குழந்தைகளுக்கு சத்தான உணவை தினந்தோறும் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூப் குழந்தைகளுக்கான சிறந்த உணவு. ஹெல்தி, டேஸ்டி சூப் செய்வது எப்படி எனப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதை தயாரிப்பதற்கான நேரமும் மிகவும் குறைவுதான்.
குழந்தைகளுக்கான 5 சூப் வகைகள்
#1.தக்காளி சூப்
தேவையானவை
- தக்காளி - 2
- பிரவுன் சர்க்கரை - ½ டீஸ்பூன்
- இந்துப்பு - ஒரு சிட்டிகை
- சோள மாவு - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- தண்ணீரில் தக்காளியை முழுதாக வேகவைத்துத் தோலை நீக்கவும்.
- பிறகு தக்காளியை மையாக அரைத்து, அதில் இந்துப்பு, பிரவுன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
- சோள மாவையும் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க வைத்த பின் மிளகுத் தூள்வ் கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
- இளஞ்சூடாக குழந்தைக்கு தரலாம். 1+ வயது குழந்தைக்கு ஏற்றது.
குறிப்பு:
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் உப்பு, சர்க்கரை, சோள மாவு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி
#2.சிறுகீரை சூப்
தேவையானவை
- மிகவும் பொடியாக நறுக்கிய சிறுகீரை - 1/2 கப்
- பருப்பு தண்ணீர் - 1 கப்
- மிளகு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை
- இந்துப்பு - ஒரு சிட்டிகை
- சீரகம் - ½ டீஸ்பூன்
செய்முறை
- பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- இறக்கும் முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கிவிடலாம்.
- 6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு:
- சிறுகீரை, பருப்பு கீரை எனக் குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: 6 - 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் (Puree Recipes) ரெசிபி வகைகள்
#3.கார்ன் சூப்
தேவையானவை
- வேகவைத்த கார்ன் - 1 கப்
- மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
- இந்துப்பு - தேவையான அளவு
- வெண்ணெய் - ¼ டீஸ்பூன்
- சோள மாவு - 1 டீஸ்பூன்
- அறிந்த சிறு தக்காளி - 1
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- வேகவைத்த கார்னை வெண்ணெய் போட்டு வதக்கவும்.
- லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் சோள மாவை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வாணலியில் ஊற்றவும்.
- 10 நிமிடங்கள் கொதித்ததும் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கலாம்.
- 2+ வயது குழந்தைக்கு தரலாம்.
- குறிப்பு: குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப இனிப்பு கார்ன் கூட சேர்க்கலாம்.
1 வயது குழந்தைகளுக்கு கொடுத்தால், ஒன்றிரண்டாக சோளத்தை அரைத்து கொள்ளலாம்.
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
#4.காய்கறி சூப்
தேவையானவை
- வேகவைத்த காலிஃப்ளவர், பட்டாணி, கோஸ் சேர்த்து - 1 கப்
- வேகவைத்த தக்காளி - 1
- நெய் - 2 டீஸ்பூன்
- மிளகுத் தூள், இந்துப்பு - சிறிதளவு
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- வேக வைத்த தக்காளியை தோல் உரித்துக் கொள்ளவும்.
- தக்காளியுடன் வேகவைத்த காய்கறிகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- இறக்கும் முன் இந்துப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
- 6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு:
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் - ஸ்மூத்தி வகைகள்…
#5.கேரட் பீட்ரூட் சூப்
தேவையானவை
- கேரட், பீட்ரூட் நறுக்கியது - ½ கப்
- பருப்பு தண்ணீர் - 1 டம்ளர்
- மிளகு தூள் - ஒரு சிட்டிகை
- நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
- கேரட், பீட்ரூட்டை நன்கு வேகவைத்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- பருப்பு தண்ணீர் சேர்த்து வாணலியில் அரைத்து விழுதையும் சேர்த்துக் கலக்கவும்.
- மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
குறிப்பு:
- 6+ மாத குழந்தைகளுக்கு ஏற்றது.
- ஒரு வயது + குழந்தைகளுக்கு காய்கறியை அரைக்க வேண்டாம்.
- அதுபோல் ஒரு வயது + குழந்தைகளுக்கு சிறிதளவு இந்துப்பு சேர்த்துக் கொடுக்கலாம்.
இதையும் படிக்க: ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null