2-வது மாத குழந்தையை எப்படி பாதுகாப்பது? தாய்க்கு வரும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி?

2-வது மாத குழந்தையை எப்படி பாதுகாப்பது? தாய்க்கு வரும் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி?

இரண்டாவது மாத குழந்தைகள் என்னென்ன செய்யும் அதன் வளர்ச்சி நிலைகள் எப்படி இருக்கும் என அறிந்து கொள்வோம். இரண்டாவது மாத குழந்தையை எப்படி கவனித்துக் கொள்வது? பராமரித்துப் பாதுகாப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

இரண்டாவது மாதத்தில் குழந்தையின் செயல்கள் என்னென்ன?

  • அருகிலுள்ள பொருட்களைப் பார்க்கும்.
  • வெளிச்சம் வரும் இடங்களை எல்லாம் திரும்பி பார்க்கும்.
  • கை, கால்களை நன்கு உதைக்கும்.
  • சத்தம் கேட்கும் இடங்களில் எல்லாம் பார்க்க ஆரம்பிக்கும்.
  • லேசாகத் தலையை உயர்த்த முயற்சிக்கும்.
  • கைகளாலும் கால்களாலும் நாம் கை வைக்கும் இடங்களில் தொட முயற்சிக்கும்.
  • 6-வது வாரத்தில் சிரிக்க தொடங்கும்.

எதையெல்லாம் உறுதி செய்ய வேண்டும்?

  • மாதத்துக்கு ஒரு முறை மட்டும் எடை பார்க்கலாம். அடிக்கடி பார்க்க கூடாது. இதனால் தேவையற்ற பயம், குழப்பம் வரலாம்.
  • அடிக்கடி பால் குடிக்கிறதா எனக் கவனியுங்கள்.
  • அதுபோல சிறுநீர், மலம் ஆகியவை அடிக்கடி கழிக்கிறதா என்றும் கவனியுங்கள்.
  • துணி அல்லது நாப்கினை நீங்கள் அடிக்கடி மாற்றுகிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • இதெல்லாம் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்ற அறிகுறிகள்.
இதையும் படிக்க: குழந்தைகளின் இறப்பைத் தடுக்க... தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் second month baby care

தடுப்பூசி காய்ச்சல்

இந்த மாதத்தில் 2-வது தடுப்பூசி போடுவதால் குழந்தைகள் ஒரு நாள் முழுக்க கூட அல்லது குறைவாகவோ காய்ச்சல் இருக்கலாம். இந்தக் காய்ச்சலின் போது தாய்ப்பால் கொடுப்பதே மிக சிறந்த மருந்து. கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தவிர்க்கவே கூடாது.

2-வது மாத இறுதியில்…

குழந்தை அதிகமாக அழ ஆரம்பிக்கும். 3 மணி நேரத்துக்கு ஒருமுறைகூட அழலாம். நீண்ட நேரம் குழந்தை அழுதால் வயிற்று வலி, காது வலி குழந்தைக்கு உள்ளதா எனக் கவனியுங்கள். வாயு அதிகமாக உள்ள உணவுகளைத் தாயானவள் தவிர்க்கலாம். இதனால் கூட குழந்தைக்கு வயிறு வலி வரலாம். சரியான முறையில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கிறீர்களா எனக் கவனியுங்கள். இதனால்கூட வயிற்று தசை பிடிப்பு ஏற்படலாம். நீண்ட நேரம் இடைவேளி விட்டு தாய்ப்பால் கொடுக்கலாம். குறுகிய இடைவேளியில் தாய்ப்பால் தந்தால் குழந்தை தூங்கிவிடும். பல தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பு போதாமல் புட்டி பாலுக்கு மாறுகின்றனர். இது முடிந்தவரை தவிர்க்கலாம். தாய்ப்பால் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பது நல்லது. மெல்லிய சூரிய வெளிச்சம், சுத்தமான காற்றில் குழந்தையை சிறிது நேரம் வைக்கலாம். காலை மற்றும் மாலை இளவெயில் குழந்தைக்கு நல்லது. குழந்தையை வெளியில் அடிக்கடி எடுத்து செல்ல கூடாது. இதனால் பகலில் தூங்கி இரவில் தூங்காமல் கண் விழிக்கும். தூங்கும் பழக்கமும் மாறலாம் என்பதால் கவனம் அவசியம். தாய் தன் விரல்களால் லேசாக குழந்தையின் கை, கால்களுக்கு மசாஜ் தரலாம். இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான 'மார்க்' தன் குழந்தைக்கு 'குவான்டம் ஃபிஸிக்ஸ்' வாசித்து காட்டுகிறார் ... ஏன்? 2nd month baby care tips
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

தாய்மார்கள் அவசியம் கவனிக்க வேண்டியவை...

பெரும்பாலான தம்பதியர் குழந்தை பெற்ற இரண்டாம் மாத இறுதியில் அல்லது மூன்றாம் மாதத்தில் இருந்து தாம்பத்யம் வைத்துக் கொள்கின்றனர். இதனால் மீண்டும் கர்ப்பமாக ஆகின்றனர். இதனை தவிர்க்க பாதுகாப்பான தாம்பத்யம் மேற்கொள்வது நல்லது. அடுத்த குழந்தைக்கு 3-5 ஆண்டுகள் இடைவேளி இருப்பது நல்லது. ஆரோக்கியமானதும்கூட. பாதுகாப்பானது என்றும் சொல்லலாம். உடனே அடுத்த கர்ப்பம் என்றால் தாயின் உடல்நலம் சேயின் உடல்நலமும் பாதிக்கலாம்.

இரண்டாவது மாத இறுதியில் தாய்க்கு வரும் உடல்நல கோளாறுகள்…

  • சோர்வாகக் காணப்படுதல்.
  • பலவீனமாக இருத்தல்.
  • தூக்கமின்மையால் தவித்தல்.
  • தூங்க நேரம் போதாமை.
  • மனம் தொடர்பான பிரச்னைகள்… மனச்சோர்வு, மன உளைச்சல் வரலாம்.
  • கசப்புத்தன்மை தெரியலாம்
  • குழந்தையின் மேல் லேசான ஈர்ப்பின்மை அல்லது கோபம் வரலாம்.
  • தாம்பத்ய வாழ்க்கை தடைப்படுதலால் வரக்கூடிய எரிச்சல்.
  • உறவுகள் விலகி இருப்பதுபோல எண்ணங்கள் எழுவது, அதுபோல எண்ணி மனஉளைச்சல் அடைவது.
  • குழந்தையின் உடல்நலம் பற்றிய குழப்பங்கள்.
  • பார்க்க வரும் அனைவரும் சொல்லும் கருத்துகளால் குழம்புதல்.
  • அதிக பயம், குழந்தை, வாழ்க்கையைப் பற்றிய பயம் இருக்கும்.
  • குழந்தையை கவனிக்கவில்லையோ எனக் குற்ற உணர்வு, உறுத்தல் உணர்வு.
இதெல்லாம் பெரும்பாலும் அனைத்துத் தாய்மார்களுக்கு வரும். தியானம் செய்வது, நன்கு தூங்குவது, சத்தான உணவை சாப்பிடுவது, உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவையால் இந்த பிரச்னைகளை வெல்ல முடியும். பயப்பட ஒன்றும் இல்லை. இதையும் படிக்க: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் ... மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..! ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null