குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்... மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்... மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

கடந்த பதிவில் கருவுற்றதலிருந்து 2 வயது வரை இருக்கும் காலக்கட்டம் எவ்வளவு முக்கியம் எனப் பார்த்தோம். முதல் 1000 நாட்களில் (Babies first 1000 Days) கவனிக்க வேண்டிய 21 விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம். இந்த 21 விஷயங்களும் குழந்தையின் ஆரோக்கியத்துகான ஆரோக்கிய மந்திரங்கள் (21 Rules to follow in first 1000 days of Babies Life) என்பதை மறக்காதீர்கள்.

முதல் 1000 நாட்களில் பின்பற்ற வேண்டியவை (21 Rules to follow in first 1000 days)

  1. இரும்பு சத்துள்ள உணவுகள் (Iron rich foods) / இரும்பு சத்து மாத்திரையை (Iron Tablets) சாப்பிட வேண்டும். இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தசோகை நோய் வருவது தடுக்கப்படும்.
  2. கர்ப்பக் காலத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது. சத்தான உணவைத் (Nutritional foods) தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவது. நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த உணவுகளை உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
  3. கர்ப்பிணிகளுக்கான ஓய்வு, நலம் மற்றும் சுகாதார பரிசோதனைகளை உறுதிப்படுத்த வேண்டும்.          இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்
                         babies-first-1000-days                                       இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்… இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க…
  4. சரியான ஊட்டச்சத்து அளவைப் பின்பற்றினால் உரிய காலத்துக்கு முன்பே குழந்தை பிறப்பதைத் தடுக்க முடியும். மேலும், எடை குறைவாகப் பிறப்பதும் தடுக்கப்படும்.
  5. பிறந்த குழந்தைக்கு சரியானப் பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
  6. பிறக்கும்போதே வரும் குறைபாடுகள், பிறவி இதய நோய்களைத் (Heart Diseases) தடுப்பது போன்ற சிகிச்சைகளை இந்த முதல் 1000 நாட்களிலே எடுக்க வேண்டும்.
  7. குழந்தைகளுக்கு நிமோனியா (pneumonia) , சீதபேதி, பூச்சித் தொற்று போன்ற நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இவை வராமல் தடுப்பதும் நல்லது.
  8. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் (Breastmilk) கொடுக்க வேண்டியது கட்டாயம். சுகபிரசவம், சிசேரியனாக இருந்தாலும் சரி.
  9. குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே (Exclusive mothers milk) கொடுக்க வேண்டும்.
  10. 7-வது மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் தரமான, ஆரோக்கியமான கூடுதல் உணவைக் (Solid Foods) கொடுக்க வேண்டும்.
  11. நல்ல ஊட்டச்சத்து உணவைக் கொடுத்தால் குழந்தைகளிடம் உடல் வளர்ச்சி (குள்ளமாதல்) பிரச்னை வராமல் தடுக்கப்படும்.
  12. குழந்தைகளின் முதல் பிறந்த நாளுக்குள் தேவையான நோய்த் தடுப்பு சிகிச்சைகளை (proper treatments) முறையே அளித்திருக்க வேண்டும்.
  13. குழந்தையின் 5 வயதுக்குள் ஆண்டுக்கு இருமுறை என 9 முறை வைட்டமின் ஏ (Vitamin A) உள்ள பொருட்களைக் கூடுதலாக அளிக்க வேண்டும்.babies-first-1000-days  இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?
  14. சமச்சீரான சத்துகள் (Balanced food) நிறைந்த உணவைக் கொடுக்க வேண்டும்.
  15. தாயும் சேயும் நல்ல மனநிலையில் இருக்கும் சூழலை உருவாக்கி கொள்ளுதல் அவசியம்.
  16. அனைவரும் கழிப்பறைப் பயன்படுத்த வேண்டும்.
  17. உணவு உண்பதற்கு முன்பும் கழிப்பறை பயன்படுத்திய பின்னரும் நன்றாக சோப்/ஹாண்ட் வாஷ்ஷால் கை கழுவ வேண்டும்.
  18. அனைவருக்கும் குடிப்பதற்கான குடிநீர் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.
  19. பெண்கள் வளர் இளம் பருவத்திலே சத்தான உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது நல்லது. இதனால் ரத்தசோகை வராது.
  20. 18 வயதுக்கு முன் யாரும் திருமணம் செய்துகொள்ள கூடாது.
  21. 18 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டியது அவசியம்.

மேற்சொன்ன விஷயங்களை கவனமாக மேற்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அதனோடு பெண்கள் ஆரோக்கியம் பெறுவதோடு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கையைக் குழந்தைகளால் வாழ முடியும்.

Source : UNICEF

இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null