குழந்தைகளின் எடை அதிகரிப்பதில்லையே எனப் பெற்றோருக்கு கவலை. உணவின் மூலமாக உங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் இந்த கேரளத்து பாரம்பர்ய உணவான நேந்திரம் பொடி (Raw Kerala Banana Powder) கூழ், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த நேந்திரம் பொடியின் செய்முறை மற்றும் நேந்திரம் கூழ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
நேந்திரம் பழப் பொடி செய்ய (Homemade Kerala Raw banana powder)
தேவையானவை
- நேந்திரங்காய் – 5
- நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
- இரண்டு கைகளிலும் நல்லெண்ணெயைத் தடவி கொள்ளுங்கள். விரல்கள் இடுக்கிலும் உள்ளங்கை மற்றும் பின்புறத்திலும் தடவ வேண்டும்.
- நல்லெண்ணெய் தடவாவிட்டால் கைகளில் கருப்பாக கறையாகிவிடும்.
- இப்போது நேந்திரங்காயின் தோலைக் கத்தியால் அறிந்து நீக்கி விடவேண்டும்.
- வெறும் உள்ளிருக்கும் சதையை, சீவலில் வைத்து சிப்ஸ் போல மெல்லிசாக சீவி கொள்ளுங்கள்.
- சீவிய நேந்திரங்காயை வெள்ளைத் துணியில் பரப்பி 2-3 நாட்களுக்கு வெயிலில் வைத்து நன்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.
- காய்ந்தவற்றை எடுத்து உலர்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- அவ்வளவுதான்… நேந்திரப் பழப்பொடி தயார்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?
நேந்திர பழக்கூழ் ரெசிபி
தேவையானவை
- நேந்திரம் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- பனை வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்
- நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு பவுலில் நேந்திரம் பொடியை போட்டு அதில் சாதாரண தண்ணீர் சிறிதளவு ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் பனை வெல்லம் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைக் கரைக்கவும்.
- அதேசமயம் இன்னொரு பாத்திரத்தில் கரைத்து வைத்த நேந்திரம் பொடி கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்துக் கிண்டவும்.
- கலவையை கிண்டிக்கொண்டு இருக்கும்போதே நெய் ஊற்றி, மேலும் நன்கு கிளறவும்.
- பின்னர் கரைத்து வைத்த வெல்லத்தைக் கொட்டி கலக்கவும்.
- 2-3 நிமிடங்களில் நேந்திரம் கூழ் வெந்துவிடும்.
- இந்த கூழ் இளஞ்சூடாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
எந்த மாதத்திலிருந்து குழந்தைக்கு கொடுக்கலாம்?
- 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறிது தேங்காய்ப் பால் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
- வெல்லத்துக்குப் பதிலாக டேட்ஸ் சிரப் ஊற்றிக் கொடுக்கலாம்.
- இன்னும் சத்தை அதிகரிக்க இதில் நட்ஸ் பவுடரை சேர்த்துக் கொடுக்கலாம்.
- எதாவது ஒரு பழத்தின் கூழை கூட சேர்க்கலாம்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?
பலன்கள்
- குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உடல் எடையை அதிகரிக்க உதவுவதில் சிறந்தது.
- கார்போஹைட்ரேட், விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
- கரோடினாய்டு சத்து இருப்பதால் பனி மற்றும் மழை காலங்களில் கூட குழந்தைக்கு நேந்திரம் கூழைக் கொடுக்கலாம். சளி பிடிக்காது.
- ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கலந்து நேந்திரம் கூழை செய்து கொடுக்கலாம்.
- ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த கூழைக் கொடுக்கலாம். காலை உணவாகக் கொடுப்பது சிறப்பு.
- இருமல், சளி போன்ற எதுவும் பிடிக்காது என்பதால் தாராளமாக இதை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
- செரிமான கோளாறுகளை நீக்கும்.
- நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் இருக்காது.
இதையும் படிக்க : திட உணவு தொடர்பான 9 கேள்விகளும் பதில்களும்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null