உடல் எடையை குறைக்க எத்தனையோ முயற்சிகள் செய்திருப்போம். ஈஸியான வழிகள் சில இருக்கின்றன. அதில் சிறந்தவை இந்த மிராக்கிள் ஃபேட் லாஸ் டிரிங்க்ஸ் (Quick Weight Loss Drinks)… புளி தெரிந்திருக்கும் கொடம்புளி தெரியுமா… இப்படியான சிறந்த ஆயுர்வேத, மருத்துவம் மிக்க பொருட்களை வைத்து 3 விதமான ஃபேட் லாஸ் டிரிங்க்ஸ் பற்றி இங்குப் பார்க்கலாம் வாங்க…
வெயிட் லாஸ் கொடம்புளி டிரிங்க் (Weight loss Kodampuli Drink)
தேவையானவை
செய்முறை
- கொடம்புளியை பயன்படுத்தும் முன் கழுவ வேண்டும்.
- இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட வேண்டும்.
- மறுநாள் காலை அதை எடுத்து மண் பானை அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.
- அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.
- மிதமான தீயிலே 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி ஜாரில் இவற்றை ஊற்றி வைக்கவும்.
எப்படி அருந்துவது?
- சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
- காலை உணவு சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பு இதைக் குடிக்கவும்.
- அதுபோல மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அரை மணி நேரத்துக்கு முன் இதை ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து விட வேண்டும்.
Image Source : Nisahomey
என்னென்ன விதிமுறைகள்?
- போதுமான அளவு தண்ணீரும் அருந்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
- 2-3 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும்.
- 2 மாதம் தொடர்ந்து இந்த கொடம்புளி டிரிங்கை செய்து குடிக்க வேண்டும்.
காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும்.
- பிரசவத்துக்கு பிறகு 8 மாதத்துக்கு பிறகு இதை நீங்கள் குடிக்க தொடங்கலாம்.
பலன்கள்
- கொழுப்பைக் கரைக்கும்.
- ஆயுர்வேத மருந்து இது.
- உடலில் கொழுப்பை தங்க வைக்காது.
- பசியை அதிகமாக்கும் பிரச்னையைக் குறைக்கும்.
- மகிழ்ச்சி தரும் ஹார்மோனை சமன்படுத்தும். இதனால் அதிகமாக சாப்பிடும் எண்ணம் வராது.
- உடலில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும்.
- செரிமானத்துக்கு சிறந்தது.
- உடலில் எந்த இடத்தில் கொழுப்பு இருந்தாலும் அதை அகற்றும். தொடை, இடுப்பு, பின் இடுப்பு, புஜம், வயிறு போன்ற அனைத்து இடங்களில் உள்ள கொழுப்பையும் கரைக்கும்.
- ரத்த அழுத்தத்தை சமன் செய்யும்.
- உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனை சமன் செய்யும்.
- கெட்ட கொழுப்பை விரட்ட வல்லது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உடல் சூட்டைக் குறைக்கும்.
இதையும் படிக்க: ஸ்ட்ரெச் மார்கை நீக்கும் 11 வீட்டு மருத்துவ வழிகள்
வெயிட் லாஸ் லெமன் டிரிங்க் (Fat Loss Lemon Drink)
தேவையானவை
- சீரகம் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை பழம் – ½
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கிளை
செய்முறை
- ஒரு பானில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.
- கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
- மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வைத்த பின் அடுப்பை அணைக்கவும்.
- பிறகு இந்த சீரக தண்ணீர் சூடு ஆறி இளஞ்சூடாக மாற வேண்டும்.
- ஒரு கண்ணாடி டம்ளரில், செய்து வைத்த இளஞ்சூடான சீரக தண்ணீரை ஊற்றவும். சீரகம் பாத்திரத்திலே இருக்கட்டும். அவற்றை சேர்க்க வேண்டாம்.
- கொட்டை எடுத்த அரை எலுமிச்சை பழத்தை சீரக தண்ணீரில் பிழிந்து விடவும்.
- இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஊற்றவும்.
- ஸ்பூனால் இந்த லெமன் வெயிட் லாஸ் டிரிங்கை நன்கு கலக்கவும்.
- 7 கறிவேப்பிலை இலைகளை கைகளால் கிழித்து, இந்த லெமன் டிரிங்கில் சேர்க்க வேண்டும்.
Image Source : Style Craze
என்னென்ன விதிமுறைகள்?
- இந்த டிரிங்க் குடிப்பதால் காபி, டீ எதுவும் குடிக்க கூடாது.
- குளிர் பானங்கள் அருந்தவே கூடாது.
- பிரசவத்துக்கு பிறகான 6 மாதத்திலிருந்தே குடிக்கத் தொடங்குங்கள்.
- 2 மாதத்துக்கு நாள்தோறும் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க வேண்டும்.
- காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- 20-30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யுங்கள்.
பலன்கள்
- வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, வயிறு வலி ஆகியவற்றை சீரக தண்ணீர் நீக்கும்.
- லெமன் சேர்ப்பதால் கல்லீரலுக்கு நல்லது.
- பித்தப்பை நன்கு செயல்படும்.
- கொழுப்பை விரைவில் வெளியேற்ற உதவும்.
- கிரேவிங் உணர்வைத் தடுக்கும்.
- தேன் சேர்ப்பதால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.
- ஆயுர்வேதத்தில் தேன் சேர்க்கும் அனைத்து மருந்துகளும் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும்.
- விட்டமின், தாதுக்கள் நிரம்பிய பானம் இது.
- இதயம் சிறப்பாக செயல்படும்.
- ரத்த அழுத்தத்தை சமன் செய்யும்.
- உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
- அனிமியாவை விரட்டும்.
- கெட்ட நச்சுக்களை நீக்கும்.
- மெட்டபாலிசம் சீராகும்.
- சீரான சருமமும் இயற்கையான சரும பொலிவையும் தரும்.
இதையும் படிக்க: கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?
மிராக்கல் ஈஸி ஹோம்மேட் நோ ஃபேட் டிரிங்க் (No Fat Health Drink)
தேவையானவை
- புதினா – 8 இலைகள்
- எலுமிச்சை பழம் – 3
- துருவிய இஞ்சி – 2 இன்ச்
Image Source : The Little Monster Blog
இதையும் படிக்க: நகங்கள் காட்டும் நோய் அறிகுறி… நகங்களைப் பராமரிப்பது எப்படி?
செய்முறை
- பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் நிறுத்தி விடவும்.
- 5 நிமிடங்கள் ஆறவிடவும்.
- பாத்திரத்தில் துருவிய இஞ்சியைப் போட்டு அதில் சுடுநீரை ஊற்றவும்.
- 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்
- எலுமிச்சையை கழுவி மெலிதாக, ரவுண்ட் ரவுண்டாக அறிந்து கொள்ளவும்.
- ஒரு பெரிய கண்ணாடி ஜாரில் ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை போடவும்.
- மேலும் அதில் அறிந்த எலுமிச்சைகளை சேர்க்கவும்.
- இதே ஜாரில் இஞ்சி தண்ணீர், துருவிய இஞ்சியையும் சேர்த்து ஊற்றவும்.
- அந்த ஜார் முழுவதும் தண்ணீர் ஊற்றி, ஸ்பூனால் கலக்கவும்.
- இதை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் குடித்து வரலாம்.
- அல்லது ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்து 2 மணி நேரம் கழித்து குடிக்கலாம்.
என்னென்ன விதிமுறைகள்?
- வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடிக்கவும்.
- இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.
- மாலை நேர டிரிங்காக குடிக்கலாம்.
- காலை 11.30 மணிக்கு குடிக்கலாம்.
- மாலை 3 அல்லது 4 மணிக்கும் குடிக்கலாம்.
- இரவில் செய்து அடுத்த நாள் குடிக்கலாம்.
- பிரசவத்துக்கு பிறகான 6 மாதத்திலிருந்தே குடிக்கத் தொடங்குங்கள்.
பலன்கள்
-
- வெயிட் லாஸ் கை கூடும். விரைவில் குறைக்க உதவும். தினமும் குடிக்கலாம்.
- அதிக பசியை விரட்டும்.
- செரிமானத்துக்கு உதவும்.
- ஜிஞ்சரால் இருப்பதால், கொழுப்பை கரைக்கும்.
- கழிவுகளை வெளியேற்றும்.
- இயற்கையாகவே பசியை அடக்கும்.
- உடலைக் குளிர்ச்சியாக்கும்.
இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null