குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? எப்போது மொட்டை அடிக்கலாம்?

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? எப்போது மொட்டை அடிக்கலாம்?

இளம் தம்பதியர்கள் சிலர் தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிப்பது குற்றம், தவறு, ஏதோ மனநல பிரச்னை இருக்கிறது போல தோன்றலாம் என நினைத்துக்கொண்டு இன்று வரை மொட்டை அடிக்காமலே இருக்கின்றனர். குழந்தைகளுக்கு மொட்டை அவசியமா? மொட்டை அடிக்க கூடாதா? மொட்டை அடிப்பது ஏன்? (Scientific reasons behind Tonsuring) இதைப் பற்றிப் பார்க்கலாம்.

பெரும்பாலான சமயங்களில் மொட்டை அடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம், இஸ்லாம் சமயம், ரோமன் கேத்தோலிக்ஸ் போன்ற சமயங்களை பின்பற்றுபவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

கடந்த பிறவியிலிருந்த தொடர்புகளைத் துண்டிப்பதற்காக மொட்டை போடுவதாக சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் இந்த பிறவியில் தன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக மொட்டை அடிக்கப்படுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.

மொட்டை அடித்தால் உடலில் என்ன நடக்கும்?

மரத்தில், செடியில் கிளையில் உள்ள இலைகளை கழித்துவிட்டால் மரமோ செடியோ அதன் சக்தியை இலைகள் இல்லாத இடத்துக்குத் திருப்பி இலைகள் மீண்டும் வளரும்படி தன் ஆற்றலை பாய்ச்சும்.

அதுபோல, மொட்டை அடித்தால், உடலும் அந்த இடத்தில் தன் ஆற்றலை பாய்ச்சி சற்று உறுதியான, ஆரோக்கியமான முடியை வளர வைக்கும். முன்பு இருந்தது போல இல்லாமல் முடி அடர்த்தியாகவே வளரும் என சில ஞானிகளால் சொல்லப்படுகிறது.

benefits of mundan

Image Source : About Mommying

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்

மொட்டை அடிப்பதால் நன்மையா?

  • நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை தூண்டப்பட மொட்டை அடிக்கும் பழக்கம் உதவுகிறது.
  • இதனால் மூளை வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், நிருபிக்கப்படவில்லை.
  • குழந்தைக்கு பல் வளரும்போது மொட்டை அடிக்கலாம் எனும் பழக்கம் தொடர்கிறது. பல் வளர்ச்சி இருக்கும்போது உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். இந்த தருணங்களில் மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.
  • ஸ்கால்ப் (மண்டைத் தோலில்) உள்ள தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை மொட்டை அடிப்பதால் நீங்குகின்றன.
  • இதனால் முடி வளர மிகவும் உதவுகிறது.
  • வெயில் காலங்களில் முடி எடுப்பதால், வியர்த்தலால் ஏற்படும் பிரச்னைகளும் தடுக்கப்படுகின்றன.
  • மொட்டை அடித்த பிறகான சில காலம் வரை தலையைப் பராமரிக்க எளிது. பேன், தொற்றுகள் ஆகியவை இருக்காது.

அறிவியல் நன்மைகளும் காரணங்களும்…

  • விட்டமின் டி சத்து எளிதில் கிடைக்க உதவுகிறது. இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும்.
  • மொட்டை அடிப்பது தவறு இல்லை. இதில் நன்மைகள் இருக்கின்றன.
  • குழந்தையின் முடி மிக மெலியதாக இருக்கும். மொட்டை அடித்த பின் திக்காக வளரும்.

benefits of head shaving

Image Source : Clear 365 Blogs

இதையும் படிக்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இதோ சில அறிகுறிகள்… 

நம்பிக்கைகள் என்னென்ன?

  • குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  • குழந்தை வயிற்றில் உள்ள போது, இருந்த அசுத்தம், மண்டைத்தோலில் இருக்கும். அவை நீங்கும்.
  • ரத்த ஓட்டம் மேம்படும். முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • உடலும் ஆன்மாவும் சுத்தப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
  • மொட்டை அடிப்பதால் தலைக்கணம் நீங்கி, கடவுளுக்கு அருகில் வருவோம் எனவும் சொல்லப்படுகிறது.

மொட்டை அடித்தால் முடி வளரும்… அறிவியல் ஒப்புக் கொள்கிறதா?

  • மொட்டை அடிப்பதால் நன்மைகள் இருக்கின்றன. முடி வளர்ச்சி அதிகமாவதில்லை.
  • இரண்டு விஞ்ஞானிகள், நடத்திய ஆராய்ச்சியில் முடி வளர்ச்சிக்கு உதவுவது இல்லை என்கின்றனர். ஆனால், மொட்டை அடித்த பிறகு திக்காக வளர்கிறது. ஆனால், முடி வளர்ச்சி அதிகமாவதில்லை. முடியின் வேர் பகுதியில் எந்த மாற்றமும் இல்லை என்கின்றனர்.
  • மேலும், முடி வளர்ச்சியை வேகப்படுத்துவது இல்லை என்கின்றனர்.
  • முடி வளர்ச்சி என்பது முடியின் ஃபாலிக்கல்ஸ் பொறுத்துதான். மரபு வழியாகவும் சத்தான உணவுகள் மூலமாகவும்தான் முடி வளரும். மொட்டை அடிப்பதால் அல்ல என்கின்றனர்.

எப்போது மொட்டை அடிக்கலாம்?

  • 9 மாதம், 11 மாதம், 1 வயது, 3 அல்லது 5 வயதில் மொட்டை அடிக்கலாம்.

முக்கிய டிப்ஸ்

benefits of tonsuring

Image Source : Yuppee Magazine

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி? 

  • நீங்கள் மொட்டை அடிப்பதாக இருந்தால் பிளேட், ரேசர் ஆகியவை ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • குழந்தையின் தலையில் எந்த காயமும் இல்லாதபடி, மிக சிறந்த, தேர்ந்த மொட்டை அடிக்கும் நபரிடம் உங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க சொல்லி அழைக்கலாம்.
  • வெப்ப காலங்கள், மிதமான வெப்ப காலங்களில் மொட்டை அடிக்கலாம்.
  • குழந்தைக்கு மொட்டை அடிக்கும் முன் உணவுக் கொடுங்கள். பசியோடு குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டாம். குழந்தைகள் பலர் அழுவதால் சிறிது பிரேக் விட்டு மொட்டை அடிக்கலாம்.
  • குழந்தைக்கு காற்று போகும்படியான சௌகரியமான உடைகளை அணிந்துவிடுங்கள்.

மொட்டை போட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

  • வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்கலாம்.
  • தலையை போட்டு தேய்க்காமல், மெதுவாக டவலால் ஒத்தி எடுங்கள்.
  • மொட்டை போட்டவுடன் தலையில் வெண்ணெய் அல்லது தயிர் பூசி, அதன் பிறகு சந்தனம் பூசலாம். எரிச்சலைக் குறைக்கும்.
  • சிறிது மஞ்சளும் சந்தனமும் சேர்த்துப் பூசலாம். மஞ்சள் கிருமி நாசினி, சந்தனமும் குளிர்ச்சியைத் தரும்.
  • மொட்டை அடித்து ஓரிரு வாரம் வரை ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.

மொட்டை அடித்த பிறகான பராமரிப்பு

1. உணவு

  • மொட்டை அடிக்கும் முன்பும் அடித்த பின்பும் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும்
  • பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள் கொடுக்கலாம்.
  • இரும்பு சத்து உணவுகள், விட்டமின் சி உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம்.
  • பூசணி கூழ், பரங்கிக்காய் கூழ், சக்கரைவள்ளிகிழங்கு கூழ், பப்பாளி, ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள் ஆகிய சிறந்தவை.
  • பிரவுன் அரிசி புட்டு, ராகி புட்டு கொடுக்கலாம்.

2. எண்ணெய்

  • தினமும் தலையில் எண்ணெய்த் தடவுங்கள்.
  • மண்டைத்தோலுக்கு எண்ணெய் அவசியம்.
  • சருமத்தை சரியான பதத்தில் வைத்திருக்கும்.
  • நரம்புகள் தூண்டப்படும்.
  • செதிலாக மாறுவது, அரிப்பு போன்றவை வராது.
  • ஆர்கானிக் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் தடவலாம்.

head bath for babies

Image Source : The champa Tree

3. தலையை அலசுதல்

  • மைல்டான ஷாம்பு பயன்படுத்தலாம்.
  • நிறைய முடி இருந்தால் இயற்கை கண்டிஷனர் பயன்படுத்தலாம். முடியில் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைகரு தடவிய பிறகு 10 நிமிடங்கள் கழித்து அலசி விடலாம்.

4. உலர்த்துதல்

  • முடியை போட்டு தேய்க்க கூடாது. டவலால் அழுத்தித் தேய்க்க கூடாது. ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும். இல்லையெனில் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கும்.
  • மிருதுவான சீப்பால் முடியை வார வேண்டும்.
  • அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி? 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null