வையுங்கள். இதை கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் தடவலாம்.

வேப்பிலை + லாவண்டர் எண்ணெய்

வேப்பிலை இலைகளை அரைத்து அந்த ஜூஸில் 5 துளி லாவண்டர் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்யுங்கள்.

தேங்காய் நார்

காய்ந்த தேங்காய் நார்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மாலை வேளையில் வீட்டில் ஒரு தட்டில் போட்டு எரிய விடுங்கள். இந்தப் புகை கொசுவை விரட்டி விடும். இயற்கையான பொருள் என்பதால் பாதிப்பு வராது.

கற்பூரவல்லி ஸ்ப்ரே

கற்பூரவல்லி சாறு, கற்றாழைச் சாறு ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யுங்கள்.

யூக்கலிப்டிக்ஸ் புகை

யூக்கலிப்டிக்ஸ் இலைகளை காயவைத்துக் கொள்ளுங்கள். அதை சாம்பிராணி போல வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டுக்குள் வராது.

மாப்பூக்கள் புகை

சாம்பிராணி போல மாப்பூக்களை எரித்தாலும் அதன் புகையால் கொசுக்கள் வராது. இதையும் படிக்க: கொசு கடி காயத்தை நீக்கும் 5 வீட்டு வைத்தியம்

மூலிகை சாம்பிராணி

நாட்டு மருந்து கடைகளில் விற்கும் மூலிகை சாம்பிராணியை வீட்டில் அரை மணி நேரத்துக்கு போடலாம். அல்லது கற்பூர எண்ணெயை நீரில் கலந்து தெளிக்கலாம்.

மூலிகை புகைத்தல்

வேப்பிலை, நொச்சி இலைகளை ஆகியவற்றை நன்கு உலர்த்திக் கொள்ளுங்கள். இதைப் புகை போட்டால் கொசு வராது. prevent mosquitoes at home Image Source : Easy to grow bulbs
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

வீட்டை சுற்றி செடிகள்

துளசி, கற்பூரவல்லி, லெமன் கிராஸ், திருநீற்றுபச்சிலை செடி வளர்க்கலாம். கொசுக்கள் வீட்டுக்கு வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

மின்ட் ஸ்ப்ரே

புதினா இலைகள் ஒரு கைப்பிடி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். ஆறியதும் வடிகட்டி காலி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்யவும்.

கொசு வராமல் தடுக்கும் வழிகள்

வீட்டை சுத்தமாகப் பராமரிக்கவும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். குப்பைகளைத் தேக்கி வைக்க வேண்டாம். தினமும் அகற்றிவிடுங்கள். நிறைய பொருட்கள் வீட்டில் இல்லாமல், எல்லாம் சரியாக இருக்கும் படி சீர்ப்படுத்தி வையுங்கள். மறைவான இடங்களில் எல்லாம் மூலிகை புகை போட்டு வைக்கலாம். வீட்டை வாரம் இருமுறையாவது துடைக்கவும். வீடு துடைக்கும் தண்ணீரில் மஞ்சள் தூள், கல்லுப்பு, புதினா எண்ணெய் ஆகியவை கலந்து வைக்கலாம். இந்த வாசனை கொசுக்கள் வருவதைத் தடுக்கும். நொச்சி மரம், வேப்பிலை மரம் வீட்டருகில் இருப்பது நல்லது. கற்பூரவல்லி, புதினா, லெமன் கிராஸ் செடியை வீட்டு வாசலில் வளர்க்கலாம். இதையும் படிக்க: எந்த நோயும் வராமல் தடுக்க என்னென்ன உணவுகளை குழந்தைக்கு தரலாம்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.  

null

null