குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் விதவிதமான துவையல் ரெசிபி

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் விதவிதமான துவையல் ரெசிபி

பல் முளைக்காத குழந்தைகளுக்கு காய்கறிகளின் சத்துகளும் கீரைகளின் சத்துகளும் தேவை. அதை எப்படி சேர்ப்பது? குழந்தைகள் சப்பி சாப்பிட ஏற்றபடி சமைத்துக் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தியுடன் பல்வேறு ஊட்டச்சத்துகளும் குழந்தைகளின் உடலில் சேர வாய்ப்புகள் உண்டு. சத்தான சுவையான துவையல் செய்முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சுவையான ஆரோக்கியமான 5 துவையல் வகைகள்…

#1. சௌ சௌ துவையல்

தேவையானவை

சௌ சௌ - 1 காய்ந்த மிளகாய் - 4 மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தக்காளி - 3 கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு சௌ சௌ, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். பாதி வெந்ததும் உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற வைக்கவும். மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இறுதியாக, சிறிதளவு எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும். சுவையான சௌ சௌ துவையல் தயார்.

பலன்கள்

சௌ சௌவில் உள்ள சத்துகள் குழந்தைக்கு கிடைக்கும். விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 6+ மாத குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். vegetable thuvaiyal Image source : pinterest
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#2. பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை

கடலப்பருப்பு, உளுந்து - தலா 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 இஞ்சி - சின்ன துண்டு தேங்காய் - கால் கப் பீர்க்கங்காய் தோல் - 2 காய் புளி - ஒரு இன்ச்

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடலப்பருப்பு, உளுந்து, மிளகாய், தேங்காய் போட்டு வதக்கி மிக்ஸியில் போடவும். லேசான சூட்டில் புளியை லேசாக வதக்கி, அதை மிக்ஸியில் போடவும். பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கவும். வதக்கிய அனைத்தும் ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பீர்க்கங்காய் தோல் துவையல் தயார்.

பலன்கள்

சருமத்துக்கு தேவையான சத்துகள் இதில் உள்ளன. புதுமையான சுவையில் இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும். இதையும் படிக்க: உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

#3. துவரம் பருப்பு துவையல்

தேவையானவை

துவரம் பருப்பு - கால் கப் காய்ந்த மிளகாய் - 2 தேங்காய் - ½ கப் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

மிதமான தீயில் துவரம் பருப்பை வாணலியில் போட்டு, நன்கு மணம் வரும் வரை வதக்கவும். இதனுடன் தேங்காய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இறிதியில் புளி சேர்த்து இறக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்க, துவரம் பருப்பு துவையல் தயார்.

பலன்கள்

புரதச்சத்து அதிகம். குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க உதவும். தசை வளர்ச்சிக்கு உதவும். spinach thuvaiyal Image source : cooking from heart

#4. வல்லாரை கீரை துவையல்

தேவையானவை

வல்லாரை கீரை - 1 கப் உளுந்து, கடலப்பருப்பு - தலா 2 ஸ்பூன் தக்காளி - 3 வெல்லம் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4-5 புளி - ஒரு இன்ச்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்து, கடலப்பருப்பு, மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி நன்கு வதக்க வேண்டும். கீரையை தனியாக வதக்கி கொள்ளவும். லேசான சூட்டில் புளியை லேசாக வதக்கி எடுக்கவும். அனைத்தும் ஆறியதும் உப்பு, வெல்லம் சேர்த்து வதக்கியவற்றை போட்டு அரைக்கவும். அவ்வளவுதான். வல்லாரை கீரை துவையல் தயார்.

பலன்கள்

நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு நல்லது. மலச்சிக்கல் தீரும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு… நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம் ரெசிபி... avacodo thuvaiyal Image source : Isha

#5. அவகேடோ துவையல்

தேவையானவை

அவகேடோ - 1 மிளகு தூள் - ½ டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிதளவு

செய்முறை

ஆலிவ் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் போட்டு மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தவற்றை பாத்திரத்தில் போட்டு, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். சப்பாத்தி, பூரிக்கு, சாண்ட்விட், கோதுமை பிரெட் போன்றவற்றுக்கு நன்றாக இருக்கும்.

பலன்கள்

நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடல் எடை அதிகரிக்க உதவும். சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தசை வளர்ச்சிக்கு உதவும். இதையும் படிக்க: குக்கரில் செய்யக்கூடிய 3 வகை ஹோம்மேட் பிஸ்கெட் ரெசிபி... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null