பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல  கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது. கொழுப்பைக் குறைப்பது எப்படி? அவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்கும் முறைகள் 

#1. கொள்ளு

கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம்.

மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.

#2. வெந்தயம்

தினம் 2 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள். காலை ஒரு ஸ்பூன், மாலை ஒரு ஸ்பூன்…. ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. காலையில் சாப்பிட வேண்டிய வெந்தயத்தை முன்னாள் இரவே ஊற வைத்து விடுங்கள். மாலையில் சாப்பிட வேண்டியதைக் காலையில் ஊற வைத்து விடுங்கள்.

#3. அன்னாசி

அன்னாசியை அறிந்து கொள்ளுங்கள். தினமும் 2 ஸ்லைஸ் என வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். 48 நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஒரு சிட்டிகை ஓமம், 2 ஸ்லைஸ் அன்னாசி துண்டுகள் இந்த இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டு வந்தால் பலன் தெரியும். இந்த சுவை பிடிக்காதவர் வெறுமனே அன்னாசி பழத்தை சாப்பிட்டு வரலாம்.

#4. குடம் புளி kodampuli for reducing belly fat

Image Source : Credit kalavara.com

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…

தற்போது பயன்படுத்தும் புளியை எறிந்து விட்டு, குடம் புளியை சமையலுக்கு பயன்படுத்துங்கள். குடம் புளி உடல் எடையைக் குறைப்பதோடு உடலுக்கும் நல்லது.

#5. புளிச்ச கீரை

கோங்கூரா எனச் சொல்லக்கூடும் புளிச்ச கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடுங்கள். புளிச்ச கீரை சருமத்துக்கும் நல்லது. சரும தொல்லைகள் எதுவும் வராது.

#6. காலை உணவு எப்படி இருக்க வேண்டும்?

இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். வெறும் வயிற்றில் பழமா…. ஆம்… காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும்.

எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

#7. எலுமிச்சை – இஞ்சி மேஜிக் foods for loose fat

Image Source : Credit fitlife.tv

இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…

எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும்.

கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.

#8. உண்ணும் தட்டு எப்படி இருக்க வேண்டும்?

தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். புரிகிறதா? காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும்.

#9. பால் தவிர்க்கவும்…

பாலைத் தவிர்க்கணுமா… அப்போ கால்சியம். பாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி, வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல… பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக் குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.

#10. நார்ச்சத்துள்ள உணவுகள்

fibre foods for fat loss

Image Source : Credit healthyforgood.heart.org

இதையும் படிக்க: நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்…

காய்கறி, கீரைகள், பழங்களிலிருந்து உங்களுக்கு நார்ச்சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்குத் தேவையான 25 கிராம் நார்ச்சத்து கிடைக்காததால் கொழுப்பு சேர்கிறது. எனவே காய்கறிகளும் பழங்களும் பிரதான உணவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி கீரை அல்லது வாரம் 5 முறை கீரை சாப்பிடுங்கள்.

#11. ஆவாரைப்பூ

ஆவாரைப்பூவை எடுத்து சுத்தப்படுத்தி உலர்த்தி, நன்கு காய வைத்து பொடித்துக் கொள்ளுங்கள். ஆவாரை பூவில் டி, காபி செய்து சாப்பிடலாம். கவனம், பால் சேர்க்காமல் காபி, டீயை பருக வேண்டும். அதுதான் நல்லது.

#12. தொப்பையைக் குறைக்கும் எளியப் பயிற்சி (Exercise for Belly Fat)

simple exercise to reduce belly fat

Image Source : Credit greatist.com

இதையும் படிக்க: தாய்மார்களுக்கான 5 வெயிட் லாஸ் ஈஸி ரெசிபி

  • பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை.
  • வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும்.
  • வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.

#13. மூச்சு பயிற்சிகள்

அருகில் உள்ள யோகா மையத்துக்கு செல்லுங்கள். கார்ப்பரேட் வாசிகளிடம் சிக்க வேண்டாம். மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சு பயிற்சி செய்யுங்கள். தொப்பை இருக்கவே இருக்காது. மீண்டும் கொழுப்பு உடலிலும் சேராது.

#14. தொப்பையைக் (Belly Fat) குறைக்கும் சிம்பிள் டெக்னிக் jeera water for weight loss

Image Source : Credit thehealthsie.com

  • வாரம் இருமுறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு, அதை குடிநீராக குடிக்கலாம்.
  • பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லையென்றால் பசிக்கும் வரை காத்திருங்கள்.
  • பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, ஐயோடின் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • இனிப்புகள், ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர், பாக்கெட் உணவுகள், செயற்கை பழச்சாறுகள், ரெடிமேட் உணவுகள் ஆகியவற்றை அவசியம் தவிர்க்கவும்.
  • எந்த உணவைச் சாப்பிட்டாலும் உதடுகள் மூடி இருக்க வேண்டும். பற்கள் மட்டும் உணவை மெல்ல வேண்டும். மிக்ஸியில் ஜாரை மூடிதானே அரைப்போம். அதேதான்… உதடுகளை மூடி நன்கு மென்று சாப்பிடுங்கள். தொப்பை வரவே வராது.
  • நன்கு மென்று கூழாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளவருக்கு, கொழுப்பும் சேராது. தொப்பையும் இருக்காது.

இதையும் படிக்க: உடல் எடையை விரைவாக குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null