குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் - ஸ்மூத்தி வகைகள்…

குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் - ஸ்மூத்தி வகைகள்…

பழங்களில் ஏராளமான சத்துகள் உள்ளன. ஆனால், சிலருக்கு ஜூஸ், ஸ்மூத்தியாக குடித்தால்தான் பிடிக்கும். சத்தும் சுவையும் நிறைந்த ஜூஸ், ஸ்மூத்தி இப்போது ஹாட் ஃபேஷன். உடலுக்குப் புத்துணர்வு ஊட்டும் பழச்சாறு எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விட்டிலே கிடைக்க கூடிய பொருட்களை வைத்து 3-5 நிமிடங்களுக்குள் தயார் செய்து விடலாம். அவ்வளவும் ஹெல்தி… அவ்வளவும் டேஸ்டி…

சில்… சில்… கூல்… கூல்… ஹெல்தி டிரிங்க்ஸ்

#1. கேரட் – மாதுளை – ஆப்பிள் ஜூஸ்

carrot smoothie for babies

தேவையானவை

  • தோல் சீவிய கேரட் – 1
  • உதிர்த்த மாதுளை – 2 பழம்
  • தோல் சீவிய ஆப்பிள் – ½ பழம்
  • நட்ஸ் பொடி (முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் பொடித்தது) – 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
  • கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.
  • தேவைப்பட்டால் தேன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம்.

பலன்கள்

  • சருமத்துக்கு மிகவும் நல்லது.
  • விட்டமின் சி கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • பார்வைத் திறன் மேம்படும்.
  • கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது.
  • முதியவர்களுக்கும் நன்மையைத் தரும்.
  • எனர்ஜி கிடைக்கும்.
  • உடலில் ரத்தம் உற்பத்தியாகும்.
  • ரத்தசோகை நீங்கும்.
  • 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி

#2. பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி

jackfruit smoothie for babies

Image Source : caribbeanpot.com

தேவையானவை

  • பலாப்பழம் – 10
  • தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
  • பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) – 1 ஸ்பூன்
  • தேன் – சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)

செய்முறை

  • முதலில் பலாப்பழத்தையும் தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அதில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.
  • இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.
  • இயற்கையாகவே பலாப்பழம் இனிக்கும் என்பதால் 8 – 12 மாத குழந்தைகளுக்கு இதை அப்படியே கொடுக்கலாம்.
  • தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடலாம்.

பலன்கள்

  • மல்டிவிட்டமின்கள் சத்துகள் உடையது.
  • நல்ல கொழுப்பு இருக்கிறது.
  • ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
  • மாலை நேரம் அல்லது காலை 11.30 மணியளவில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#3. மாங்காய் தயிர் ஸ்மூத்தி

mango curd smoothie for babies

Image Source : Healthveda.com

தேவையானவை

  • மாங்காய் – 25 கிராம்
  • தயிர் – 1 டம்ளர்
  • இந்துப்பு – 1 சிட்டிகை
  • சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
  • நறுக்கிய புதினா – 1 டேபிள் ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய இஞ்சி – ½ டீஸ்பூன்
  • பாலிஷ் போடாத பிரவுன் சுகர் – சுவைக்கேற்ப

செய்முறை

  • மாங்காயை வேக வைத்துத் தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.
  • சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போடவும்.
  • இதில் மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
  • இந்த ஸ்மூத்தி கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம். மேலே புதினா இலைகளைத் தூவி தரலாம்.

பலன்கள்

  • வயிற்றுக்கு நல்லது.
  • நல்ல பாக்டீரியா உடலில் உருவாகும்.
  • இதயம், ரத்த நாளங்களுக்கு நல்லது.
  • புதுமையான சுவையில் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தரலாம்.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?

#4. இளநீர் – வழுக்கை ஜூஸ்

tender coconut smoothie recipe for babies

Image Source : lookandcook.com

தேவையானவை

  • இளநீர் – 1
  • இளநீரின் வழுக்கை – இளநீரில் இருக்கும் அளவு
  • மாதுளை – 2 டேபிள் ஸ்பூன்
  • பனங்கற்கண்டு – சுவைக்கேற்ப
  • நறுக்கிய புதினா – 1 டீஸ்பூன்

செய்முறை

  • புதினாவைத் தவிர மிக்ஸி ஜாரில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின் வடிகட்டிக் கொள்ளவும்.
  • இதில் புதினாவை சேர்த்துக் கலக்கவும்.
  • கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

பலன்கள்

  • வெயிலுக்கு மிகவும் ஏற்றது.
  • உடலின் வெப்பத்தைக் குறைக்கும்.
  • வயிற்றுக்கு நல்லது.
  • சிறுநீர் வரும் இடங்களில் உள்ள எரிச்சலைப் போக்கும்.
  • சிறுநீர் நன்றாகப் போகும்.
  • உடல் கழிவுகளை நீக்கும்.
  • சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
  • நச்சுகள் நீங்கும்.
  • 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடலாம்.

#5. ஆப்பிள் – டேட்ஸ் மிக்ஸிங் ஜூஸ்

apple dates smoothie for babies

Image Source : pinterest.com, enveetukitchen

தேவையானவை

  • ஆப்பிள் – 1
  • பேரீச்சை – 7
  • தேங்காய்ப்பால் – 1 டம்ளர்
  • நட்ஸ் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை

  • பேரீச்சை பழங்களில் உள்ள கொட்டைகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
  • அதுபோல ஆப்பிள் பழத்தில் கொட்டைகள் மற்றும் தோலை நீக்கவும்.
  • மிக்ஸியில் பேரீச்சை, ஆப்பிள், தேங்காய்ப் பால், நட்ஸ் பொடி சேர்த்து அரைக்கவும்.
  • கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

பலன்கள்

  • உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும்.
  • ரத்த உற்பத்தியாக உதவும்.
  • ரத்தசோகை நீங்கும்.
  • மலச்சிக்கலை விரட்டும்.
  • அனைத்து வயதுடைவர்களுக்கும் ஏற்றது.
  • 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் ரெசிபி வகைகள்

#6. டிரிப்பிள் கூல் ஜூஸ்

watermelon juice for babies

தேவையானவை

  • விதை நீக்கிய தர்பூசணி – 50 கிராம்
  • விதை நீக்கிய பப்பாளி – 6 துண்டுகள்
  • ஸ்டாபெர்ரி – 4
  • தேன் – சிறிதளவு
  • நறுக்கிய புதினா – 1 ஸ்பூன்

செய்முறை

  • புதினா தவிர மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
  • நறுக்கிய புதினாவை இந்த ஜூஸில் கலக்கவும்.
  • கிளாஸில் ஊற்றிப் பரிமாற வேண்டும்.

பலன்கள்

    • வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் இது.
    • உடலில் நீர்ச்சத்தை சேர்க்கும்.
  • புத்துணர்ச்சி அளிக்க கூடியது.
  • கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.
  • உடல் சூட்டைக் குறைக்கும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்.
  • ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது.
  • வெயில் காலத்தை இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களுடன் சுலபமாக எதிர்கொள்ளுங்கள். ஆரோக்கியம் வசமாகட்டும்.

இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null