குழந்தையை இந்த இடங்களில் அடிக்கவே கூடாது… ஏன்?

குழந்தையை இந்த இடங்களில் அடிக்கவே கூடாது… ஏன்?

“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க...” என்று பேச்சு வழக்கில் சொல்வது உண்டு. உண்மையில் அடி உதவுமா? குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம். மனிதராக பிறந்த நமக்கு உடல் ரீதியாக துன்பம் ஏற்பட்டால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் உள்ளதோ அதுபோல குழந்தைகளுக்கும் இருக்கிறது. குழந்தைகளது உடல் குழந்தைகளின் உரிமை. நம் உடல் நமக்கு எப்படி உரிமையோ அதுபோல அவர்களுக்கும் அதே உணர்வு உண்டு. குழந்தைகளுக்கு பிடிக்காத முறையில் அவர்களது உடலை மனதைக் காயப்படுத்துவது குற்றம். மனித உரிமைப்படி உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் சட்டத்தின் பாதுகாப்பை அணுக முடியும். வழக்கு கோர முடியும். முன்பெல்லாம் எங்கள் அப்பா, அம்மா அடித்து வளர்த்த பிறகு தான் நான் எல்லாம் முன்னேறினேன் எனச் சொல்லும் பலருக்கு சொல்ல வேண்டிய ஒரே பதில். முன்பிருந்த அதே மனநிலை, உடல்நிலை, வளர்ச்சி, பக்குவம், சூழல் இன்று இல்லை. இதை அவசியம் பெரியவர்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். இன்றைய குழந்தைகள் ரொம்பவே சென்ஸிடிவ். உடன் படிக்கும் தோழி பேசவில்லை என சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். அம்மா எப்போதும் அடிக்கிறாங்கன்னு, மகன் தற்கொலை செய்து கொண்டான். வகுப்பில் எல்லோர் முன்னரும் ஆசிரியர் அடித்தார் என மாணவன் தற்கொலை செய்து கொண்டான். நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.

பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டியவை

முதலாக, இது அவசர உலகம். காலம் மாறிவிட்டது. குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகம். slapping a kid Image Source : Yummy Mummy Club இதையும் படிக்க: நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பொதுவாக உயிரினங்கள் தன்னை விட பலசாலியான ஓர் உயிரினத்தால் ஆபத்து வர நேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னைத் தற்காத்து கொள்ள எதிர்க்கும். அதுபோல, குழந்தைகளும் இயற்கையாகவே 4-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்வார்கள். அடி உதவும் என சொல்லி வந்தது. தவறான கண்ணோட்டம். அடி என்றைக்குமே என்றுமே உதவாது. இது அனைவருக்கும் பொருந்தவும் பொருந்தாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. அடிக்க, அடிக்க குழந்தைகள் சண்டியாக மாறுவார்கள். சண்டித்தனம் அதிக மூர்க்கத்தனமாக மாறும். அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் கொண்டு செல்லும் ஆபத்தை ஏற்படுத்தும்.

அடித்தபின் பெற்றோரின் மனநிலை என்ன?

குழந்தையை அடித்த பிறகு எந்த பெற்றோராவது ஆனந்தமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தை தெரியாமல் தன்னைத் திருப்பி அடித்து விட்டால் நிம்மதியாக இருக்க முடியுமா… அது மிக கொடுமை. அடிப்பது என்பது குற்றம். வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. நல்வழிப்படுத்த அன்பும் அக்கறையும் அரவணைப்பும் புரிதலுமே மிகவும் முக்கியம். எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்காது. இதையும் படிக்க: பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா? ஒரு குழந்தை ஒரு தவறை செய்தால், அந்த குழந்தையிடம் பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என என்ன குழந்தையின் பலவீனமோ அதை நோக்கி நீங்கள் சிறிய தண்டனை வழங்கி குழந்தையை திருத்தவேண்டும். இப்படி செய்வியா என நன்றாக அடி அடித்துவிட்டு, ஒரு மணி நேரமோ அடுத்த நாளோ குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் ஒரு பயனும் இல்லை. இந்த நிலை குழந்தையின் நடவடிக்கையை இன்னும் மோசமாக்கும். hitting a kids Image Source : taufiqurokhman இதையும் படிக்க:  சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

ஏன் குழந்தைகளை அடிக்க கூடாது? முக்கியமான காரணங்கள்...

அடிவாங்கும் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் அடியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும். பல குழந்தைகள் கற்பனை செய்யும். மன ரீதியாக பாதிக்கும். வெறுப்பை வளர்க்கும். என்னென்னமோ எண்ணங்கள் குழந்தையின் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். குழப்பத்தில் மூழ்கி போவார்கள். சந்தர்ப்பம் சரியாக இல்லாமல் இருந்தால் இது குற்றத்துக்கான தொடக்கமாக மாறிபோகலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
தூக்கமின்மை, கவனக்குறைவு, எந்த செயலில் ஈடுபட மனம் இல்லாமல் போவது, உள் காயங்கள், தன்னைவிட மற்றவை முக்கியம் தாங்களே நினைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு வரும். பெற்றோருக்கும் குழந்தைக்குமான நெருக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் அதிகரிக்கும். டிவி, மொபைல், லாப் டாப் போன்றவற்றில் அதிகம் ஈடுபடும் பிள்ளைகளை அடித்துத் திருத்த முயற்சி செய்தால்… ஒன்றுமே நடக்காது... வேஸ்ட். முதலில் இதையெல்லாம் குழந்தை முன் நீங்கள் செய்துவிட்டீர்கள்… பின், குழந்தையை அடிப்பது நியாயம் ஆகாது. சில ஆய்வுகள் இப்படி சொல்கின்றன. உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் குற்றவாளிகளாகவும் வன்முறை குணம் நிறைந்தவர்களாகவும் மாறுகின்றனர். இதையும் படிக்க:  அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி? குழந்தையின் மனதில் அமைதி, அன்பு, பயம் நீங்கி வன்முறை செய்து சாதித்துவிடலாம் எனத் தோன்றும் நினைப்புக்கும் முதல் காரணம் பெற்றோர்களே. அடி வாங்கும் குழந்தைகள், பழி வாங்கும் குணத்தை பெறுவார்கள். வஞ்சத்தால் கோட்டை கட்டுவார்கள். இயல்பற்ற பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். அடி வாங்கும் குழந்தைகள் தனக்கு நெருக்கமானவர்கள் மீது கோபம், வன்முறை, வஞ்சம் ஆகியவற்றை செலுத்துவார்கள். அடி வாங்கும் குழந்தைகள், தாங்கள் பெற்றோர் ஆனதும் தவறான குழந்தை வளர்ப்பு முறையில் ஈடுபடுவார்கள். வன்முறை அவர்களின் வாழ்வியலோடு கலந்துவிடலாம். தன் பலத்தை காட்ட முடியாமல் அடிவாங்கும் பிள்ளைகள் அந்த கோபத்தை எரிச்சலை தன்னைவிட பலம் உள்ளவர்களிடம் செலுத்தும் தூண்டுதலுக்கு ஆளாவார்கள். இது தொடக்கத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் பிற்காலத்தில் ஆபத்தாகும். குழந்தைகள் மென்மையான உடல் கொண்டவர்கள். முழுமையான வளர்ச்சியை எட்டி இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் அடிக்கும்போது தவறுதலாக எலும்பு முறிவு, கை, கால், காது, கண் பாதிப்பு, அழுது அழுது சளி, மூச்சுத்திணறல், வலிப்பு போன்றவை வரலாம். hitting a child Image Source : Verywell Family உட்கார உதவும் உடல் பாகத்தை ‘பட்டக்ஸ்’ என்று சொல்கிறோம். இது பாலியல் பாகமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் குழந்தைகளை அடித்தால், பிற்காலத்தில் எதிர்மாறான பாலியல் உறவுக்கு குழந்தைகள் தூண்டப்படுவார்கள் எனச் சில அறிக்கைகள் சொல்கின்றன. பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளையும் பட்டக்ஸில் அடிப்பதால், அவர்கள் எதையோ கற்பனை செய்து கொள்வார்கள். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால், இது பாலியல் சீண்டலாக மாறும் வாய்ப்பாகும். இதையும் படிக்க:  குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றலாமா?

அடிக்காமல் குழந்தையை திருத்த முடியுமா?

அன்பு ஒன்றே மிகப் பெரிய ஆயுதம். அதை தீட்டிக் கொள்ளுங்கள் போதும். அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் உண்டு. அன்பு, குழந்தைகளைப் பண்பானவர்களாக மாற்றும். செல்லம் கொடுப்பது, குழந்தைகளைக் கெடுக்கும். இந்த வித்தியாசம் புரியட்டும். ‘எங்கம்மாவ கேட்காம நான் இதை செய்ய மாட்டேன்’. அன்பால் வளர்க்கும் பிள்ளை சொல்வது. ‘இதை எனக்கு கொடுத்து விடு, இது எனக்கே சொந்தம்’… செல்லத்தால் வளரும் பிள்ளை சொல்வது. இரண்டும் இருவேறு குணங்களைத் தரும். அம்மாவோ அப்பாவோ தன் கண் அசைவால் கோபத்தை தெரிவித்துகூட குழந்தையை திருத்தி விட முடியும். இந்த வளர்ப்பு முறையை மிக சிறந்த முறை. இதற்கு புரிதலும் பெருந்தன்மையும் பெற்றோருக்கு வேண்டும். செம அடியை அடிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கண் அசைவும் புரியாது நீங்கள் வாய் வலிக்க கத்தினாலும் கேட்காது. சென்சிடீவ்வான குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், முடியாத காரியம் அல்ல. முயன்றால் அன்பால் அரவணைப்பால் பெற்றோரின் பண்பால் நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதற்கு முதலாக நீங்கள் பண்பானவர்களாக மாறிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக மாறிவிடுங்கள். பின் எல்லாம் சுபமே. இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null