கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். இதைக் கர்ப்பக்கால சர்க்கரை நோய் என்பார்கள். இதைப் பற்றி நாம் முழுமையாகப் பார்க்கலாம்.
கர்ப்பக்கால சர்க்கரை நோய்
கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும்.
தாய், சேய் என இரண்டு உயிர்கள் வெவ்வேறாக இருந்தாலும் தாயின் ஆரோக்கியமின்மை குழந்தையைப் பாதிக்கும்.
ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமெனில், தாய் போதுமான அளவு இன்சுலின் சுரப்பும், சரியான ரத்த சர்க்கரையும் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த இன்சுலினிலும் ரத்த சர்க்கரையிலும் சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்கு கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருக்கிறது என அர்த்தம்.
25 கர்ப்பிணிகளில் 1 கர்ப்பிணிக்கு கர்ப்பக்கால சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதையும் படிக்க : ரத்தசோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்…
கர்ப்பக்கால சர்க்கரை நோய்… ஏன்? எப்படி?
Image Source: womensmentalhealth.org
- குழந்தை வயிற்றில் கருவாக தோன்றும்போது நஞ்சுக்கொடி மற்றும் நஞ்சுப்பை தோன்றி, குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.
- கரு உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சில ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பைத் தடை செய்வதுடன் இன்சுலின் கிரகிக்கும் செல்களின் ஆற்றலையும் குறைக்கின்றன.
- கர்ப்பக்கால ஹார்மோன்கள் தாயின் இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படுத்துவதால், தாயின் சர்க்கரை அளவு அதிகரிக்க நேரிடுகிறது.
- குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான, அதிகப்படியான ஆற்றலை செல்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதால் இன்சுலின் தேவையும் அதிகரிக்கிறது.
- கர்ப்பக்கால ஹார்மோன்களின் மாறுபாட்டால், செல்களால் இன்சுலினை பயன்படுத்த இயலாமல் போய்விடுகிறது. இதுவே கர்ப்பக்கால சர்க்கரை நோய்க்கு ஒரு முக்கிய காரணம்.
இதையும் படிக்க : தாயாகத் திட்டமிடும் பெண்களுக்கு 10 டிப்ஸ்
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
Image Source : boldsky.com
- நடுத்தர வயதில் குழந்தை பெற்று கொள்ளும் தாய்மார்கள், இவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் சர்க்கரை நோய் தாக்கத்தால் பாதிக்கலாம்.
- தாயின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, குழந்தையின் நஞ்சுப் பையைத் தாண்டி செல்வது போல், இன்சுலின் செல்களால் நஞ்சுப்பையை தாண்டி செல்ல இயலாததால், தாயின் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது போல கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்திலும் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
- இதற்காக கருவில் உள்ள குழந்தையின் கணையம் ஆரம்பக் காலத்திலே அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியுள்ளது.
- இதனால் கிடைத்த ஆற்றலானது கொழுப்பு செல்களாக குழந்தையில் தோலுக்கு அடியிலும், கல்லீரலும் சேமிக்கப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் குழந்தை எடை அதிகரித்து கொழு கொழுவென்று மாற ஆரம்பிக்கிறது.
- இவ்வாறு கொழு கொழு குழந்தை பிரசவத்துக்குப் பின் வெளியே வந்ததும், திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகரித்து, மூச்சுத் திணறலுக்கோ அல்லது குறை ரத்த சர்க்கரை நோயுக்கோ ஆளாகிறது.
- இதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் உள்ள தாயுக்கும் பிறந்த குழந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம்.
இதையும் படிக்க : கர்ப்பக்கால விதிகள் … செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்…
எதனால் கர்ப்பக்கால சர்க்கரை நோய் தாய்க்கு வருகிறது?
Image Source : youtube.com
- பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருப்பது.
- தாமதமாகக் கருத்தரிப்பது
- உடற்பருமன்
- முந்தைய கருத்தருப்பின் போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் இருத்தால்…
கர்ப்பக்காலத்தில் தாய்க்கு தேவையானவை…
- சரிவிகித உணவு.
- மருத்துவரின் வழிகாட்டுதலுடன் மருந்துகள் சாப்பிடுதல்.
- இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும்.
- முறையான ரத்த சர்க்கரை பரிசோதனைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.
- உணவில் அடிக்கடி சீரகம், கருஞ்சீரகம், எள் சேர்ப்பது நல்லது.
கர்ப்பக்காலத்தில் சாப்பிட வேண்டியவை
Image Source : indiamart.com
- கம்பு
- ஓட்ஸ்
- சிவப்பு அரிசி
- மட்டை அவல்
- சம்பா ரவை
- கேழ்வரகு
- நிலக்கடலை
இதையும் படிக்க: பெண்கள், குழந்தைகளுக்கு வரும் ரத்தசோகையை தடுக்கும் உணவுகள்
உணவில் சேர்த்து சாப்பிட வேண்டியவை
- சுரைக்காய்
- பாகற்காய்
- வாழைத்தண்டு
- வெள்ளை முள்ளங்கி
- அவரைக்காய்
- முருங்கைக்காய்
- கீரைகள்
- சின்ன வெங்காயம்
- வாழைப்பூ
- வெண்டைக்காய்
- நூல்கோல்
- காராமணி
- பூசணிக்காய்
- பிஞ்சு கத்திரிக்காய்
- முட்டைக்கோஸ் ஆகியவை நல்லது. இவை சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
Source : ஆயுஷ் குழந்தைகள்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null