குழந்தைகள் சிலர் பெரியவர் ஆன பிறகு தவறாக நடந்துகொள்வதற்கு சில காரணங்களாக தன் குழந்தைப் பருவத்தின் தாக்கம் என சில வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. இதைத் தடுக்க குழந்தை வளர்ப்பு சரியாக இருக்க வேண்டும்.
அதில் ஒன்று குழந்தை முன் பெற்றோர் ஆடையை மாற்றுவது (Changing dress front of children). இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் தவறான வழியில் போக கூடும்.
பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிரில் ஆடைகளை மாற்றும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு இந்த நடவடிக்கை பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
ஆனால், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றுவதால் குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் உண்டாகிறது.
குழந்தைகளின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வியானது மனதிலே எழுந்து, தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
ஆகையால் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர் உடைகள் மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் முன் உடை மாற்ற கூடாது… ஏன்?
Image Source : Credit 889noticias.mx
- சில குழந்தைகள் பெற்றோர் உடை மாற்றும்போது, ஆர்வமாக தங்கள் பெற்றோரின் மறைமுக உறுப்புகளைக் கவனிக்கிறார்கள்.
- இதனால், குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
- குழந்தைகள் மனதில் தோன்றும் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் குழம்பி போகிறார்கள்.
- இதே பழக்கம் நீடித்தால் தொடர்ந்து பெற்றோர் உடை மாற்றும் போது, மறைந்திருந்து குழந்தைகள் கவனிக்கத் தொடங்குகிறார்கள்.
- உடை மாற்றும்போது தாய் அல்லது தந்தையை பார்க்கும் குழந்தைகள் இடுப்புக்கு கீழ், அக்குள் பகுதிகளில் உள்ள முடிகளைப் பார்த்து குழம்பி போகின்றனர்.
- தனக்கும் தன் பெற்றோருக்கு பாலுறுப்பு வித்தியாமாக இருப்பதைப் பார்த்து குழம்பி போகின்றனர்.
- சில குழந்தைகள் பெற்றோரிடம் ஏன் இங்கு முடி? எனக் கேட்கவும் செய்கின்றனர். அதற்கு பெற்றோர் கண்டிப்பது, அடிப்பது, திட்டுவது, பதில் சொல்லாமல் மழுப்புவது போன்றவற்றால் இன்னும் குழந்தைகள் குழம்புகின்றனர். மன பிரச்னைகள் உண்டாகிறது.
இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…
குழந்தைகளுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்?
Image Source : Credit cdc.gov
- பெற்றோர்கள், ‘நீ பெரிய பிள்ளையானால் உனக்கு இப்படி வரும்’ எனப் பொறுமையாக எடுத்து சொல்வதே சரியான வழி.
- ஆணுறுப்பு பெரிதாக இருக்கிறது. மார்பகங்கள் ஏன் பெரிதாக உள்ளது எனக் குழந்தைகள் கேட்டால், அதற்கு பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைத்து குழந்தைகளைக் குழப்பத்திலிருந்து மீட்டெடுத்து விடுவது நல்லது.
- இல்லையெனில் குழந்தைகள் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பர்.
- பொதுவாக பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் இப்படியான கேள்விகளை அதிகமாக கேட்கின்றனர்.
இதையும் படிக்க: பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா?
இந்த விஷயத்தில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
- குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் விஷயத்தை வெகுவாக கவனிப்பர்.
- நல்லவை, தீயவை என இரண்டையும் குழந்தைகள் கவனிப்பர். ஏனெனில் குழந்தைகளுக்கு எது சரி, தவறு எனத் தெரியாது.
- புரியாத வயது என்பதால் கேள்விகள் நிறைய மனதில் தோன்றி குழப்பத்தில் சிக்கித் தவிப்பர். அதனால், குழந்தைகள் முன் பெற்றோர், பெரியவர்கள் சரியாக நடக்க வேண்டும்.
- ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு எப்போதும் உள்ளாடை (ஜட்டி) அணிய வேண்டும். உள்ளாடை அணியாமல் குழந்தைகளை அப்படியே ஆடை இல்லாமல் விட கூடாது.
- குழந்தைகள், தன்னையும் எதிர்பாலினரையும் பார்த்து தங்களுக்குள் உள்ள வித்தியாசத்தை சிந்தித்து குழம்பி போகும்.
Image Source : Credit nickisdiapers.blogspot.in
- அதுபோல குழந்தைகள் ஆண், பெண் என இருந்தாலும் இருவரையும் தனி தனி அறையில் சென்று உடை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- எக்காரணத்துக்கும் அவசரத்துக்கும் குழந்தைகள் முன் பெற்றோர், பெரியவர்கள், மற்ற பெரிய குழந்தைகள் யாரும் உடை மாற்ற கூடாது.
- ஒரே வயதில் அல்லது 2, 3 வயது வித்தியாசம் இருக்கும், இரு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை ஒன்றாக ஒரே அறையில் உடை மாற்ற அனுமதிக்கலாம்.
- ஒரே வயதில் அல்லது 2, 3 வயது வித்தியாசம் இருக்கும், இரு ஆண் குழந்தைகள் இருந்தால் அவர்களை ஒன்றாக ஒரே அறையில் உடை மாற்ற அனுமதிக்கலாம்.
- ஆண், பெண் என சகோதர, சகோதரி குழந்தைகளை ஒரே அறையில் தூங்க, உடை மாற்ற, தனியாக இருவருக்கும் என அறை தருவது போன்றவை கூடாது.
- 12 வயது வரை குழந்தைகளுக்கு அதிகமாக பாலியல் தொடர்பான கேள்விகள் எழும். இதற்கு திட்டாமல், மழுப்பாமல் பக்குவமாக விடையளிக்க வேண்டும்.
- 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர் இதுபோன்ற விஷயத்தில் மிக கவனமாக கையாள்வது நல்லது.
- வீட்டிலே குழந்தைகள் இருந்தாலும் மூடி இருக்கும் அறைக்குள் தட்டி திறக்கலாமா, வரலாமா எனக் கேட்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
- அப்பா, அம்மாவின் அறைக்கு சென்றாலும், ‘உள்ளே வரலாமா’ எனக் கேட்க வேண்டும். இந்தப் பழக்கத்துக்கு குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
- குழந்தைகள் முன் பாலியல் தொடர்பான வீடியோ, பேச்சு, படங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டாம்.
- அப்பா அம்மாவின் பாலியல் தொடர்பான அசைவுகள்கூட குழந்தைகளின் மனதைப் பாதிக்க செய்யும்.
- குழந்தைகளைக் கவனமாக வளர்த்து எடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
Source : ஆயுஷ் குழந்தைகள்
இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null