உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிகுறிகள் என்னென்ன?

உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதை எப்படி தெரிந்து கொள்வது (Signs of Healthy Babies)… இதோ அதற்கான அடையாளங்கள்.

பிறந்த குழந்தை முதல் 2 வயது வரை…

ஆரோக்கிய அறிகுறிகள் என்னென்ன?

 • குழந்தை பிறந்தவுடன் தோல், இளஞ்சிவப்பாக இருக்கும்.
 • ஒரு நிமிடத்துக்கு 100 முறை இதயம் துடிக்கும்.
 • இருமல், தும்மல், கால்களை எத்துதல் போன்ற அடையாளங்கள் காணப்படும்.
 • சுவாசம் சீராக இருக்கும்.

இதெல்லாம் பிறந்த குழந்தைக்கான ஆரோக்கிய அடையாளங்கள்.

பாதிப்பு இருந்தால்…

 • குழந்தை நீல நிறத்தில் இருக்கும்.
 • சுவாசம் அதிகரித்தோ குறைந்தோ காணலாம்.

குழந்தை பிறந்து சில நாட்கள் வரை…

 • அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தல்.
 • தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமான அறிகுறி.
 • சத்தம் கேட்டால் திரும்புதல். செவிதிறன் சீராக வேலை செய்கிறது. மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது.
 • அம்மாவின் குரல், இசை, மணிகளின் ஒலி, தெரிந்தவர் குரல் கேட்டால் குழந்தை அமைதியானால் மன வளர்ச்சி சீராக இருக்கிறது.
 • பால் குடித்தல், தூங்குதல், மீண்டும் பசிக்காக அழுதல் போன்றவை நல்ல அறிகுறிகள்.
  குழந்தை நம்மை உற்று பார்ப்பது, இதனால் பார்வைத்திறனும் நன்றாக இருக்கிறது என அறியலாம்.
 • குழந்தை வளர வளர, குழந்தையின் அழுகையும் தூக்கமும் படிப்படியாக குறையும்.
 • குழந்தை ஏதோ ஒரு சிந்தனையில் அமைதியாக பார்த்தபடி இருப்பதும் ஆரோக்கியத்துக்கான அறிகுறியே. மூளை வளர்ச்சியை உறுதி செய்கிறது.

healthy babies tamil

Image Source: Real Simple

இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

அறிவாற்றல் வளர்ச்சியை எப்படி கண்டுபிடிப்பது?

 • பளிச் நிறங்களை உற்றுப் பார்த்தல்.
 • வடிவங்களை, பொம்மைகளை உற்றுப்பார்த்தல்.
 • திரைசீலை அசைவதைப் பார்ப்பது.
 • மின்விசிறியைப் பார்ப்பது.
 • இதெல்லாம் குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை உறுதி செய்யும்.

3 மாத குழந்தைகள்…

 • வெளிச்சம் உள்ள இடங்கள், பிரகாசமான நிறங்களைப் பார்ப்பது.
 • இரு கண்களையும் ஒரு திசையில் திருப்புவது.
 • இரண்டு கைகளையும் ஒன்று சேர்ப்பது. கை கோர்ப்பது.
 • பிடித்த பொருட்களை கைகளால் பிடிப்பது.
 • கைகள் மற்றும் கால்களை உதைப்பது, அசைப்பது.
 • குட்புற விழும் போது, சத்தம் கேட்டால் தலை அசைப்பது.
 • தெரிந்தவர்களைப் பார்த்து சிரிப்பது.

3 மாத இறுதியில்…

 • தலையை நிறுத்திக் கொள்வது.
 • சிரிப்பது, அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா அடையாளம் காணுதல்.

babies growth in tamil

Image Source : Daily Mail

இதையும் படிக்க: தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள (Tips for Mother Feeding Moms) வேண்டியவை

6 மாத குழந்தைகள்…

 • பொருட்கள் கீழே விழுந்தால் அதை எடுப்பது.
 • தானே குப்புற விழுவது, மல்லாந்து படுப்பது.
 • தனது கால்களை பிடித்துக் கொண்டு விளையாடுதல்.
 • பால் புட்டியை பிடித்துக் கொள்வது.
 • தெரிந்த முகங்களை நினைவில் வைத்திருப்பது.
 • பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்.
 • 6-வது மாத இறுதியில் தானே நிமிர்ந்து, உட்கார்வது.
 • வாயிலிருந்து ஜொள்ளு வழிதல்.
 • பேச முயற்சி செய்வது. இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

10 மாத குழந்தைகள்…

 • பிடித்துக் கொண்டு நிற்பது.
 • லேசாக தனியே நிற்க பழகுதல்.

12 மாத குழந்தைகள்…

 • துணையில்லாமல் தானே அமர்வது.
 • விளைவாடுவது.
 • நிற்க முயற்சி செய்வது.
 • கை மற்றும் கால்களால் வேகமாக தவழுவது, நகர்வது…
 • டம்ளரில் தண்ணீர் குடிப்பது.
 • சில வார்த்தைகளை பேசுவது.

babies growth in tamil

Image Source : Modern Mom

இதையும் படிக்க: குழந்தையின் முதல் 1000 நாட்கள்… 21 கட்டளைகள்..!

15 மாத குழந்தைகள்…

 • வேண்டாத பொருட்களைத் தள்ளுவது, இழுப்பது.
 • கார்ட்டூன்களை பார்ப்பது.
 • உணவைத் தானாக சாப்பிடுவது.
 • துணையில்லாமல் தானே நடப்பது.
 • யாராவது அதை எடு, இதை எடு என்று சொன்னால் எடுப்பது.

2 வயது குழந்தைகள்…

 • விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பது.
 • போட்டோவை பார்த்து அம்மா, அப்பா, உறவுகளை அடையாளம் காணுதல்.
 • சின்ன சின்ன வார்த்தைகளை நன்றாக பேசுவது.
 • உதவி இல்லாமல் தானே ஸ்பூனை பிடித்து சாப்பிடுதல்.

இதையும் படிக்க: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரவேண்டும்… ஏன்?

Source : ஆயுஷ் குழந்தைகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null