தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

குழந்தையை பெற்றெடுத்து அவர்களை வளர்த்தெடுத்து சமூகத்துக்கு நல்ல குழந்தையாக உருவாக்குவதில் தாய்மார்களின் அக்கறை பாராட்டுக்குரியது. தூக்கமும் தியாகம் செய்து, பல உடல்நல கஷ்டங்களை அனுபவித்து குழந்தையை வளர்த்தெடுக்கும் மனோபாவம் ஈடுஇணையில்லாதது. சில தாய்மார்களுக்கு சில விஷயங்கள் தெரியாமல் போகலாம். அதைப் பற்றி விளக்குவதே இந்தப் பதிவு.

#1. பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு வர

தாய்ப்பால்தான் குழந்தைக்கு முக்கியம் என அனைவருக்கும் தெரியும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன. அதில் சில நன்மைகளைப் பார்க்கலாம். தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் பிறப்புறுப்பு தசைகள் சுருங்கி இயல்பான நிலைக்கு விரைவில் வர தாய்ப்பால் கொடுப்பதே உதவியாக அமைகிறது.

#2. உறவு மேம்படும்

தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் உணர்ச்சியும் குழந்தையின் உணர்ச்சியும் ஒன்றாக சேர்கிறது. இருவருக்கும் இடையேயான உறவும் அன்பும் மேம்படுகிறது.

#3. குழந்தையின் பசி அறிவது

குழந்தையின் பசியை அறிந்து கொள்ளுங்கள். பசிக்காக குழந்தை அழுகிறதா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தூங்கி எழுந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கலாம். அப்போது தாய்ப்பால் அவசியம் கொடுக்கலாம். 6+ மாத குழந்தைகள் எனில் திடஉணவோ தாய்ப்பாலோ ஃபார்முலா பாலோ கொடுக்கலாம். 6+ மாத குழந்தைகளுக்கு, தேவையான தண்ணீரைக் கொடுக்கலாம். குழந்தைக்கு தாகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தாகத்தால் கூட குழந்தைகள் அழலாம். குழந்தையின் தேவைகளை அறிவது மிக மிக முக்கியம். babies sleep Image Source : gipsypixel
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#4. தூங்கும் குழந்தைகள்

தூங்கும் குழந்தைகளை எழுப்பி பால் கொடுக்க வேண்டாம். பசித்தால் குழந்தை எழுந்துவிடும். அப்போது பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாமலே குழந்தைக்கு பால் தர வேண்டாம். குழந்தைக்கு பசி வரவில்லை என்றால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

#5. அன்பை எப்படி வெளிப்படுத்துவது

குழந்தையின் முகத்தைப் பார்த்து சிரித்த முகத்துடன் பேச வேண்டும். கொஞ்ச வேண்டும். மிதமாக குழந்தையை தடவி கொடுக்கலாம். மசாஜ் செய்வது நல்லது. சாதாரணமாகவே, குழந்தையை மென்மையாக வருடுவது, குழந்தைக்கு இதமளிக்கும். மெல்ல குழந்தையை அடிக்கடி அரவணைத்துக் கொள்ளலாம். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி செய்வதே தாயின் மிகப் பெரிய கடமை.

#6. தாயுடன் தந்தையும்

தாய் மட்டும் குழந்தையை எல்லா நேரமும் கவனிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தாயுடன் தந்தையும் குழந்தைக்கான எல்லாத் தேவைகளையும் செய்ய வேண்டும். டயாப்பர் மாற்றுவது, குழந்தையை சுத்தம் செய்வது போன்ற அனைத்தையும் தந்தையும் செய்வது நல்லது.

#7. 8+ மாத குழந்தைகள்

8+ மாத குழந்தைகளாக வளர்ந்த பிறகு குழந்தையை வீட்டிலே வைத்திருக்க வேண்டாம். அழகாக குழந்தைக்கு உடை அணிந்து, வெளியே தூக்கி செல்லுங்கள். புதிய முகங்களைக் குழந்தை பார்த்து பழகட்டும். இதுவும் குழந்தைக்கான ஒரு வளர்ச்சிதான்.

#8. நீர்ச்சத்து தேவை…

குழந்தைக்கு பசி இல்லாதபோது, கைகளை கட்டி, குழந்தையை அமுக்கி வலுகட்டாயமாக உணவை ஊட்ட வேண்டாம். வாந்தி, பேதி சமயத்தில் குழந்தைக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே இளநீர், இளஞ்சூடான தண்ணீர் கொடுப்பது, பழரசம் தருவது மிக மிக அவசியம்.

#9. படுக்கும் இடம்

குழந்தையின் படுக்கும் இடம் சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தற்போது பெரும்பாலான வீட்டில் கரப்பான் பூச்சி, எறும்பு, பூரான் போன்றவை இருக்கின்றன. சென்னை போன்ற நகர்புறத்தில், சாக்கடை வழியாக சமையல் அறை சின்க் பைப், குளியல் அறை மற்றும் கழிப்பறையின் சல்லடை வழியாக பூரான்கள் வருகின்றன. எனவே, குழந்தைகளைத் தரையில் தூங்க வைப்பதற்கு முன், வீட்டை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். clothes for babies Image Source : AliExpress

#10. குழந்தையின் ஆடை

ஆடை மெல்லியதாக, தளர்வாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் ஊசி இல்லாத ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். குழந்தையின் சருமத்தில் குத்தாத வகையில் ஆடை இருப்பது நல்லது. அடிக்கடி குழந்தையை படுக்க வைக்கும் துணி நனைந்து போனால், அதை அடிக்கடி மாற்றுங்கள். காய்ந்துவிட்டது என அப்படியே விடக்கூடாது. கிருமிகள் குழந்தையை எளிதில் தாக்கிவிடும்.

#11. குழந்தையிடம் நெருங்குபவர்கள்

முடிந்தவரை உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களை மட்டுமே குழந்தையை தூக்க அனுமதியுங்கள். சிலர் ஆசையில், கிள்ளுவார்கள். இதைத் தடுக்க பாருங்கள். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள், குழந்தையிடம் நெருங்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அம்மை, காய்ச்சல், சளி இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு குழந்தையை அழைத்து செல்ல வேண்டாம். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null