பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்

பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்

பிறந்த குழந்தைக்கு தலையானது எப்போதும் சரியான உருண்டை வடிவத்தில் இருப்பதில்லை. பொதுவாகப் பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக இலகுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும். மேலும், உங்கள் குழந்தை எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தால், அதன் தலை தட்டையாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆகவே இதைத் தட்டை தலை என்றும் கூறுகிறார்கள்.

 

சிலர் குழந்தையைக் குப்பற படுக்க வைப்பார்கள். இதுவும் அந்தக் குழந்தைக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அஜீரண பிரச்சனை மற்றும் முழு உடலுக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்படக்கூடும். அதனால், உங்கள் பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற வேண்டும் என்றால், நீங்கள் சரியான முயற்சி மற்றும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

 

ஏன் குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருப்பதில்லை? (Why baby’s head is not in proper shape?)

உங்கள் பிறந்த குழந்தையின் தலை ஏன் சரியான உருண்டை வடிவத்தைப் பெறுவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும். பின் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்வீர்கள். இந்தப் புரிதல் இன்று இருக்கும் நவீன தாய்மார்களுக்குப் பெரும்பாலும் ஏற்படுவதில்லை. இது அவர்களது அறியாமை என்றும் கூறலாம். எனினும், இதனை நீங்கள் எளிதாகச் சரி செய்து உங்கள் குழந்தைக்கு நல்ல தலை வடிவத்தைப் பெறலாம்.

 

எதனால் குழந்தை தலை வடிவம் சரியாக இருப்பதில்லை?- இங்கே சில காரணங்கள்:

  • பிரசவத்தின் போது மிகவும் சிரமப்பட்டு குழந்தை வெளியில் வந்தால், அதன் தலையானது சில நேரங்களில் சீரற்ற வடிவத்தைப் பெறுகிறது.
  • சில தருணங்களில் குழந்தைக்குப் பிறக்கும் போது நல்ல வடிவத்தில் தலை இருந்தாலும், பிறந்த பின் அதன் வடிவம் மாற வாய்ப்பிருக்கிறது. அதாவது குழந்தையை படுக்க வைக்கும் போது, சில மாதங்களுக்குக் குழந்தை ஒரே நிலையில் படுத்திருப்பதால், பின் பகுதி தலையானது அழுத்தத்தின் காரணமாகத் தட்டையாக மாறுகின்றது
  • உங்கள் குழந்தையின் தலை பகுதியில் இரண்டு மிருதுவான இடங்களை நீங்கள் காணலாம். அது மண்டை ஓடு முழுமையாக வளரவில்லை என்பதை குறிக்கின்றது. இந்த அறிகுறிகள் பிறப்பு கால்வாய் வழியாகக் குழந்தையின் தலை வெளியே எடுக்கும் போது ஏற்பட்டதாக இருக்கும்
  • பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் போது சற்று கூர்மையான தலையோடே பிறக்கின்றனர்.
  • இப்படி சில காரணங்கள் இருந்தாலும், நீங்கள் எது இயல்பான தலை மற்றும் எது இயல்பற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஒரு பக்கம் தட்டையாக இருந்து மற்றொரு பக்கம் சீரான வடிவம் இல்லாமல் இருந்தால், நீங்கள் சில முயற்சிகளை எடுத்துத்தான் ஆக வேண்டும்.

 

சீரற்ற தலை வடிவம் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமா? (Will unshaped head cause problem?)

  • தலையின் வடிவம் அந்தக் குழந்தை வளரும் போது அழகு குறித்த சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தையின் பின்னந்தலையில் ஏற்படும் அழுத்தத்தால் தலை தட்டையாக மாறுவதால், அதன் மூளை பாதிக்கப்படாது. மேலும் அது குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்காது.
  • நீங்கள் உங்கள் குழந்தையின் தலை வடிவத்தை பற்றிப் பெரிதும் கவலைப்படுவதால், உங்கள் குழந்தையோடு நீங்கள் செலவு செய்ய வேண்டிய மகிழ்ச்சியான நேரத்தை மட்டுமே இழப்பீர்கள். சில எளிதான முயற்சிகளை நீங்கள் எடுக்கும் போது, வெகு விரைவாகவே உங்கள் குழந்தையின் தலை நல்ல உருண்டையான வடிவத்தைப் பெற்று விடும். இதனால் மண்டை ஓடும் சீராகும்.

 

தட்டையான தலையைத் தவிர்க்க சில குறிப்புகள் (Tips to prevent flat head in Tamil)

 

உங்கள் குழந்தையின் தட்டையான தலை உங்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கின்றது என்றால், அதனைப் போக்க இங்கே சில எளிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பின்வருவனவற்றை நீங்கள் முயற்சிக்கும் போது, நீங்கள் எதிர் பார்த்த பலனைச் சில நாட்களிலேயே காணலாம். உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்:

 

தூங்க சரியான படுக்கை அமைத்தல் (Proper bed while sleeping)

உங்கள் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே, அவன்/அவள் தூங்குவதற்கு சரியான படுக்கையை தேர்ந்தெடுங்கள். பிறந்த முதல் சில நாட்கள் பின்னந்த்தலை மிக மிருதுவாக இருக்கும். அதனால் ஒரே நிலையில் தூங்க வைத்தால், தலையின் வடிவம் தட்டையாகலாம்.

 

தலையை ஒரே பக்கத்தில் வைக்காமல் இருப்பது (Not keep the head position in the same side)

குழந்தை பிறந்த சில வாரங்கள் கழித்து, ஒவ்வொரு இரவும் அவன்/அவள் தூங்கும் போது தலையை வேறு வேறு பக்கத்தில் வைத்துப் படுக்கும் படி செய்யுங்கள். இதனால் தலைக்குப் போதுமான சுழற்சி கிடைத்து நல்ல வடிவம் கிடைக்கும்.

 

துணி வைத்து, தலைக்கு வாட்டம் தருவது (Give cloth support to head)

துணியைச் சுருட்டி உங்கள் குழந்தையின் தலை எப்போதும் ஒரே நிலையில் இருக்கும் படி செய்யாதீர்கள். இதனால் தலை தட்டையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

 

குழந்தையை நேராக படுக்க வைப்பது (Make baby lay straight)

குழந்தையை எப்போதும் நேராகப் படுக்க வையுங்கள். அவனைச் சுற்றி தலையணை மற்றும் பொம்மைகள் என்று எதுவும் வைக்க வேண்டாம். அவன் குப்பற படுக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

பால் கொடுக்கும் போது தலையின் வாட்டத்தை மாற்றி வைப்பது (Change position while feeding milk)

பாலூட்டும் போது மாற்றி மாற்றி குழந்தையைப் படுக்க வைத்துக் கொள்ளுங்கள். எபோதும் ஒரே கையில் அனைத்துக் கொள்ளாமல் நிலையை மாற்றிப் பால் கொடுப்பதால் தலைக்கு வேறு வேறு பக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு, தலை தட்டையாகும் வாய்ப்பு குறையும்.

 

ஒரே பொசிஷன் வேண்டாம் (Don’t keep baby in same position too long)

ஒரே நிலையில் உங்கள் குழந்தை அதிக நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. இதனால் தலைக்கு ஏற்படும் அழுத்தம் குறையும், மேலும் உருண்டையான தலை வடிவமும் கிடைக்கும்.

 

உள்ளங்கையால் தலையை உருட்டி விடுங்கள் (Roll the baby head shape with your palm)

அவ்வப்போது உங்கள் குழந்தையின் தலைக்கு உங்கள் உள்ளங்கைகளால் தலையில் உருட்டித் தேய்த்து மசாஜ் கொடுங்கள். இதனால் நல்ல உருண்டையான வடிவம் பெரும். எனினும், அதிகம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மிருதுவாக மற்றும் மென்மையாகத் தடவவேண்டும். இவ்வாறு செய்யும் போது தலைப் பகுதியில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

 

இந்த முயற்சிகளை எடுத்த பின்னும் உங்கள் குழந்தையின் தலை தட்டையாக இருந்தால், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

 

உங்கள் குழந்தையின் கழுத்துப் பகுதி திடமாகத் தொடங்கியதும், அவனைச் சில நிமிடங்களுக்குக் குப்பறப் படுக்க வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது பின் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்துத் தட்டையான தலை ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

 

உங்கள் குழந்தை விளையாடும் இடத்தை அவ்வப்போது மாற்றுவது நல்லது. இதனால் வெவ்வேறு நிலையில் அவன் தலையை வைத்து விளையாடும் போது, தலை தட்டையாவது தடுக்கப்படுகிறது.

 

இத்தனை முயற்சிகளுக்குப் பின்னும் உங்கள் குழந்தையின் தலை உருண்டையான வடிவத்தைப் பெறவில்லை என்றால், அதற்கெனப் பிரத்யேகமான தலை கவசம் கிடைக்கின்றது. இதனை நீங்கள் 6 மாதம் முதல் 8 மாதமான குழந்தைக்கு அணிவித்து, அவன் தலையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வடிவத்தைச் சீர் படுத்த முயற்சிக்கலாம். மேலும் இந்தத் தலை கவசம், குழந்தையின் தலைக்கு ஒரே பக்கத்திலிருந்து ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

 

எப்போதும் உங்கள் குழந்தையைச் சரியான நிலையில் தூக்க முயற்சி செய்யுங்கள். இதனால், அவன் கழுத்துக்கு பிடிப்பு ஏற்படுவதோடு தலை பகுதியிலும் அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்

 

உங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் அல்லது மருத்துவர்களிடம் நீங்கள் எப்படி உருண்டையான தலையைப் பெறுவது என்று ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் சில செயல் முறை பயிற்சிகளை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். அதனை பக்குவமாகப் பின்பற்றி நீங்கள் எதிர்பார்க்கும் அழகான தலை வடிவத்தை உங்கள் குழந்தைக்குப் பெறலாம்.

 

 

Read Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null