ஒரு நாளில் எத்தனை முறை 6+ மாத குழந்தைக்கு உணவுத் தரலாம்?

ஒரு நாளில் எத்தனை முறை 6+ மாத குழந்தைக்கு உணவுத் தரலாம்?

உங்கள் குழந்தைக்கு 6-வது மாதம் முடிந்து, 7-வது மாதம் தொடங்கியவுடன் திட உணவு கொடுக்க (Solid Foods) தொடங்குங்கள். இதனை கூடுதல் உணவு என்பார்கள். அதாவது இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் தருகின்ற போது 7-வது மாதத்திலிருந்து திட உணவை அறிமுகப்படுத்துங்கள். திட உணவு (கூடுதல் உணவு) தொடர்பான கேள்விகளுக்கும் பதில்களுக்கும் (Solid Foods Doubts) இந்தப் பதிவில் விடை காணலாம்.

உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்ல இருக்கிறோம். உங்களுக்கு நீங்களே உங்களது தோள்ப்பட்டையில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

தற்போது, தமிழ்நாட்டில் 64% பெற்றோர்கள் குழந்தைக்கான கூடுதல் உணவை சரியாகத் தருகிறார்கள். இது தேசிய அளவில் பார்த்தால் 51%தான்… தமிழ்நாடு சார்ந்த தாய்மார்களுக்குப் பாராட்டுக்கள்…

குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் வரை பால் கொடுப்பது நல்லது என்கிறார்கள். நிச்சயமாக குழந்தையின் உடல்நலம், மனநலம், அறிவுத் திறன் ஆகியவை மேலோங்கி இருக்கும்.

7-வது மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு கூடுதல் உணவு தந்தாலும் அதைத் தரமாகவும் பல்வேறு வகைப்பட்ட உணவாகவும் தரவேண்டும் என்பதில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இனி ஒவ்வொரு பெற்றோரும் 7-வது மாதத்திலிருந்து கொடுக்கும் உணவைத் தரமானதாகத் தருவேன் என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

திட உணவு (கூடுதல் உணவு) பற்றிய கேள்விகளும் பதில்களும்

#1. ஒரு குழந்தைக்கு 6 மாதங்களுக்கு பிறகு ஏன் கூடுதல் உணவு தர வேண்டும்?

ஒரு குழந்தைக்கு 6 மாதங்களுக்கு பிறகு தேவையான சத்துகள் கிடைப்பதற்கு தாய்ப்பால் மட்டும் போதாது.

கூடுதல் உணவும் தாய்ப்பாலும் குழந்தைக்கு தேவையான சத்துக்களைத் தரும். தாய்ப்பாலும் தேவையான சத்துக்களுக்கும் இடையேயான பாலமாக (Bridge) இருப்பது கூடுதல் உணவுகள்.

குழந்தைக்கு ஏற்படும் இந்த இடைவேளியை சரிசெய்யவில்லை என்றால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும். எனவே 7-வது மாதத்திலிருந்து கூடுதல் உணவுக் கட்டாயம்.

6 மாதங்களுக்கு பிறகு கூடுதல் உணவு மூலம் தேவையான இரும்புச்சத்து உணவு மூலமாகத் தர வேண்டும். தவறினால் குழந்தை நோஞ்சனாக வளரும்.

திட உணவு (கூடுதல் உணவு) கொடுத்தால்தான் குழந்தைக்கு சத்துக் குறைபாடு ஏற்படாது.

introducing solid food

Image Source: Credit parenting.com

இதையும் படிக்க: 6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் (Puree Recipes) ரெசிபி வகைகள்

#2. குழந்தைக்குத் தேவையான கலோரிகள் எவ்வளவு?

ஒரு குழந்தையின் தேவைகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும்.

6-8 மாத குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 600 கலோரிகள் தேவைப்படும்.

9-11 வரையான மாதங்களில் ஒரு நாளைக்கு 700 கலோரிகள் தேவைப்படும்.

12-23 மாதங்கள் நிறைவு பெற்ற குழந்தைகளுக்கு 900 கலோரிகள் தினமும் தேவைப்படும்.

#3. ஒரு குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்கிறதா என எப்படித் தெரிந்து கொள்வது?

அங்கன்வாடி மையங்களில் குழந்தையை மாதாமாதம் எடை போட வேண்டும்.

ஐநா சபையின் குழந்தைகள் பிரிவு, உருவாக்கியுள்ள குழந்தை வளர்ச்சி பட்டியலில் உள்ள பச்சைப்பகுதியில் உள்ள அளவுக்கு குழந்தை முன்னேறினால் அதற்கு போதுமான உணவு கிடைக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை எடை குறைவாக இருந்தாலோ பட்டியலில் ஆரஞ்சு அல்லது சிவப்பு பகுதியில் குழந்தையின் வளர்ச்சி அளவுகள் இருந்தாலோ தாய்ப்பால் கொடுக்கின்ற நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

அதிக சக்தி தரும் உணவுகள், சத்துள்ள உணவுகளை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.

solid foods for babies

Image Source: Credit organiclifehq.com

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

#4. என்னென்ன உணவுகளைக் குழந்தைக்கு தரலாம்?

தேவையான சத்துக்களைப் பெற குழந்தைக்கு பல வகையான உணவுகளைத் தரவேண்டும்.

சைவம் சாப்பிடுபவர்கள்:

ஆர்கானிக் பசும்பால் (ஊசி போடாமல் கருவுறும் பசுமாடுகளிலிருந்து சுரக்கப்படும் பால்).

ஆர்கானிக் பசும்பாலால் தயாரிக்கப்பட்ட பால் பொருட்கள்.

பருப்புகள், பயறுகள்.

தானியங்கள் ஆகியவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் சத்தான கீரைகள், காய்கறிகள், பழங்கள் கொடுக்கலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள்:

மேற்சொன்ன உணவுகளோடு ஆட்டுக்கறி, கோழிக்கறி (ஆன்டிபயாடிக் ஊசி போடாதது), மீன் மற்றும் முட்டைகளைக் கொடுக்கலாம். ஏனெனில் அசைவ உணவுகளில் இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும். 1 வயது + குழந்தைகள் சாப்பிடலாம். 8 மாத குழந்தைகளுக்கு மஞ்சள் கரு, மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன் தரலாம்.

#5. குழந்தைக்கான கூடுதல் உணவில் என்னென்ன விட்டமின்கள் இருக்க வேண்டும்?

தினசரி உணவில் விட்டமின் ஏ கட்டாயம் இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி

baby foods solid foods

Image Source: Credit heromea.com

#6. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாளில் எத்தனை முறை குழந்தைக்கு உணவுத் தரலாம்?

சராசரியாக 4-5 முறை உணவு அளிக்க வேண்டும்.

இதனுடன் சிற்றுண்டியாக 1 அல்லது 2 முறை கொடுக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் உணவு எவ்வளவு சத்தானது என்பதைப் பொருத்து உணவு நேர எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும்.

சத்து குறைவான உணவுகளை வழங்கினால் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

குழந்தை வளர வளர 3 ஆண்டுகளுக்கு பிறகு நேர எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம். இருப்பினும் 2 இடைவேளிகளில் சிற்றுண்டி கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி

#7. குறிப்பறிந்து உணவுக் கொடுத்தல் என்றால் என்ன?

குறிப்பறிந்து உணவுக் கொடுத்தல் என்பது குழந்தையின் மொழி மற்றும் சமிக்ஞைகளைப் புரிந்து கொண்டே அதன் பசிக்கு ஏற்ப உணவு கொடுப்பதே ஆகும்.

#8. ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் அப்போது எத்தகைய உணவு வகைகளை உண்ண வேண்டும்?

உடல்நலக் குறைபாடு நேரங்களில் நீர் ஆகாரங்களை அதிகப்படுத்துங்கள்.

எளிதில் செரிமானமாக கூடிய மென்மையான உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

குழந்தைகள் சற்று கூடுதலாக உணவு உண்ண ஊக்குவியுங்கள்.

babies eating solid foods

Image Source: Credit momtricks.com

இதையும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

#9. ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குவதைப் பற்றிய யோசனைகள் என்னென்ன?

7-12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு முற்றிலுமாக நீங்களே உணவை ஊட்டி விடுதல் நல்லது.

1-2 வயதில் உள்ள குழந்தைகளுக்கு உணவருந்த, நீங்கள் அருகில் உட்கார்ந்து உதவி செய்யுங்கள்.

குழந்தைக்கு தனியாக ஒரு தட்டில் உணவுக் கொடுங்கள். இதன் மூலம் குழந்தை எவ்வளவு உணவு உண்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்.

மெதுவாக, பொறுமையாக உணவை ஊட்டி விடுங்கள் அல்லது உணவைச் சாப்பிட பழக்கப்படுத்துங்கள். ஆனால், ஒருபோதும் உணவை வலுகட்டாயமாகத் திணிக்க வேண்டாம்.

சாப்பிடும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். சாப்பிடும்போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும்.

விளையாட்டு போக்கில் குழந்தைகள் உணவு உண்ணச் செய்யலாம்.

குழந்தைகள் உணவு உட்கொள்ள மறுத்தால், உணவின் பதத்தையும் ருசியையும் மாற்றுங்கள்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

Source: UNICEF

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null