கண்ணாடி போன்ற சருமம்... தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…

கண்ணாடி போன்ற சருமம்... தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…

பளபளப்பான சருமம் என்பது வரம் என்பார்கள். ஆனால், இந்த வரத்தை அனைவரும் பெற முடியும். கொஞ்சமாக உங்கள் சருமத்தைப் பராமரித்துக்கொள்ள கேர் எடுத்துக் கொள்ளுங்கள். மாசற்ற, பளிங்கு சருமம் உங்களுக்கும் கிடைக்கும். அதை எப்படி முறையே செய்வது எனப் பார்க்கலாம். இயற்கை வழியிலும் இது சாத்தியமே.

தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப்

1.கிளென்சிங்

கிளென்சிங் என்றால் சுத்தம் செய்வது. முகத்தில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை நீக்க வேண்டும். முகத்தில் மேக்கப் போட்டு இருந்தாலும் கட்டாயம் அதை நீக்காமல் படுத்து உறங்க கூடாது. ஐ-ப்ரோ, லிப்ஸ் ஸ்டிக் என எது போட்டிருந்தாலும் கட்டாயம் நீக்கி விட வேண்டும். வெளியே சென்று வந்தால் சருமத்தில் பதிந்த புகை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றை நீக்குவதுதான் சரியான வழி. தரமான கிளென்சிங் ஜெல் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வது கிளென்சிங். கெமிக்கல் வேண்டாம் என நினைப்பவர்கள், இயற்கை ஃபேஸ்வாஷ் பவுடர் பயன்படுத்துங்கள். லின்கை பாருங்கள். இதையும் படிக்க: 3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்... கிளென்சிங் செய்கையில் சுத்தமாகின்ற சருமம். அப்போது சரும துளைகள் திறக்கப்படும். அடுத்த ஸ்டெப்பில் இதை எப்படி மூடுவது எனப் பார்க்கலாம். சருமத்துக்கு செய்ய வேண்டிய முதல் நல்ல விஷயம் கிளென்சிங். rose water toner Image Source : Zesty South Indian Kitchen
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

2.டோனிங்

டோனிங், இதை பெரும்பாலும் நிறையப் பேர் தவற விடுவர். டோனிங் என்பது சருமத்துக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு முறை. கிளென்சிங் மூலமாக திறந்த சரும துளைகள், மூடும் முறை டோனிங். மார்க்கெட்டில் விற்கும் நல்ல தரமான டோனரை வாங்கி பஞ்சில் நனைத்து முகத்தில் அதை ஒத்தி எடுக்கலாம். வீட்டிலே டோனர் தயாரிப்பதும் ஈஸி வழி. ரோஜா இதழ்களை சுடுநீரில் போட்டு 2 மணி ஊறவிடுங்கள். பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வையுங்கள். டோனர் ரெடி. 2 வாரத்துக்கு ஒருமுறை ஃபிரெஷ்ஷாக செய்து கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்கானிக் ரோஸ் வாட்டர் வாங்கிக் கொள்ளுங்கள். இதுவும் டோனர்தான். வெள்ளரிக்காய் ஜூஸ், கிரீன் டீ கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் டோனர்தான். இப்படி உங்களுக்கு எது ஈஸியானதோ அந்த டோனர் முறையைப் பின்பற்றுங்கள். சருமம் அழகாக மின்னும். சரும துளைகளை மூடும்.

3.மாய்ஸ்சரைசிங்

தரமான, உங்கள் சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். உலர்ந்த சருமம் உள்ளவர்கள், கிரீம் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், ஜெல் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள், காம்பினேஷன் ஸ்கின் என போடப்பட்டிருக்கும் மாய்ஸ்சரைசர் வாங்கலாம். இரவில், நைட் கிரீம், நைட் ஜெல் என விற்பதைப் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்னும் உங்களது சருமத்தை கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசர் செய்வது நல்லது. மாய்ஸ்சரைசர் கெமிக்கல் என நினைப்பவர்கள், கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி கொள்ளலாம்.

வாரத்தில் 2 முறை செய்ய வேண்டிய ஸ்கின் கேர்

ஸ்கரப்

கிளென்சிங் எனும் ஸ்டெப்பை செய்து விட்ட பின், ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப்பர் என்றதும் என்ன இது, இன்னொரு காஸ்மெட்டிக்கா எனப் பயப்பட வேண்டாம். ஸ்கரப்பர் என்றால் முகத்தில் உள்ள அழுக்கை முற்றிலுமாக நீக்குவது, இறந்த செல்களை நீக்குவது என அர்த்தம். தோசை மாவு, இட்லி மாவுகூட ஸ்கரப்பர் தான். இதை முகம், கழுத்தில் தடவி நன்கு தேய்த்து, மசாஜ் செய்து கழுவி விடலாம். பயத்தமாவு, அரிசி மாவு, கடலமாவு, நலங்கு மாவுகூட ஸ்கரப்பர்தான். இதை கூட சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து, மசாஜ் செய்து கழுவுங்கள். கடைகளில் ஸ்கரப்பர் எனும் கிரீம் விற்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். தரமானதாக வாங்குவது நல்லது. வீட்டிலே ஹோம்மேட் ஸ்கரப் செய்வது எப்படி என இங்கே பாருங்கள். ஸ்கரப் செய்துவிட்ட பின் ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக் போட வேண்டும். இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்... 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்… face pack for skin

ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக்

கடைகளில் விற்கும் ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்கள். இயற்கை முறையில் ஃபேஸ் பேக் போட நினைப்பவர்கள். கடலமாவு, தேன், ஏதாவது ஒரு பழக்கூழ் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம். முல்தானிமிட்டி, சந்தனத்தூள், தயிர் கலந்து ஃபேஸ்பேக்காக போடலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதன் பிறகு டோனிங் எனும் முறையை செய்வது மிக மிக நல்லது. மேலே ஏற்கனவே குறிப்பிட்டது போல டோனரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒத்தி எடுக்கலாம். டோனர் கடையில் வாங்குவதும் நீங்களே தயாரிப்பதும் உங்கள் விருப்பம். இதையும் படிக்க: கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றும் இயற்கை சிகிச்சைகள்

விட்டமின் சி சீரம்

பேஸ் பேக் போட்ட பிறகு அல்லது டோனிங் செய்த பிறகு சீரம் பயன்படுத்தலாம். தற்போது விட்டமின் சி சீரம் மிகவும் பிரபலம். இது சருமத்தை காக்க கூடியது. 4 சொட்டு அளவு எடுத்துக்கொண்டு, முகம், கழுத்து முழுவதும் தடவி கொள்ளுங்கள். சீரம் பூசிய 2 நிமிடம் கழித்து, நீங்கள் மாய்ஸ்சரைசர் பூசிக் கொள்ளலாம். அல்லது கற்றாழை ஜெல் பூசிக் கொள்ளலாம். இந்த விட்டமின் சி சீரம் தினமும் பூசிக் கொள்ளலாம். அல்லது வாரம் 3 முறை பூசிக் கொள்ளலாம். இது காஸ்ட்லி என நினைப்பவர்கள், சீரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஆனால், மாய்ஸ்சரைசரை கட்டாயம் பின்பற்றுங்கள். கற்றாழை ஜெல்லாவது பயன்படுத்துங்கள். sunscreen for glowing skin

சன் ஸ்கிரீன்

மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய பிறகு சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். சில மாய்ஸ்சரைசரில் சன் ஸ்கிரீனும் கலந்து வரும். சில வகை மாய்ஸ்சரைசரில் சன் ஸ்கிரீன் கலந்து வராது. சன் ஸ்கிரீன் முகத்துக்கு நல்லது எனச் சொல்கிறார்கள். உங்கள் சருமத்துக்கு எது சரி என சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு வாங்குங்கள். இங்கு சொல்லப்பட்டிருக்கும் அனைத்து ஸ்டெப்களும் காலை வேளையில் செய்வது நல்லது. முடியாதவர்கள், மாலையிலும் செய்யலாம்.

இரவு பராமரிப்பு... நைட் ஸ்கின் கேர் செய்வது எப்படி?

முதலில் அனைத்து மேக்கப்பையும் நீக்கி விடுங்கள். மேக்கப் ரீமூவர் போட்டு மேக்கப்பை நீக்கி விடுங்கள். மேக்கப் நீக்காவிட்டால், சருமம் சுவாசிக்க கஷ்டப்படும். பருக்கள் வரும். சருமமே பாதிக்கும். மேக்கர் ரீமுவர் இல்லாதவர்கள், தேங்காய் எண்ணெயை பூசி முழுமையாக பஞ்சை தொட்டு அழுக்கை நீக்கிவிடுங்கள். மேக்கப்பையும் நீக்கிவிடுங்கள். ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, முகத்தில் பூசி நன்றாக சுத்தம் செய்யுங்கள். கழுவி விடுங்கள். ஈரத்தைத் துடைத்த பின் நைட் கிரீம் பூசலாம். அல்லது கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசலாம். உதட்டில் லிப் பாம் தடவலாம். ஆனால், பெட்ரோலியம் ஜெல் கலந்து இருக்கும் லிப் பாம் தவிர்த்து விடுங்கள். லிப் பாம் பயன்படுத்த விரும்பாதவர்கள், உதட்டுக்குத் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவலாம். இது பெஸ்ட் ரிசல்ட் தரும். இதையெல்லாம் முறையாக, சரியாக, தொடர்ந்து செய்து வந்தாலே ஒரே மாதத்தில் உங்களது சருமத்தில் வித்தியாசம் தெரியும். சருமம் அழகாக இருப்பதை உங்களால் காண முடியும். இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...
 ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null