குழந்தைகாக நீங்கள் முதல் முறையாக சமைக்க போகிறீர்களா அதற்கு நீங்கள் சமையல் கலை நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இது குழந்தைகளுக்கான முதல் உணவு (Puree Recipes). இவற்றை செய்வது மிகவும் எளிது. நேரமும் குறைவு. சில நிமிடங்களில் ஆரோக்கியமான உணவை வீட்டிலே செய்து விடலாம்.
உங்களின் குழந்தைக்கு திட உணவு அல்லது முதல் உணவு கொடுக்க 6 மாதம் முடியும் வரை காத்திருக்க சொல்கிறது, அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ். ஆனால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் சில மாற்றங்கள் தெரிந்தால், திட உணவை 4-வது மாதத்திலிருந்தே கொடுத்து பழகலாம் என்கிறது இந்த அகாடமி.
புதிதாக ஒரு சுவையை நாம் திட உணவாகக் கொடுக்கும்போது 1-2 டேபிள்ஸ்பூன் அளவுக்குதான் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த உணவு குழந்தைக்கு ஏற்றுக்கொள்கிறதா எனத் தெரியும்.
இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
உங்கள் குழந்தை 4 மாதத்திலிருந்து சாப்பிட தொடங்கினால் அவர்களுக்கு கீழ் காணும் உணவுகளைக் கொடுக்கலாம்.
விட்டமின் ஏ, சி, இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. பட்டாணியில் தோல் இருப்பதால் முடிந்த அளவு அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு கேரட். ஏனெனில் இது இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. தோல் சீவி, கேரட்டை வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ சத்துகள் நிரம்பியுள்ளன.
தோல் சீவி பீட்ரூட்டை சிறிதாக நறுக்கி, நன்கு வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உடலில் ரத்தம் உற்பத்தியாக உதவும்.
இதையும் படிக்க: குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி?
நன்கு கழுவிய உருளைக்கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் வேக விடவும். வெந்ததும் தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடை கூட உதவும். நீண்ட நேரம் பசி தாங்கும்.
நன்கு கழுவிய சர்க்கரைவள்ளி கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் வேக விடவும். வெந்ததும் தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடைகூட உதவும். தோலுக்கு நல்லது. முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் (3 வகை) தயாரிப்பது எப்படி?
உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
கைக்குத்தல் அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்த பின் நன்கு வேக வைத்து மையாக மசித்துக் குழந்தைக்கு ஊட்டலாம். நுண்ணூட்ட சத்துகள் அனைத்தும் இதில் உள்ளது. அலர்ஜி ஏற்பட வாய்ப்பே இல்லை.
Image Source: speechfoodie.com
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?
பாதியாக அவகேடோவை நறுக்கி ஸ்பூனால் அதன் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பழுத்த அவகேடோவாக இருந்தால் க்ரீம் பதத்தில் வரும். ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. உடல் எடைகூட உதவும். சருமம் ஆரோக்கியமாகும்.
பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த உணவு இது. ‘பர்ஃபெக்ட் உணவு’ என வாழைப்பழ ப்யூரியை சொல்லலாம். குழந்தைகளுக்கான சிறந்த உணவுகள் இதுவும் ஒன்று. மலச்சிக்கல் நீங்கும்.
ஆப்பிளை வேக வைத்து அதன் தோலை நீக்கி உள் சதைப் பகுதியை நன்கு மசித்துக் குழந்தைக்கு கொடுக்கலாம். இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால் குழந்தைக்கு பிடிக்கும். விட்டமின், தாதுக்கள் நிரம்பியது.
இதையும் படிக்க: 6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்
ஸ்டாபெர்ரி பழத்தில் உள்ள பச்சை காம்பை எடுத்து விட்டு, பழத்தை நன்கு அரைத்துக் கொள்ளவும். இதைக் குழந்தைக்கும் கொடுக்கலாம். விட்டமின் சி, ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட் நிரம்பியுள்ளதால் குழந்தைக்கு மிகவும் நல்லது.
கிவி பழத்தின் நிறம் குழந்தைகளை ஈர்க்கவே செய்யும். தோல் நீக்கிய பின் கிவி பழத்தை எடுத்து அரைத்துக் கொள்ளவும். அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம். இதில் கொஞ்சமாக வாழைப்பழத்தை சேர்த்து மசித்துக் கொடுக்க குழந்தைக்கு நல்லது. மல்டி விட்டமின்கள் கிடைக்கும்.
கிர்ணி அல்லது முலாம் பழத்தை அறிந்து அதன் விதைகளை நீக்கி சதைப்பகுதியை கரண்டியால் மசித்துக் கொள்ளவும். பழமாக இருப்பின் அப்படியே நசுக்கினால் கூழாகிவிடும். மிதமாக அளவு பழுத்திருந்தால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளன.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?
பழுத்த சதைப் பகுதி, மிருதுவாக இருக்கின்ற பாகத்தை எடுத்து ஸ்பூனாலேயே நன்கு மசித்துக் கொள்ளவும். சருமம், முடி, கண்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.
பழுத்த பப்பாளியாக இருந்தால் முள் கரண்டியிலே நீங்கள் மசித்துக் கொள்ளலாம். செங்காயாக இருப்பின் தண்ணீரில் வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விட்டமின் சி மிக அதிகம். பார்வைத் திறன் அதிகரிக்கும். சருமம் பொலிவடையும்.
இப்படி ஒரு பழம் அல்லது ஒரு காய்கறியை வைத்து செய்யும் கூழ் வகைகள் (Single fruit and vegetable puree) குழந்தைகளுக்கு மிக சிறந்த முதல் உணவு வகைகளாக அமையும்.
இதையும் படிக்க: 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null